வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்பட்டிருந்தால், அதனை சேர்ப்பதற்கு காலஅவகாசம் இருப்பதாக தலைமைத் தேர்தல் ஆணையாளர் நஜீம் ஜைதி தெரிவித்தார். தமிழகத்தில் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து, அரசியல் கட்சிகள்-அதிகாரிகளுடன் தனித்தனியே ஆலோசனை நடத்திய அவர், செய்தியாளர்களுக்கு வியாழக்கிழமை அளித்த பேட்டி: மழை-வெள்ளத்தில் வாக்காளர் அடையாள அட்டையை இழந்தோருக்கு இலவசமாக புதிய அட்டை வழங்கப்பட்டு வருகிறது. வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருந்தால் அதுகுறித்து தனிப்பட்ட நபருக்கு தெரிவிக்கப்படும்.
தவறுதலாக பெயர் நீக்கப்பட்டிருந்தால் வாக்காளர்கள் கவலை கொள்ளத் தேவையில்லை. அவர்கள் தங்களது பெயரை புதிதாகச் சேர்க்க விண்ணப்பிக்கலாம். தேர்தலில் வேட்புமனு தாக்கலுக்கு கடைசி 10 தினங்களுக்கு முன்பு வரை பெயர் சேர்ப்புக்கு விண்ணப்பங்களை அளிக்கலாம்.
எனவே, யாருடைய பெயர்கள் எல்லாம் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதோ அவர்கள் பெயர் சேர்ப்பதற்கு புதிதாக வாய்ப்பு வழங்கப்படும். எனவே, பெயர் நீக்கம் செய்யப்பட்டோர் தங்களது பெயரைச் சேர்க்கலாம்.
முதல் முறை வாக்காளர்கள்: தமிழகத்தில் 18 முதல் 19 வயதுக்குட்பட்ட முதல் முறை வாக்காளர்களாக 18 லட்சம் பேர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஆனால், அந்த வயதை உடையவர்கள் 26 லட்சம் பேர் உள்ளனர். எனவே, அவர்களையும் பெயர் சேர்ப்புக்கு தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றார் நஜீம் ஜைதி.
No comments:
Post a Comment