புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்வது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மத்திய அரசு ஊழியர்கள் ஏப்., 11 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் மேற்கொள்கின்றனர்.
இது தொடர்பாக, மத்திய அரசு ஊழியர்கள் சங்க கூட்டு போராட்ட குழு, ஆலோசனை கூட்டம் டில்லியில் நடந்தது. இதில், 'ஏப்., 11 முதல் நாடு முழுவதும் காலவரையற்ற வேலை நிறுத்தம் மேற்கொள்வது, மார்ச், 11ல் அதற்கான நோட்டீஸ் கொடுப்பது' என, முடிவு செய்யப்பட்டது. அதேசமயம், வேலை நிறுத்தம் தொடர்பாக ஊழியர்களின் கருத்தை அறிய, ரகசிய வாக்கெடுப்பு நடத்த உள்ளனர். நாடு முழுவதும் ரயில்வே ஊழியர்களிடம் நாளை (பிப்.,11) முதல் முதல், 13ம் தேதி வரை இந்த வாக்கெடுப்பு நடக்கிறது.
கோரிக்கைகள் என்ன
விலைவாசி அடிப்படையில் குறைந்தபட்ச ஊதியம் 26 ஆயிரம் ரூபாய் நிர்ணயிக்க வேண்டும். ஆண்டு ஊக்கத்தொகை, ஐந்து சதவீதமாக உயர்த்த வேண்டும். ஒவ்வொரு பதவி உயர்வுக்கும், இரண்டு ஊக்கத்தொகைகளை வழங்க வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். அனைத்து பிரிவு சூப்பர்வைசர்களுக்கும், 5,400 ரூபாய், 'கிரேடு' சம்பளத்திற்கு இணையான புதிய சம்பளம் வழங்க வேண்டும்.
No comments:
Post a Comment