1. ஒரு ஆண்டிற்கு 12 நாட்கள் தற்செயல் விடுப்பு வழங்கப்படும். ஒரே நேரத்தில் பத்து நாட்கள் தனியாகவோ, அரசு விடுமுறை அல்லது ஈடு செய்யும் விடுப்பு முதலியவற்றுடன் சேர்த்தோ அனுபவிக்கலாம்.
To get free Education Dept. Updated News & GOs type ON TNKALVII and send to 9870807070 or type ON SATISH_TR and send to 9870807070
Labels
- NEWS
- DIRECTOR PROCEEDINGS
- TET
- ASSN NEWS
- SSA
- COURT NEWS
- EDUCATION DEPT. GOs
- TIP
- TRB
- GO
- TNPSC
- PANEL
- CPS
- SSLC
- RESULTS
- DEE
- VI PC
- HSC
- CCE
- PAY ORDER
- RTI PROCEEDINGS
- DSE
- ANNOUNCEMENTS
- SCERT
- EXPECTED DA
- TNKALVI NEWS
- TETOJAC
- FORMS
- MODEL QNS
- PENSION
- TET QNS
- RMSA
- VII PC
- Dept. Exam
- RTE
- REG ORDER
- IT
- DA
- GK
- EMIS
- UPSC
- CEO VELLORE
- IT 2012-13
- RULE
- ANDROID
- FREE SMS REGISTRATION
- RARE GOs
- RL LIST
- NEP 2016
- NHIS
- SABL
Hot News
JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!
Sunday, March 31, 2013
நாளை சட்டசபை கூட்டம் : மானிய கோரிக்கைகள் மீது விவாதம் ஆரம்பம் ,10ம் தேதி பள்ளி கல்வித்துறை மானிய கோரிக்கை
தமிழக அரசின் 20132014ம் ஆண்டுக்கான பட்ஜெட் கடந்த 21ம் தேதி சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து 25ம் தேதி முதல் 28ம் தேதி வரை 4 நாட்கள் சட்டசபையில் பொது விவாதம் நடந்தது. பட்ஜெட் மீது நடந்த விவாதத்திற்கு நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் 28ம் தேதி பதில் அளித்தார். இதையடுத்து சட்டசபை கூட்டத்தை ஏப்ரல் 1ம் தேதிக்கு சபாநாயகர் தனபால் தள்ளிவைத்தார்.
கல்லூரிகள் திறப்பு எப்போது? கையைப் பிசைகிறது கல்வித்துறை - நாளிதழ் செய்தி
தமிழகம் முழுவதும், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகளை எப்போது திறப்பது என, தெரியாமல், உயர்கல்வித்துறை கையை பிசைந்து வருகிறது. அரசுத் தரப்பில் இருந்து, நேற்று மாலை வரை, உயர்கல்வித் துறைக்கு, எவ்வித தகவலும் தெரிவிக்கப்படவில்லை. இதனால், நாளை கல்லூரிகள் திறப்பதற்கு வாய்ப்பு இல்லை என தெரிகிறது.
உலகசாதனையை முறியடித்த மாற்றுத்திறனாளி மாணவர் : உதவிகளை நாடி காத்திருப்பு
எறும்புக்கும் வாழ்க்கையுள்ள இந்த உலகில் சாதிக்க ... ஊனம் ஒரு தடையே அல்ல... தன்னம்பிக்கையை இழந்தவர்கள் ஜெயிப்பது இல்லை... ஜெயிப்பவர்கள் தன்னம்பிக்கையை இழப்பது இல்லை... பாராலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதலில் தங்கம் வென்ற ஜெர்மனி வீரரின் சாதனையை முறியடித்துள்ளார் சேலத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி வீரர் மாரியப்பன்...
