தமிழக சட்டப்பேரவையின் வழக்கமான மரபை பின்பற்றி புதிய அறிவிப்புகள் எதையும் அரசு மேற்கொள்ளவில்லை என்று நிதித் துறை அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் கூறினார். தமிழக அரசின் இடைக்கால நிதி நிலை அறிக்கையை இன்று தாக்கல் செய்த ஓ. பன்னீர்செல்வம், இடைக்கால நிதிநிலை அறிக்கையில் புதிய அறிவிப்புகள் வெளியிடப்படாது என்ற பேரவையின் வழக்கமான மரவை பின்பற்றி, அதிமுக தலைமையிலான அரசு புதிய அறிவிப்புகள் எதையும் மேற்கொள்ளவில்லை.
இடைக்கால நிதிநிலை அறிக்கைக்கு ரூ.60,610 கோடி உத்தேசமாக ஒதுக்கப்பட்டுள்ளது.
பொது விநியோகத் திட்ட மானியத்துக்கு ரூ.5,500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மாற்றித்திறனாளி உள்ள குடும்பத்தினருக்கு வருமான வரம்பின்றி இலவச மருத்துவக் காப்பீடு வழங்கப்படும்.
No comments:
Post a Comment