கோரிக்கைகள் தொடர்பாக நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக சத்துணவு ஊழியர்கள் சங்கங்கள் தெரிவித்துள்ளன. இதுகுறித்த விவரம்: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் சத்துணவு ஊழியர்கள் புதன்கிழமை முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, தமிழக அரசு ஊழியர்கள் சங்கம், தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கம், தமிழக எம்ஜிஆர் சத்துணவு பணியாளர்கள் சங்கம், ஒருங்கிணைந்த சத்துணவு பணியாளர்கள் பேரவை, சத்துணவு ஊழியர்கள் ஒன்றியங்கள் உள்ளிட்ட 12 சங்கங்களும் ஒரே விதமான கோரிக்கைகளை முன்வைத்தன. இந்த நிலையில், சத்துணவு ஊழியர்சங்க நிர்வாகிகளுடன் அரசு சார்பில் பேச்சுவார்த்தை நடத்த, அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், வைத்தியலிங்கம், எடப்பாடி பழனிச்சாமி, பழனியப்பன், பா.வளர்மதி ஆகியோர் தலைமையில் வியாழக்கிழமை பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இதுகுறித்து சத்துணவு ஊழியர்கள் சங்கங்கள் பிரதிநிதிகள் கூறியதாவது: ஊழியர்களின் கோரிக்கைகள் முதல்வர் கவனத்துக்குக் கொண்டு செல்லப்படும் என்று அமைச்சர்கள் உறுதியளித்துள்ளனர். இதனால் சத்துணவு ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டம் தாற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது என்றனர்.
No comments:
Post a Comment