இடைநிலை ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு தேர்வு நிலை, பணிமூப்பு பாதிக்காத வகையில் தொகுப்பூதிய காலத்தை பணிக்காலமாக கணக்கிடப்படுமா? இடைநிலை ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு
தொகுப்பு ஊதியத்தில் பணி புரிந்த காலத்தை நிரந்தரம் செய்யப்பட்ட இடைநிலை, பட்டதாரி, முதுநிலை ஆசிரியர்களின் பணிக்காலமாக கணக்கீட வேண்டும் என்ற கோரிக்கை ஆசிரியர்கள் மத்தியில் வலுவடைந்துள்ளது.
விடைத்தாள் சேதம்: மறுதேர்வு கிடையாது, தமிழ் முதற் தாளில் பெறும் மதிப்பெண்கள், இரண்டாம் தாளுக்கு வழங்கப்பட உள்ளது என தேர்வுத்துறை அறிவிப்பு
"விருத்தாசலத்தில், 10ம் வகுப்பு விடைத்தாள்கள் சேதம் அடைந்த விவகாரத்தில், மறுதேர்வு நடத்தப்பட மாட்டாது. தமிழ் முதற்தாளில், மாணவர்கள் எவ்வளவு மதிப்பெண்கள் பெறுகிறார்களோ, அதே மதிப்பெண்கள், இரண்டாம் தாளுக்கும் வழங்கப்படும்" என, தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.
ஊழியர்கள் பற்றாக்குறை: அரசு தேர்வுத்துறை திணறல்
தேர்வுத் துறையையும், இதனோடு சம்பந்தப்பட்ட அரசு தகவல் தொகுப்பு விவர மையத்தையும் (டேட்டா சென்டர்) வலுப்படுத்த, தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என இரு துறை வட்டாரங்களும் எதிர்பார்க்கின்றன.
கலை அறிவியல் கல்லூரிகளில் இலவச கல்வி: சென்னை பல்கலை அறிவிப்பு
சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள, கலை, அறிவியல் கல்லூரிகளில், இலவசமாக கல்வி கற்க, சென்னை பல்கலைக்கழகம் அழைப்பு விடுத்துள்ளது.
உண்டு உறைவிட பள்ளி மாணவர்களை வேறு பள்ளிக்கு மாற்ற உத்தரவு
தமிழகம் முழுவதும் அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கீழ், செயல்பட்டு வந்த சிறப்பு உண்டு, உறைவிட பள்ளிகளில் பயிலும் மாணவர்களை, வீட்டின் அருகில் உள்ள பள்ளியில் சேர்க்க உத்தரவிடப்பட்டுள்ளது.
விடுதி மாணவர்களுக்கு ஆங்கிலப் பயிற்சி
பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையினர் வகுப்பைச் சேர்ந்த, கல்லூரி மாணவர்களுக்கு, ஆங்கில பேச்சுப் பயிற்சி அளிப்பதற்காக, பயிற்சி நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளன.
Saturday, March 30, 2013
கற்பதைக் கற்கண்டாய் மாற்றிய ஓர் அரசுப் பள்ளி....!

ஐஐடிக்களில் 43% காலியாக உள்ள பேராசிரியர் பணியிடங்கள்
ஐஐடி மற்றும் என்ஐடிக்களில் 40 சதவீதத்துக்கு மேல் பேராசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக மக்களவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாரதியார் பல்கலையில் நாளை பி.எட்., நுழைவுத்தேர்வு
கோயம்பத்தூரில் உள்ள பாரதியார் பல்கலைக்கழகத்தில். பி.எட்., நுழைவுத்தேர்வு நாளை நடைபெறுகிறது.
கல்வி அதிகாரிகள் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை
விருத்தாசலம் அருகே விடைத்தாள்கள் ரயில் தண்டவாளத்தில் கிடந்த விவகாரம் தொடர்பாக அரசு தேர்வுத் துறை இயக்குநர் வசுந்தரா தேவி கூறும்போது, விடைத்தாள்கள் ரயில் தண்டவாளத்தில் கிடந்ததாக எனக்கும் தகவல் கிடைத்துள்ளது.
