தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ், 85 அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் உள்ளன. இவற்றில் உள்ள, 329 இளநிலை பயிற்சி அலுவலர்கள் காலியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்ப, இணையதளம் மூலம் விண்ணப்பம் வரவேற்கப்பட்டது.இதற்கான முதல்நிலை தேர்வு, 21ம் தேதி நடைபெற உள்ளது.
இத்தேர்வுக்கு விண்ணப்பித்தோர், இன்று முதல், www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் தேர்வு நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்யலாம். தேர்வு மையங்கள், அனைத்து மாவட்டங்களிலும் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வு நுழைவுச்சீட்டு உள்ளவர்கள் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர்.
No comments:
Post a Comment