நாகை வேளாண்மை இணை இயக்குனர் அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரிந்த தோழர் ஏ.அமுதா. 2003 போராட்டத்தின்போது பணிக்கு வந்த தற்காலிக இளநிலை உதவியாளர். CPS திட்டத்தில் உள்ள இவர் நேற்று துவங்கியுள்ள அரசு ஊழியர் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றார். அரசின் போக்கால் ஏற்பட்ட மன அலுத்தத்தின் விளைவாக நெஞ்சுவலி வந்து தஞ்சாவூரில் உள்ள மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார்.
"2003 போராட்டம் போல் அரசு அடக்குமுறையை கையாலுமோ, ஓய்வூதியமே இல்லாமல் போய்விடுமோ" என அங்கும் புலம்பியபடியே இருந்த இவர் இன்று (11.02.16) மதியம் மாரடைப்பால் அகால மரமடைந்தார். புதிய ஓய்வூதியத் திட்டத்தில் உள்ள பலருக்கு வரும் மன அழுத்தம் இவருக்கும் வந்துள்ளது.
"இவர் புதிய ஓய்வூதியத் திட்டத்தில் செலத்திய தொகை, அரசு செலுத்த வேண்டிய தொகை உள்ளிட்ட எதுவும் கிடைத்திட இன்றைய சூழலில் வாய்ப்பில்லை. எனவே இவரின் மரணத்திற்கு காரணமான அரசு உடன் பத்து லட்ச ரூபாய் நிதியுதவியும், இவர் வாரிசுக்கு உடன் அரசு வேலையும் வழங்க வேண்டும். மேலும் பல அரசு ஊழியர் பழியாவதற்கு முன்னால் அரசு ஊழியரின் கோரிக்கைகளை நிறைவேற்றி வேலை நிறுத்தத்தை முடிவிற்கு கொண்டுவர வேண்டும்"
-மாவட்ட நிர்வாகிகள்,
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம்,
நாகப்பட்டினம்.
No comments:
Post a Comment