பதவி உயர்வு பெற்ற பட்டதாரி மற்றும் தமிழ் ஆசிரியர் கழகத்தின் மாநில பொது குழுக் கூட்டம்
பதவி உயர்வு பெற்ற பட்டதாரி மற்றும் தமிழ் ஆசிரியர் கழகத்தின் மாநில பொது குழுக் கூட்டம் வரும் 30.03.2013 சனிக் கிழமை அன்று தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அரசு மகளிர் மேல் நிலைப் பள்ளியில் காலை 9.30 மணி அளவில் நடைபெற உள்ளது.
கல்லூரிகளை உடனே திறக்க மாணவர்கள் கூட்டமைப்பு வேண்டுகோள்
"மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, கல்லூரிகளை உடனடியாக திறக்க வேண்டும்" என, மாணவர்கள் கூட்டமைப்பினர், அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
வினாத்தாள் கண்காணிப்பு குழுவில் மாணவர்கள்
தமிழகத்தில் அரசு பொது தேர்வு வினாத்தாள் கண்காணிப்பு குழுவில், மாணவர்களும் இந்தாண்டு முதல், சேர்க்கப்பட்டுள்ளனர்.
விடைத்தாள் சேதமான விவகாரத்தில் தேர்வுத்துறை மீது தவறில்லை
"விடைத்தாள், ரயில் பாதையில் கிடந்த விவகாரத்தில், தேர்வு துறையின் தவறுகள் எதுவும் இல்லை" என அமைச்சர் வைகை செல்வன் தெரிவித்துள்ளார்.
ரயில் பாதையில் 10ம் வகுப்பு விடைத்தாள் சிதறி கிடந்த அவலம்
பார்சலில் அனுப்பப்பட்ட, 10ம் வகுப்பு தமிழ் இரண்டாம் தாள் விடைத் தாள்கள், ரயில் பாதையில் சிதறிக் கிடந்ததால், விருத்தாசலம் ரயில் நிலையத்தில் பரபரப்பு நிலவியது.
அரிதான நாணயங்கள் கிடைத்தால் உதாசீனப்படுத்தாதீர்
அரிதான நாணயங்கள் ஏதேனும் கிடைத்தால், அதை, தயவு செய்து நாணய ஆராய்ச்சி செய்யும் அறிஞர்களின் கவனத்திற்கு, கொண்டு செல்லுங்கள்.
பொறியியல் மாணவர்களுக்கு இந்திய கலாசார பாடம்: ஏ.ஐ.சி.டி.இ., தகவல்
"தொழிற்கல்வி மாணவர்கள் தங்கள் படிப்புடன், இந்திய வரலாறு, சுதந்திர போராட்டம் உள்ளிட்டவற்றை தெரிந்து கொள்ளும் வகையில், இந்திய கலாசாரம் குறித்த, பாடத்திட்டத்தை சேர்க்க உள்ளோம்" என டில்லி அனைத்திந்திய தொழில்நுட்ப கல்வி குழும தலைவர் மந்தா தெரிவித்தார்.
Friday, March 29, 2013
ஏப்.1ம் தேதி முதல் பிபிஎப், மூத்த குடிமக்கள் சேமிப்புக்கு வட்டி குறைப்பு
வரும் 1ம் தேதி முதல், பிபிஎப் மற்றும் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்துக்கான வட்டி 0.1 சதவீதம் குறைக்கப்படுகிறது என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதுகுறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பு: மார்ச் 25ம் தேதி மத்திய அரசின் தீர்மானத்தின்படி, பிபிஎப் வட்டி விகிதம்
உங்கள் செல்போன் ஒரிஜினல்தானா கண்டுபிடிப்பது எப்படி?
நீங்கள் அதிகம் விலைக்கொடுத்து வாங்கிப் பயன்படுத்தும் செல்போன்கள் அனைத்தும் ஒரிஜினல்தானா என்பதை சோதித்துப் பார்ப்பது தற்போது கட்டாயமாகும்.
