சிவகங்கை அருகே அலங்கம் பட்டியில் தன்னார்வ நிறுவனம் நடத்திய பள்ளி, நிதி நெருக்கடியால் மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. அரசுப்பள்ளியாக மாற்ற கல்வித்துறை அதிகாரிகள் ஆர்வம் காட்டாமல் இழுத்தடிக்கின்றனர். மேலப்பூங்குடி ஊராட்சி அலங்கம்பட்டியில் 'அசேபா' என்ற தன்னார்வ நிறுவனம் சார்பில் 30 ஆண்டுகளுக்கு முன் துவக்கப்பள்ளி துவக்கப்பட்டது.
நிதி நெருக்கடியால், மூன்று ஆண்டுகளுக்கு முன் பள்ளியை மூட அந்நிறுவனம் முடிவு செய்தது.குழந்தைகளை வேறு பள்ளிக்கு அனுப்ப மனமில்லாத கிராமத்தினர், தொடர்ந்து பள்ளியை நடத்த முடிவு எடுத்தனர். தற்போது நல்லநிலையில் உள்ள இப்பள்ளி யின் முன்னாள் மாணவர்களிடம் நன்கொடை வசூலித் தும், கிராமம் சார்பில் நிதி வசூலித்தும் பள்ளியை நடத்தி வருகின்றனர். தற்போது 25க்கும் மேற்பட்ட மாணவர்கள், தற்காலிக ஆசிரியைகள் இருவர், சத்துணவு அமைப்பாளர்,
சமையலர் ஆகியோர் உள்ளனர். தொடர்ந்து பள்ளியை நடத்த முடியாத நிலையில், அரசுப்பள்ளியாக மாற்ற கிராமத்தினர் முயற்சித்தனர்.
தொடக்கக் கல்வித் துறையை அணுகிய போது, 'பள்ளி செயல்படும் இடம், பொருட்களை தொடக்கக் கல்வி அலுவலர் பெயருக்கு பத்திரம் பதிந்து தரவேண்டும்' என கூறப்
பட்டது.'தொடக்கக் கல்வி இயக்குனரகம் வரை போராடியும் இதுவரை நல்ல பதில் கிடைக்கவில்லை' என்கின்றனர், கிராமத்தை சேர்ந்த அழகர்சாமி, ராமன்.அவர்கள் மேலும் கூறியதாவது: எத்தனையோ அரசு பள்ளிகளை மாணவர் சேர்க்கை இன்றி மூடுகின்றனர். மூன்று ஆண்டாக கிராமத்தின் சார்பில் பள்ளியை நடத்துகிறோம். தனியார் பள்ளிகளில் சேர்க்க வழி இல்லை. அருகே 4 கி.மீ.,ல் உள்ள பள்ளிக்கு
அனுப்புவதிலும் சிக்கல் உள்ளது. ஆசிரியைகள் ரூ.3,௦௦௦ சம்பளம் பெற்று சேவை மனதுடன் பணிபுரிகின்றனர். சத்துணவு, இலவச புத்தகம், சீருடை வழங்கப்படுகிறது. அரசுப்பள்ளியாக மாற்றும் நடைமுறையை கூறாமல் அதிகாரிகள் அலையவிடுகின்றனர், என்றனர்.கல்வித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, 'அலங்கம்பட்டி தனியார் பள்ளியை ஆய்வு செய்ய
உத்தரவு வந்துள்ளது. ஆய்விற்கு பின், அரசுப் பள்ளியாக மாற்றுவது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.
No comments:
Post a Comment