தர்மபுரி மாவட்ட எஸ்.எஸ்.ஏ., சார்பாக, பள்ளி செல்லா மற்றும் கஸ்தூர்பா காந்தி பாலிகா வித்யாலயா உறைவிட பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, இரண்டு நாள் அறிவியல் விழிப்புணர்வு பயிற்சி, தர்மபுரி அரசு கலைக்கல்லூரியில் நேற்று துவங்கியது. பயிற்சியை கல்லூரி முதல்வர் சுந்தரவல்லி துவக்கி வைத்தார்.
தொடர்ந்து, இயற்பியல் குறித்த பயிற்சி பேராசிரியர் ஜெயசீலன் தலைமையிலும், விலங்கியல் பயிற்சி பேராசிரியர் அசோகன், வேதியியல் பயிற்சி பேராசிரியர் வெங்கடாசலம், தாவரவியல் பயிற்சி விஜியா தாமோதரன், மதிப்பீடு பயிற்சி பேராசிரியர் சாரதி ஆகியோர் தலைமையில் நடந்தது.
இன்று செய்முறை தொடர்பான பயிற்சி நடக்கிறது. பயிற்சியில், ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் தமிழ்செல்வன், எஸ்.எஸ்.ஏ., தனிஅலுவலர் சிவராமன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மதுரை வீரன், சீட்ஸ் சரவணன் உட்பட பலர் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment