அரசு தரப்பில் சாதகமான பதில் இல்லாததால், இன்று (பிப்., 12) முதல் தொடர் மறியலில் ஈடுபட தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது. மதுரையில் சங்க மாநில செயலாளர் செல்வம் கூறியதாவது: முதல்வர் ஜெயலலிதா கடந்த சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., அறிக்கையில் கூறியவாறு புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். இதுபோன்ற 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஊழியர்கள் போராடி வருகின்றனர்.
பிப்., 9ல் சங்க நிர்வாகிகளிடம் பேசிய அமைச்சர்கள், முதல் வரிடம் தெரிவித்து நிறைவேற்றுவதாக தெரிவித்தனர். இதுவரை சாதகமான பதில் இல்லை. இன்று அரசு ஊழியர்கள் மறியலில் ஈடுபடுகின்றனர். நாளையும், நாளை மறு நாளும்(பிப்., 13, 14ல் போராட்ட எழுச்சிக் கூட்டங்கள் நடத்தப்படும். பிப்., 15ல் தொடர் மறியல் நடத்தப்படும். கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும், என்றார்.
No comments:
Post a Comment