''நடப்பு நிதியாண்டில், பி.எப்., எனப்படும், வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி வீதம், 8.75 சதவீதத்தில் இருந்து, 8.8 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது,'' என, மத்திய தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா தெரிவித்தார். மத்திய தொழிலாளர் நலம் மற்றும் வேலை வாய்ப்பு அமைச்சக கட்டுப்பாட்டில், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் இயங்கி வருகிறது. இதன், மத்திய அறங்காவலர் குழுமத்தின், 211வது கூட்டம், சென்னையில் நேற்று நடந்தது.
கூட்டத்திற்கு இதை தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் துறை செயலர் சங்கர் அகர்வால், வருங்கால வைப்பு நிதி கமிஷனர் சமாரியா பங்கேற்றனர்.
No comments:
Post a Comment