ஓய்வூதியம்-ஒரு கனவோ? கானல் நீரோ? விழிப்புணர்வு கருத்தரங்கு காரைக்குடியில் 13.04.13 அன்று நடைபெறும்
சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடியில் 13.04.2013 அன்று புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள அமராவதி ஹாலில் (A/C) காலை 09.00 மணியளவில் "ஓய்வூதியம் - ஒரு கனவோ ? , கானல் நீரோ ?" என்ற தலைப்பில் புதிய தன் பங்கேற்பு ஓய்வூதிய திட்டத்தின் (CPS) பயனற்ற பாதுக்காப்பற்ற தன்மை குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற இருக்கிறது.
இதில் ஓய்வூதிய வரலாறு, பழைய ஓய்வூதியத்தில் உள்ள பலன்கள், புதிய ஓய்வூதிய திட்டத்தின் பயனற்ற தன்மை மற்றும் பழைய ஓய்வூதிய திட்டத்திற்கும் ஏற்பட்டுள்ள ஆபத்து, பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தினை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் நிலை மற்றும் மேற்கொள்ள வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து விரிவாக
கல்லூரிகள் ஏப்.1-ல் திறப்பு இல்லை?: தள்ளிப்போகிறது பல்கலை தேர்வுகள்
அரசிடமிருந்து எந்தவொரு தகவலும் இதுவரை வராததால், கல்லூரிகள் திறப்பது பெரும்பாலும் ஏப்ரல் 1-ம் தேதி இருக்காது என்று பல்கலைக்கழக துணைவேந்தர்களும், உயர் கல்வித் துறை அதிகாரிகளும் தெரிவிக்கின்றனர்.இதன் காரணமாக ஏப்ரல் முதல் வாரத்தில் நடத்தப்பட இருந்த பல்கலைக்கழகத் தேர்வுகள், தள்ளிப்போகும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
தமிழ் தேர்வில் "பிட்": 26 மாணவர்கள் பிடிபட்டனர்
பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, நேற்று நடந்த தமிழ் இரண்டாம் தாள் தேர்வில், "பிட்" அடித்ததாக, 26 மாணவர்கள், பறக்கும் படை குழுவினரிடம் பிடிபட்டனர்.
கல்வி கடன் பெற எளிய வழி என்ன? - தினமலர் வழிகாட்டியில் யோசனை
மதுரையில் "தினமலர்" சார்பில் நேற்று நடந்த வழிகாட்டி நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு கல்வி கடன் எளிய வழியில் பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து மதுரை கனரா வங்கி சீனியர் மேனேஜர் பாலகிருஷ்ணன் பேசியதாவது:
தகுதி தேர்வை காரணமாக கொண்டு பட்டதாரி ஆசிரியரை வெளியேற்ற தடை
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை எனக்கூறி, தேனி பட்டதாரி ஆசிரியரை வெளியேற்றும் உத்தரவிற்கு, மதுரை ஐகோர்ட் கிளை தடை விதித்தது.
கல்வி உரிமை சட்டத்தை நிறைவேற்ற மார்ச் 31 வரை கெடு
கல்வி உரிமை சட்டத்தை (ஆர்.டி.இ.,) மார்ச் 31ம் தேதிக்குள் அனைத்து மாநிலங்களிலும் நிறைவேற்ற வேண்டும் என மத்திய அரசு பிறப்பித்திருந்த உத்தரவு இன்னும் பெரும்பாலான மாநிலங்களில் அமல்படுத்தப்பட படாமல் உள்ளது.
22,269 ஆசிரியர்கள் உள்பட 43,666 பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு முடிவு
பல்வேறு அரசுத் துறைகளில் காலியாக உள்ள 22,269 ஆசிரியர்கள் உள்பட 43,666 பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக உள்ளாட்சித் துறை அமைச்சர் கே.பி. முனுசாமி தெரிவித்தார்.
