தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட், சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. நிதித் துறை அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டில் வரும் நிதியாண்டுக்கான வரவு, செலவு கணக்கு, கடன்தொகை பற்றிய விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில்,
2016-17ம் நிதியாண்டில், அரசின் வருவாய் ரூ.1.52 லட்சம் கோடி ரூபாய் என கணக்கிடப்பட்டுள்ளது.
2016-17ம் நிதியாண்டில், அரசின் செலவு 1.61 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
வரும் நிதியாண்டில் தமிழக அரசிகுக்கு நிதிப் பற்றாக்குறை 9 ஆயிரம் கோடி ரூபாயாக இருக்கும் என கணிப்பு.
2016-17ம் நிதியாண்டில் தமிழக அரசின் கடன் தொகை மட்டும் ரூ.2,47,031 கோடியாக உள்ளது.
No comments:
Post a Comment