சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்களின் வேலைநிறுத்தத்தால் பள்ளிகளில் மகளிர் சுயஉதவிக்குழுவினரின் மூலம் மாணவர்களுக்கு சத்துணவு சமைத்து வழங்கப்படுகிறது. புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, பிப்.,10 முதல் அரசு ஊழியர்களின் காலவரையற்ற வேலை நிறுத்தம் நடக்கிறது. இதில் அங்கன்வாடி, சத்துணவு ஊழியர்கள், அமைப்பாளர்கள் பங்கேற்றுள்ளனர். முன்னதாகவே தாங்கள் வேலை செய்யும் மையங்களை பூட்டி, ஆவணங்களை கையோடு எடுத்து சென்றனர்.
இப்போராட்டத்தால் பள்ளி சத்துணவு மற்றும் அங்கன்வாடிகளில் உணவு வழங்கும் பணி தடைபடக்கூடாது என அரசு உத்தரவிட்டிருந்தது. இதனைத்தொடர்ந்து பல இடங்களில் மையங்களின் பூட்டுகள் உடைத்து திறக்கப்பட்டன.
மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள், மகளிர் திட்ட உறுப்பினர்கள், புதுவாழ்வு திட்ட பெண்கள் ஆகியோரின் பெயர் பட்டியல் பெற்று, சமையல் பணிக்கான பெண்களை அதிகாரிகள் தயார் செய்தனர். பள்ளிக்கு இரண்டு அல்லது மூன்று பெண்கள் வீதம் சமையல் பணிக்கு அனுப்பப்படுகின்றனர். இவர்களுக்கு தேவையான பொருட்களை வழங்கி, உணவு தயாரித்து மாணவர்களுக்கு வழங்குகின்றனர். அதற்காக உள்ளாட்சி அமைப்புகள் மூலம் நாள் ஒன்றுக்கு ரூ.100 சம்பளம் வழங்கப்படுகிறது. போராட்டம் முடியும்வரை தொடர்ந்து வேலைக்கு வர அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
No comments:
Post a Comment