டி.என்.பி.எஸ்.சி., தேர்வுகளில் மீண்டும் தமிழ் மொழிக்கு முக்கியத்துவம்
"டி.என்.பி.எஸ்.சி., தேர்வுகளில், தமிழ் மொழித்திறன் பகுதிக்கு, மீண்டும் உரிய முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என, தேர்வாணையத்திற்கு, கடிதம் மூலமாக வலியுறுத்தி உள்ளோம்,' என, சட்டசபையில், பள்ளிக்கல்வி அமைச்சர் வைகை செல்வன் தெரிவித்தார்.
எம்.எஸ்சி., - எம்.பில்., படிப்பில் சேர இணையத்தில் விண்ணப்பம்
அண்ணா பல்கலையில், எம்.எஸ்சி., - எம்.பில்., படிப்புகளில் சேர, பல்கலை இணையதளம் வழியாக, ஏப்., 13ம் தேதி வரை, பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Thursday, March 28, 2013
யுபிஎஸ்சி தேர்வில் ஆங்கிலத்துக்கு முக்கியத்துவம் தரும் மாற்றம் ரத்து
மத்திய அரசு தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளில் ஆங்கிலத்துக்கு முக்கியத்துவம் தரும் வகையில் செய்யப்பட்ட மாற்றங்கள் ரத்து செய்யப்படுவதாக மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.
2 லட்சம் காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன:அமைச்சர் முனுசாமி
தமிழகத்தில் அதிமுக ஆட்சிக்கு வந்த பின்னர் சுமார் 2 லட்சம் அரசு காலிப் பணியிடங்கள் நிரப்பப் பட்டதாக உள்ளாட்சித் துறை அமைச்சர் கே.பி. முனுசாமி தெரிவித்தார்.
10-ம் வகுப்பு தமிழ் 2-ம் தாள் தேர்வு வினா எண்.38 எழுத முயற்சித்திருப்பின் அவ்வினாவிற்குரிய முழுமதிப்பெண் 5 வழங்க உத்தரவு.
10ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று நடைபெற்ற தமிழ் 2ஆம் தாள் தேர்வில், வினாத்தாளுடன் இணைத்து கொடுக்க வேண்டிய படிவம் கொடுக்கப்படாததால் பல பள்ளிகளில் குழப்பம் ஏற்பட்டது. இருப்பினும் வினாவினை எழுத முயற்சித்திருந்தால் முழு மதிப்பெண்கள் வழங்கப்படும் என தேர்வுகள் துறை இயக்குனர் அறிவித்துள்ளார்.
10ம் வகுப்புத் தமிழ் இரண்டாம் தாள் தேர்வு: படிவம் இல்லாமல் படிவத்தை எப்படி நிரப்புவது? மாணவர்கள் குழப்பம்
இன்று பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு ஒரு கேள்வியைப் படித்ததும் கடும் அதிர்ச்சி. தமிழ் 2வது தாளில் 38வது கேள்வியாக,"வங்கிக் கணக்கில் பணம் செலுத்தும் படிவத்தில் நிரப்புக என்று கூறப்பட்டிருந்தது. இதற்கு 5 மதிப்பெண்கள். ஆனால், இதனுடனான படிவம்
10ம் வகுப்பு வினாத்தாளில் "பார் கோடு"
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நேற்று துவங்கியது. வினாத்தாள்கள் அந்தந்த கல்வி மாவட்ட மையங்களுக்கு பத்து நாட்களுக்கு முன்பு அனுப்பப்படும். ஒவ்வொரு மையங்களுக்கும் பணி மூப்பு அடிப்படையில் இரு தலைமை ஆசிரியர்கள் அலுவலர்களாக நியமிக்கப்படுவர்.
பத்தாம் வகுப்பு தமிழ் முதல்தாள் எளிமை: ஆசிரியர், மாணவர் மகிழ்ச்சி
"பத்தாம் வகுப்பு தமிழ் முதல்தாள் வினாக்கள் மிகவும் எளிமையாக இருந்தன" என, மாணவர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் மாதாந்திர கட்டணம் உயர்வு
கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், மாதாந்திர கட்டணங்கள், வரும், ஏப்ரல் மாதம் முதல் உயர்த்தப்படுகின்றன. 1ம் வகுப்பு முதல், 12ம் வகுப்பு வரை, கட்டணங்கள் மாற்றப்பட்டுள்ளன. எனினும், டியூஷன் கட்டணங்களில், எவ்வித மாற்றமும் இல்லை.
தொடக்கக்கல்வி பட்டயத் (D.T.Ed) தேர்வர்கள் மார்ச் 30க்குள் சான்றிதழ்களை அந்தந்த ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் பெறலாம்
தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வு, எழுதிய மாணவர்கள் மதிப்பெண் சான்றிதழை அந்தந்த ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் பெற்று கொள்ளலாம் என்று அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
தமிழுக்கு முக்கியத்துவம்: டி.என்.பி.எஸ்.சி.க்கு தமிழக அரசு கடிதம்
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) நடத்தும் போட்டித் தேர்வுகளில் தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் அளிக்குமாறு தமிழக அரசு கடிதம் எழுதியிருப்பதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் வைகைச்செல்வன் தெரிவித்தார்.
இளநிலை உதவியாளர் பணியிடங்கள்: பரிந்துரைக்கப்பட உள்ளவர்கள் பட்டியல் வெளியீடு
மாநகராட்சி இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்காக வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் பரிந்துரைக்கப்பட உள்ளவர்களின் உத்தேசப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தியில்:-
எதிர்காலத்திற்கு ஏற்ற உயர் கல்வியை தேர்வு செய்வது எப்படி?
எதிர்காலம் சிறப்பாக அமையும் வகையிலான உயர் கல்வி படிப்புக்களை எவ்வாறு தேர்வு செய்வது என்று, மதுரையில் நேற்று நடந்த தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சியில் கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி விளக்கினார்.
Wednesday, March 27, 2013
CCEக்கு மாதிரி வகுப்பறை அமைத்து அசத்தும் அரசுப் பள்ளி

கோவை மாவட்டம், காரமடை ஒன்றியம், மூலத்துறை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி பல்வேறு புதுமைகளைப் புகுத்தி மாணவர்களை முன்னேற்றுவதில் முழுமூச்சாய் இயங்கிக் கொண்டுவருகிறது.
தவறாது சமூக விழிப்புணர்வு விழாக்கள் கொண்டாடுதல், “ஸ்மார்ட் கிளாஸ்” வடிவமைப்பு, மாவட்ட அளவிலான போட்டிகளில் முதலிடம் என இப்பள்ளியின் சிறப்பான வெற்றிகளின் வரிசையில் தற்போது இப்பள்ளியில் அமைக்கப்பட்டிருக்கும் “CCE மாதிரி வகுப்பறை” தனியார் பள்ளியின் வகுப்பறைகளுக்கு சவால் விடும் வகையில் சீரிய முறையில் அமைக்கப்பட்டுள்ளது.
அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது
அரசுப் பள்ளிக்கூடங்களில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் வைகைச்செல்வன் தெரிவித்தார்.
பிளஸ் 2 கணிதம், இயற்பியல் தேர்வுகளுக்கு போனஸ் மதிப்பெண்?
பிளஸ் 2 கணிதம் மற்றும் இயற்பியல் தேர்வுகளுக்கு, போனஸ் மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என, சட்டசபையில் நேற்று வலியுறுத்தப்பட்டது. இதனால், கூடுதல் மதிப்பெண்கள் கிடைக்குமா என, எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தனியார் பள்ளிகளின் இட பிரச்னையை ஆய்வு செய்ய வல்லுநர் குழு
தமிழக அரசு நிர்ணயித்த குறைந்தபட்ச இட வசதியை ஏற்படுத்தாத தனியார் பள்ளிகள் பிரச்னை குறித்து, ஆய்வு செய்ய, பள்ளிக்கல்வி இயக்குனர் தேவராஜன் தலைமையில், வல்லுநர் குழுவை அமைத்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அறியாமை இருள் அகற்றி, ஒளி ஏற்றும் வழிகாட்டி: மாணவர்கள், பெற்றோர் பெருமிதம்
மதுரை லட்சுமி சுந்தரம் ஹாலில் நடந்து வரும், பிளஸ் 2 மாணவர்களுக்கு பிரகாசமான எதிர்காலத்தைக் காட்டும், வழிகாட்டி நிகழ்ச்சிக்கு, இரண்டாம் நாளான நேற்றும், மாணவர்கள் குவிந்தனர். காலை முதல் இரவு வரை
அரசுத் துறை தேர்வு முடிவுகள்: டி.என்.பி.எஸ்.சி., வெளியீடு
டிசம்பரில் நடந்த, அரசு துறை தேர்வு முடிவுகளை டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ளது.
