தமிழக அரசு ஜாக்டோ அமைப்புடன் நடத்திய பேச்சு வார்த்தை யில் தெரிவித்த படி பட்ஜெட்டில் கோரிக்கைகளை நிறைவேற்றாதது ஏமாற்றமளிக்கிறது.
பட்ஜெட் அறிவிப்பிற்குப் பின் முதல்வர் 110 விதியின் கீழ் அறிவிப்பு வெளியிடலாம் என எதிர்பார்ப்பு உள்ளது.
அறிவிப்பு இல்லையேல்
18.02.2016 அன்று காலை 10.00 மனிக்கு ஜாக்டோ பொதுக்குழு சென்னையில் உள்ள தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில அலுவலகமான JSR மாளிகையில் கூடுகின்றது
அன்று நடைபெறும் ஜாக்டோ உயர்மட்டக்குழு கூட்டத்தில் தொடர் வேலை நிறுத்தப் போராட்டம் அறிவிக்க வலியுறுத்துவோம்.
ஆசிரியர்களின் , அரசு ஊழியர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் கைவிடல் மற்றும் இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை களைதல் போன்ற கோரிக்கைகளில் சமரசம் என்பதே கிடையாது.
ஜாக்டோ போராட்ட அறிவிப்பு செய்யாவிட்டால்
தோழமை இயக்கங்களுடன் இணைந்து தொடர் வேலை நிறுத்த போராட்டத்தையும் ,
தேர்தல் பணிகளை புறக்கணிக்கும் போராட்டத்தையும்
அறிவிப்போம்.
ஜாக்டோவின் ஒன்றுபட்ட போராட்டமே அரசின் ஒட்டு மொத்த கவனத்தை ஈர்க்கும் என்பதை அனைவரும் அறிவோம் ஆதலால் ஜாக்டோவை காலவரையற்ற போராட்ட அறிவிப்பை அறிவிக்க தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தோழமை அமைப்புகளுடன் இணைந்து அழுத்தம் கொடுக்கும் என்பதை தெரிவித்து கொள்கிறோம் .
இரா.தாஸ், பொதுச்செயலாளர்
தழிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி
No comments:
Post a Comment