இன்ஜி., மற்றும் தொழில்நுட்ப படிப்புகளுக்கு, திறந்த நிலை மற்றும் தொலைநிலை கல்வியில் வகுப்புகள் நடத்த, பல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி., தடை விதித்துள்ளது. கல்லுாரிகளில், நேரடியாக முழு நேர படிப்பில் சேர்ந்து படிக்க முடியாதவர்கள், தொலை நிலை கல்வியில் சேர்ந்து படிக்கலாம்; கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் பட்டப் படிப்புகள், டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்பு படிக்கலாம்.
அதே நேரம், பல பல்கலை மற்றும் தனியார் கல்லுாரிகள், இன்ஜி., மற்றும் தொழில்நுட்ப படிப்புகளை, தொலைநிலை கல்வியில் அறிமுகம் செய்வதாக, அறிவித்துள்ளன. இதையடுத்து, யு.ஜி.சி., செயலர் ஜஸ்பால் சந்து, புதிய எச்சரிக்கையை வெளியிட்டு உள்ளார்.
அதில், இன்ஜி., மற்றும் தொழில்நுட்ப பாடங்களில், டிப்ளமோ, பட்டம் மற்றும் பட்ட மேற்படிப்பு படிப்புகளை, தொலைநிலை மற்றும் திறந்த நிலை படிப்பில் நடத்த அனுமதியில்லை; அதுபோல, &'ஆன்லைன்&' படிப்புகள் நடத்தவும் அனுமதி தரப்படவில்லை.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
காப்பியை தடுக்கதேர்வறைகளில் ஜாமர்:
பல்கலை மற்றும் கல்லுாரிகளில் தேர்வு நேரத்தின் போது, ப்ளூ டூத் போன்ற அலைவரிசை சாதனங்கள் மூலம், மாணவர்கள் காப்பியடிப்பதை தடுக்க, தேர்வு அறைகளில், ஜாமர் கருவி பொருத்த, யு.ஜி.சி., உத்தரவிட்டுள்ளது. சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள், மத்திய அரசு அனுமதித்த நிறுவனங்களிடம், தேர்வு நாளில் மட்டும், ஜாமர் கருவிகளை வாடகைக்கு பெறலாம் என்றும், யு.ஜி.சி., அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment