போலி சான்றிதழ் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க, அண்ணா பல்கலையில் நேரடி சான்றிதழ் சரிபார்ப்பு வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மட்டுமின்றி, நாடு முழுவதும் பல இடங்களில் போலி சான்றிதழ் பிரச்னைகள் உருவெடுத்து உள்ளன. அரசு வேலை, மேற்படிப்பு, தனியார் நிறுவனத்தில் பணிக்கு சேர்வது, பாஸ்போர்ட் எடுத்தல், சொத்து பிரச்னைகளை தீர்த்தல், வாரிசு சான்றிதழ், ஜாதி சான்றிதழ் பெறுதல், நீதிமன்ற வழக்குகள், பள்ளிகளில் குழந்தைகளை சேர்த்தல் உள்ளிட்ட பல பணிகளுக்கு, கல்விச்சான்று தேவைப்படுகிறது.
இதில், உண்மையில் படித்தோருக்கு எந்த பிரச்னையும் இல்லை. ஆனால், பலர் சுயநலனுக்காக போலி சான்றிதழ் தயாரித்து முறைகேடாக, பாஸ்போர்ட் எடுத்தல் மற்றும் வேலையில் சேருதல் போன்ற முறைகேடு களில் ஈடுபடுவதாக புகார்கள் வந்தன. இதைத் தடுக்க, அரசு மற்றும் தனியார் நிறுவனங்களிடம், பணிகளுக்கு வருவோரின் சான்றிதழ்கள் உண்மையானதா என, பார்க்கும் தொழில்நுட்ப வசதிகளும் இல்லாததால், போலி சான்றிதழ் பிரச்னைக்கு தீர்வே இல்லாமல் இருந்தது.
இந்நிலையில், போலி சான்றிதழ் பிரச்னைக்கு முடிவு கட்ட முன்னோடி முயற்சியாக, அண்ணா பல்கலை புதிய திட்டத்தை அமல்படுத்தி உள்ளது. இதன்படி, தனியார், அரசு நிறுவனங்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என, யார் வேண்டுமானாலும், பி.இ., - பி.டெக்., - எம்.இ., - எம்.டெக்., போன்ற பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்புகளுக்கு சான்றிதழ்களை சரிபார்க்கலாம்.
இந்த வசதி, அண்ணா பல்கலையின் https://www.annauniv.edu இணையதளத்தில் இணைக்கப்பட்டுள்ளது.
ரூ.900 கட்டணம்
சரிபார்க்க வேண்டிய சான்றிதழின் நகல், பிறந்த தேதி, பதிவு எண், மொபைல் எண் போன்றவற்றை ஆன்லைனில் அளித்தால், சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு, ஆன்லைனிலும், வீட்டு முகவரிக்கும் சரிபார்க்கப்பட்ட சான்றிதழ் வழங்கப்படும்.
சிவப்பு, நீலம் மற்றும் பச்சை என, சரிபார்ப்பு சான்றிதழ்கள் மூன்று வகையாக வழங்கப்படும். டிகிரி சான்றிதழ் மற்றும் தற்காலிக புரவிஷனல் சான்றிதழை சரிபார்க்க, 900 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்
No comments:
Post a Comment