தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் இன்று காலை 11 மணியளவில் துவங்கியது. முதல்வர் ஜெயலலிதாவின் புகழாரத்துடன் நிதித் துறை அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் உரையைத் துவக்கினார். நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து பன்னீர்செல்வம் ஆற்றிய உரையில்,
மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ஆயிரம் கோடி ஒதுக்கீடு
சென்னையில் செயல்படுத்தப்பட்டு வரும் மெட்ரோ ரயில் திட்டத்துக்கு தமிழக நிதிநிலை அறிக்கையில், 1,032 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கால்நடை மருத்துவக் கல்லூரி ஒரத்தநாடு, நெல்லையில் தொடக்கப்படும். பள்ளிக் கல்வித் துறைக்கு 24, 820 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
*****
கச்சத் தீவை மீட்பதே தமிழக மீனவர் பிரச்னைக்கு தீர்வு
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த 2,051 மீனவர்கள் தமிழக அரசின் முயற்சியின் காரணமாக மீட்கப்பட்டுள்ளனர்.
வெள்ள மீட்புப் பணியில் ஈடுபட்ட மீனவர்களுக்கு தமிழக அரசு பாராட்டு தெரிவிக்கிறது.
இலங்கையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
****
வேளாண் துறைக்கு 6,938 கோடி ரூபாய் ஒதுக்கீடு
ஊரக வளர்ச்சித் துறைக்கு 18,500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
5 ஆண்டுகளில் கால்நடை பராமரிப்புத் துறைக்கு அதி முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
ஏழை, விவசாயிகளுக்கு 28 லட்சம் வெள்ளாடுகள், செம்மறியாடுகள் வழங்கப்பட்டுள்ளன.
****
பேரிடர் நிவாரணம்
மழை, வௌள பாதிப்பில் இருந்து தமிழகம் விரைவில் மீண்டது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண உதவி வழங்கப்பட்டுள்ளது.
****
50 லட்சம் கோரிக்கை மனுக்கள் மீது நடவடிக்கை
55 புதிய தாலுக்காக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
காவல்துறையில் 1,038 உதவி ஆய்வாளர்கள் நியமனம்
மாநில நெடுஞ்சாலைத் துறைக்கு ரூ.8,486.26 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
****
அத்திக்கடவு - அவினாசி திட்டம் அறிவிப்பு
அத்திக்கடவு - அவினாசி திட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசுக்கு திருத்திய கருத்துரு அனுப்பப்படும்.
திட்டத்திற்கான ஆரம்பக்கட்ட பணிகள் உடனே தொடங்கப்படும்.
காவல்துறையில் 1,038 உதவி ஆய்வாளர்கள் நியமனம்
***
தமிழகக் காவல்துறைக்கு ரூ.6,099 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தீயணைப்புத் துறைக்கு ரூ.227 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழ் மொழி வளர்ச்சிக்காக ரூ.32.74 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மகாமகம் சிறப்பாக நடைபெற ரூ.135 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
•••
உலக முதலீட்டாளர் மாநாடு வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது.
தமிழக அரசு 60,610 கோடி ரூபாய் இடைக்கால நிதியாக ஒதுக்கீடு செய்துள்ளது.
தமிழகம் 8.01 சதவிகித பொருளாதார வளர்ச்சி அடைந்துள்ளது.
•••
தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் அரிய பணியின் காரணமாக தமிழகம் மின் மிகை மாநிலமாக மாறியுள்ளது.
ஜெயலலிதா எடுத்த தீவிர நடவடிக்கையின் காரணமாக காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு அரசிதழில் வெளியாகியுள்ளது.
ஏராளமான சமூக நலத் திட்டங்கள் நிறைவேறியுள்ளன. மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளது
No comments:
Post a Comment