பிளஸ் 2, 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவியருக்காக, சிறப்பு கூட்டு வழிபாடு, சைதாப்பேட்டையில், வரும் 21ம் தேதி நடக்கிறது. சிறுவாபுரி முருகன் புகழ்பாடும் அண்ணாமலையார் ஆன்மிக குழு சார்பில், சைதாப்பேட்டை காரணீஸ்வரர் கோவிலில், கூட்டு வழிபாடு நடக்கிறது. வரும், 21ம் தேதி காலை, 7:00 மணிக்கு, யோகசனத்துடன் வழிபாடு துவங்கும்.
கட்டணம் கிடையாது:
கோவிலின் தலைமை குரு, கல்யாணசுந்தரம் தலைமையில், சிவாச்சாரியர்கள் வேதமந்திரங்கள் சொல்லி, கோவில் அலங்கார மண்டபத்தில் சிறப்பு வழிபாடு நடத்துகின்றனர். பின், மாணவர்களுக்கு காப்பு கயிறு மற்றும் பரீட்சைக்காக எழுதுபொருட்கள் வழங்கப்படுகின்றன.
அதற்கு, எந்த கட்டணமும் கிடையாது. ஆனால், 14ம் தேதி மாலை, 3:00 - 7:00 மணிக்குள், முன்பதிவு செய்து, டோக்கன் பெறுபவர்கள் மட்டுமே பங்கேற்க முடியும். பரிசுகள் உண்டு:கடந்தாண்டு நடந்த வழிபாட்டில் பங்கேற்று, அதிக மதிப்பெண் பெற்ற, மாணவ, மாணவியருக்கு பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்படுகின்றனர்.
இதில், சேவையாற்ற விரும்புவோர் வரவேற்கப்படுகின்றனர். மேலும் விவரங்களுக்கு, 044-24712173, 9944309719 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
No comments:
Post a Comment