Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Tuesday, February 9, 2016

    ஜாக்டோ பேச்சுவார்த்தை முழு விவரம்; தமிழ்நாடுஆசிரியர் கூட்டணி பொது செயலர் செ.முத்துசாமி அவர்களின் அறிக்கை

    இன்று மாலை 5.50 மணியளவில் தமிழக அரசின் தலைமைச்செயலாளர் அறையில் ஜாக்டோ குழுவினருடனான பேச்சு வார்த்தை தொடங்கியது.அரசு தரப்பில் நிதித்துறை அமைச்சர் திரு ஓ.பன்னிர் செல்வம் அவர்கள் தலைமையில், கல்வி அமைச்சர், உயர்கல்வித்துறை அமைச்சர், மின்சாரத்துறை அமைச்சர் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் ஆகியோர் கலந்துகொண்டனர். மேலும் கல்வித்துறை செயலர், நிதித்துறை செயலர் மற்றும் பள்ளிக்கல்வி இயக்குனர், தொடக்கக்கல்வி இயக்குனர் ஆகியோரும் கலந்துகொண்டனர். ஜாக்டோ தரப்பில் உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் 21 பேர் கலந்துகொண்டனர்.

    ஜாக்டோ தரப்பில் 15 அம்சக்கோரிக்கைகளை,ஓவ்வோரு கோரிக்கையாக ஓவ்வோரு சங்க பிரதிநிதிகள் தெளிவாக எடுத்துக் கூறினர். அப்போது கல்வித்துறை செயலர் அவற்றை கவனமாக குறிப்பெடுத்துக்கொண்டார். அதேசமயம் முக்கிய கோரிக்கைகளை நிதியமைச்சர் அவர்களும் தனது குறிப்பேட்டில் குறிப்பெடுத்துக்கொண்டார். தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலராகிய நான் கோரிக்கையை விளக்கி பேசும் போது தலைமைச்செயலர் ஏன் இப்பேச்சு வார்த்தையில் கலந்துகொள்ளவில்லை என்று கேள்வி எழுப்பி, ஏன் எனில் அவர் ஏற்கனவே கல்வித்துறை மற்றும் நிதித்துறை செயலராக இருந்தவர் என்றும் தற்போது அரசின் முதன்மை செயலராக இருப்பதால் பங்கெடுக்காதது குறித்து கவலையாக உள்ளதாகவும் கூறினேன் . 

    அதற்கு அரசு தரப்பில் அவர் முக்கிய வேலையாக சென்றிருப்பதால் கலந்துகொள்ள இயலவில்லை என தெரிவிக்கப்பட்டது. அமைச்சர் பெருமக்கள் அனைத்து கோரிக்கைகளையும் கவனமாக சுமார் 2 மணி நேரம் கேட்டனர். ஜாக்டோ சார்பில் வைக்கப்படும் கோரிக்கைகளுக்கு முடிவு என்ன என்று கேட்ட போது. நிதியமைச்சர் கல்வி அமைச்சரை பதில் கூறுமாறு அழைத்தார். அதற்கு கல்வி அமைச்சர் நிதியமைச்சரே இக்கூட்டத்திற்கு தலைமை ஏற்றுள்ளதால் அவரையே பதிலளிக்குமாறு கேட்டுக்கொண்டார். 

    நிதியமைச்சர் அவர்கள் தனது பதிலில் தற்போது சட்டமன்றம் கூட உள்ளது. இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.கோரிக்கைகள் முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு 16-ந்தேதி பட்ஜட் அறிக்கையில் நல்ல தகவல் வரும் என நம்பிக்கை வைக்க கேட்டுக்கொண்டார். பிறகு கூட்டத்தில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. கூட்டம் சுமுகமாக முடிந்தது. 
                   
    அரசின் பேச்சு வார்த்தைக்குப் பின்பு  ஜாக்டோ உயர்மட்ட பொறுப்பாளர்கள் கூடி கலந்தாலோசனை செய்தனர். இறுதியில் நிதியமைச்சர் அவர்கள் அளித்த நம்பிக்கையின் அடிப்படையில்  வரும் தமிழக அரசின் சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் 16-ந்தேதி பட்ஜட் அறிவிப்பில் கோரிக்கைகள் ஏற்பு குறித்து அறிவிப்புகளை எதிர்பார்ப்பதாகவும், அவ்வாறு அறிவிப்புகள் இல்லை எனில் ஜாக்டோ உயர்மட்டக்குழுக் கூட்டம் வரும் 17-ந்தேதி கூடி அடுத்தகட்ட நடவடிக்கையை முடிவு செய்யும்  என ஜாக்டோ உயர்மட்டக் குழுவினர் ஒருமனதாக முடிவாற்றி பத்திரிக்கையாளர் மற்றும் ஊடகவியலாளர்கள் மத்தியில் தகவல் தெரிவித்தனர் என தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

    No comments: