தேசிய வருவாய் வழி, திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்வுக்கு (என்எம்எம்எஸ்) விண்ணப்பித்துள்ள தேர்வர்களுக்கான "ஹால் டிக்கெட்' வழங்குமாறு பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு தேர்வுத் துறை இயக்குநர் வசுந்திராதேவி உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:
"தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்வு வரும் 27-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்தத் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ள தேர்வர்களுக்கான "ஹால் டிக்கெட்' பள்ளிகளுக்கு ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ளது.
அந்தந்த பள்ளி முதல்வர்கள் மற்றும் தலைமையாசிரியர்கள், www.tndge.in என்ற தேர்வுத் துறை இணையதளம் மூலம் செவ்வாய்க்கிழமை (பிப்.16) முதல் பதிவிறக்கம் செய்து மாணவர்களுக்கு வழங்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment