தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி விட்டது. தேர்தல் ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது.வழக்கமாக சட்டமன்ற தேர்தலுக்கான செலவு தொகையை மத்திய அரசு வழங்கும். பாராளுமன்ற தேர்தல் செலவுகளை மத்திய அரசும் மாநில அரசும் பகிர்ந்து கொள்ளும்.கடந்த 2011 சட்டமன்ற தேர்தலின் போது தேர்தல் ஆணையத்துக்கு ரூ. 148 கோடி செலவானது. இந்த தேர்தலுக்கு 35 சதவீதம் செலவு தொகை அதிகரித்துள்ளது.
அதாவது ரூ. 198 கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.இதில் 80 சதவீதம் தேர்தல் பணி அலுவலர்களுக்கு சம்பளமாக வழங்கப்படுகிறது. கடந்த தேர்தலை விட தேர்தல் பணி அலுவலர்களுக்கு வழங்கப்படும் ‘படி’ மற்றும் போக்குவரத்து போலீஸ் செலவுகள் அதிகரித்துள்ளது.அடுத்ததாக வீடியோ எடுத்தல், ஓட்டுப்பதிவை வெப் காமிரா மூலம் கண்காணித்தல் மற்றும் வாக்கு எண்ணுவது தொடர்பான செலவு அதிகம்.கடந்த தேர்தலில் பணியாளர்களுக்கு ரூ. 82 கோடி சம்பளமாக வழங்கப்பட்டது. இந்த தேர்தலில் தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்கள் எண்ணிக்கை கூடுதலாக 2 ஆயிரம் பேர் வரை ஆகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.கடந்த பாராளுமன்ற தேர்தலுக்கு ரூ. 3 ஆயிரத்து 500 கோடி செலவிடப்பட்டுள்ளது. இது 2009 தேர்தலை விட 150 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.2009 தேர்தலில் 1400 கோடி தான் செலவிடப்பட்டது. அதிகரித்து வரும் பணியாளர்கள் எண்ணிக்கை, பாதுகாப்பு, இதர செலவினங்கள் காரணமாக தேர்தலுக்கு தேர்தல் செலவு பல மடங்கு அதிகரித்து வருகிறது.
No comments:
Post a Comment