தேசிய மக்கள் தொகை பதிவேட் டில் ஆதார் கார்டு எண்களை இணைக்கும் பணியில் ஆசிரியர் களை ஈடுபடுத்த தடை கோரிய வழக்கில் தீர்ப்பு அளிப்பதை உயர் நீதிமன்றம் தள்ளிவைத்தது. தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் நிர்வாகி பாலசந்தர் உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு விவரம்:
தேசிய மக்கள் தொகை பதிவேட்டில் ஆதார் கார்டு எண்களை இணைக்கும் பணியில் ஆசிரியர் கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அனைவருக்கும் கல்வி திட்டத்தில் ஆசிரியர்களை கல்வி அல்லாத பணிகளில் ஈடுபடுத்தக்கூடாது எனக் கூறப்பட்டுள்ளது. அதையும் மீறி இப்பணியில் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். இந்தப் பணி பிப்ரவரி 29-ம் தேதி வரை நடக்கவிருக்கிறது.
தமிழகத்தில் வெள்ள பாதிப் பால் பள்ளிகளுக்கு அதிக நாள்கள் விடுமுறை விடப்பட்டதால் மாண வர்கள் கல்வி கற்க போதிய நேரம் இல்லாமல் பாதிக்கப்பட்டுள் ளனர். இந்தச் சூழலில் ஆசிரியர் களை ஆதார் கார்டு எண் இணைப்பு பணியில் ஈடுபடச் செய்தால் மாண வர்கள் மேலும் பாதிக்கப்படுவர். எனவே, ஆதார் கார்டு இணைப்பு பணியில் ஆசிரியர்களை ஈடுபடுத்த தடை விதிக்க வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சி.டி.செல்வம் ஆகி யோர் அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் வழக்கறிஞர் லஜபதிராய் வாதிடும் போது, பள்ளி நேரத்தில் ஆசிரி யர்கள் இப்பணியில் ஈடுபடுத்தப் படுகின்றனர். மக்கள்தொகை கணக்கெடுப்பு, வெள்ள பாதிப்பு மற்றும் தேர்தல் பணிகளில் மட்டுமே ஆசிரியர்களை ஈடுபடுத்த வேண்டும் என விதிகளில் சொல் லப்பட்டுள்ளது. இதைத் தவிர வேறு பணிகளில் ஆசிரியர்களை ஈடுபடுத்தக்கூடாது. இப்பணியால் மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கும் பணி பாதிக்கப்படுகிறது என்றார்.
மத்திய அரசு சார்பில் ஆஜராக உதவி சொலிசிட்டர் ஜெனரல் ஜி.ஆர்.சுவாமிநாதன், குடிமக்கள் சட்டத்தின் அடிப்படையில் இப் பணியில் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். இப்பணி மக்கள் தொகை கணக்கெடுப்பின் ஒரு தொடர்ச்சிதான் என்றார்.
அரசு வழக்கறிஞர் பாஸ்கர பாண்டியன் வாதிடும்போது, பள்ளி நேரத்தில் ஆதார் கார்டு இணைப்பு பணியில் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படவில்லை. பள்ளி நேரம் முடிந்த பிறகும், விடு முறை நாள்களிலும்தான் ஆசிரி யர்கள் இப்பணியில் ஈடுபடுகின் றனர். இந்தப் பணிக்காக ஆசிரி யர்களுக்கு தனி ஊதியம் வழங்கப்படுகிறது என்றார். இதை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், வழக்கில் தீர்ப்பு அளிப்பதை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர்.
No comments:
Post a Comment