ஊதிய உயர்வு கோரி, பள்ளி கல்வித்துறை தலைமை அலுவலகமான, டி.பி.ஐ., வளாகத்தில், இரண்டு சங்கங்கள் காலவரையற்ற உண்ணாவிரதம், முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. தமிழக பள்ளிகளில், 2012ல், இரவு காவலர்களாக, 2,000 பேர்; துப்புரவாளர்களாக, 3,000 பேர் தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்டனர். இரவு காவலர்கள், 14 ஆயிரம் ரூபாய் காலமுறை ஊதியத்துக்கு மாற்றப்பட்டனர். ஆனால், துப்புரவு பணியாளர்களுக்கு, 3,500 ரூபாய் தொகுப்பூதியம் மட்டுமே வழங்கப்படுகிறது.'தங்களுக்கும் கால முறை ஊதியம் வேண்டும்' என, பள்ளிக்கல்வி துப்புரவு பணியாளர்கள், பள்ளிக்கல்வி இயக்குனர் அலுவலகம் உள்ள, டி.பி.ஐ., வளாகத்தில் தொடர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஆசிரியர்கள் போராட்டம்: அதேபோல, ஆறாவது ஊதியக்குழு பரிந்துரைப்படி, ஊதிய முரண்பாடுகளை களையக் கோரி, பதிவு மூப்பு இடைநிலை ஆசிரியர்கள் சங்கத்தினரும், டி.பி.ஐ., வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
'பாரபட்சத்தை நீக்க வேண்டும்': கோரிக்கை குறித்து, பதிவு மூப்பு இடைநிலை ஆசிரியர்கள் சங்க பொதுச் செயலர் ராபர்ட் கூறியதாவது:அரசு தொடக்கப் பள்ளிகளில், 5ம் வகுப்பு வரை பாடம் நடத்தும் இடைநிலை ஆசிரியர்களாக, 2009ல், 21 ஆயிரம் பேர் நியமிக்கப்பட்டனர். எங்களுக்கு காலமுறை ஊதியத்தில், 5,200 ரூபாய் அடிப்படை ஊதியமாக வழங்கப்பட்டது.
எங்களுக்கு ஒரு நாள் முன்னதாக நியமனம் ஆனவர்களுக்கு, எங்களை விட, 3,000 ரூபாய் அதிகமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இரு தரப்பினரும், ஒரே கல்வித் தகுதியில் ஒரே விதமான பணிகளையே செய்கிறோம். எனவே, இந்த பாரபட்சத்தை நீக்க நடவடிக்கை எடுக்கும் வரை, போராட்டத்தை நிறுத்த மாட்டோம்.இவ்வாறு அவர் கூறினார்.
ஜாக்டோ போராட்டம் 3 மாதம் ஒத்திவைப்பு: பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் ரத்து உட்பட, 15 அம்ச கோரிக்கைகளுக்காக, ஜாக்டோ ஆசிரியர் சங்க கூட்டுக்குழு, பல போராட்டங்களை நடத்தியது. இந்த கோரிக்கைகள் குறித்து, தமிழக அரசு எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. ஜாக்டோவும், அரசு ஊழியர்கள் போல் தீவிர போராட்டங்களை நடத்தவில்லை.
இந்நிலையில், ஜாக்டோ அமைப்பின் உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் கூட்டம், நேற்று திருச்சியில் நடந்தது. கூட்டத்தில் பங்கேற்ற, பல சங்க நிர்வாகிகள் போராட்டங்களை தொடர விரும்பவில்லை. அதனால், ஜாக்டோ அமைப்பின் சார்பில், பிப்., 25ல், கோட்டை நோக்கி பேரணி; 26ல், 'ஸ்டிரைக்' ஆகிய போராட்டங்கள் விலக்கிக் கொள்ளப்பட்டன.
சட்டசபையில், 110வது விதியின் கீழ், முதல்வர் வெளியிட்ட அறிவிப்பின்படி, ஒரே அரசாணையில் இந்த இரண்டு பணியிடங்களும் நிரப்பப்பட்டன. ஆனால், ஊதியத்தை மட்டும் பாரபட்சமாக கொடுக்கின்றனர். துப்புரவு பணியாளர்களுக்கும் கால முறை ஊதியம் வழங்க வேண்டும்.
No comments:
Post a Comment