தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லுாரிகளில், மாநில ஒதுக்கீட்டின் கீழ், 1,163 முதுநிலை மருத்துவப் படிப்புகள், 40 முதுநிலை பல் மருத்துவப் படிப்பு இடங்கள் உள்ளன. இதற்கான நுழைவுத்தேர்வு, சென்னையில், ஐந்து கல்லுாரிகளில் நடந்தது. இதற்கு, 11 ஆயிரத்து, 438 பேர் விண்ணப்பித்து இருந்தனர்.
இதில், 411 பேர் தவிர, 11 ஆயிரத்து, 27 பேர் என, 96 சதவீதம் பேர் ஆர்வமுடன் பங்கேற்றனர். இது குறித்து, மருத்துவ மாணவர் சேர்க்கை செயலர் உஷா சதாசிவம் கூறுகையில், ''மூன்று நாட்களில் விடைத்தாள் திருத்தப்பட்டு, 'ரேண்டம்' எண் வெளியிடப்படும்; கலந்தாய்வு தேதி, பின் அறிவிக்கப்படும்,'' என்றார்.
No comments:
Post a Comment