வெண்புள்ளி உள்ள மாணவர்களை புறக்கணிக்கக் கூடாது
"உடம்பில் வெண்புள்ளிகள் உள்ளதை காரணங்காட்டி, மாணவர்களை பள்ளி நிர்வாகம் பாரபட்சமாக நடத்தக்கூடாது" என, பள்ளிக் கல்வி துறை செயலர் உத்தரவிட்டுள்ளார்.
ஊதிய மாற்றம்: மூவர் குழு அறிக்கையை அமல்படுத்தக் கோரிக்கை
ஊதிய மாற்றம் குறித்து தற்போதைய ஆட்சியில் கிருஷ்ணன் தலைமையிலான மூவர் குழு நியமிக்கப்பட்டு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. இந்த அறிக்கையை வெளியிட்டு சங்கங்களின் பிரதிநிதிகளிடம் கருத்து கேட்டு குழு பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும்
கலை அறிவியல், பொறியியல் கல்லூரிகள் திறப்பு எப்போது?
தமிழகத்தில் உள்ள, கலை அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள் திறப்பு குறித்து, இதுவரை, எந்த ஒரு இறுதி முடிவும் எடுக்கப்படாத நிலை நீடிக்கிறது.
Tuesday, March 26, 2013
மேல்நிலைத் தேர்வு மைய மதிப்பீட்டு பணியை மேற்- கொள்ளாத அனைத்து SSA CEO / DIET முதல்வர்கள் / DIET விரிவுரையாளர்கள் / DEO / மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்கள் SSLC கண்காணிப்பு பணி மேற்கொள்ள உத்தரவு.
நாளை (27.03.2012) தொடங்கவுள்ள SSLC பொதுத் தேர்வில் கண்காணிப்பு பணியில் ஈடுபட, மேல்நிலைத் தேர்வு மைய மதிப்பீட்டு பணியை மேற்கொள்ளாத அனைத்து SSA CEO / DIET முதல்வர்கள் / DIET விரிவுரையாளர்கள் / DEO / மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்கள் ஆகியோருக்கு அரசுத் தேர்வுகள் இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.
பிளஸ் 2 பிரதான பாடங்களின் தேர்வுகள் நிறைவு
கணினி அறிவியல் தேர்வுடன் பிளஸ் 2 பிரதான தேர்வுகள் நேற்று நிறைவடைந்தன. கடந்த மார்ச் 1ம் தேதி தொடங்கிய பிளஸ் 2 தேர்வுகள் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன.
சென்னைப் பல்கலை, தொலை நிலைக்கல்வி: இளநிலை படிப்புக்கு ஏப்ரல் 2க்குள் விண்ணப்பிக்கலாம்
சென்னைப் பல்கலைக்கழக தொலை நிலைக் கல்வி நிறுவனத்தில் இளநிலைப் பட்டப்படிப்புகளுக்கான தேர்வுகளுக்கு ஏப்ரல் 2ம் தேதிக்குள் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அடிப்படை வசதிகள் இல்லாததால் தனியார் பள்ளி மூடல்
திண்டுக்கல்லில் பள்ளியை திடீரென மூடுவதாக நிர்வாகம் அறிவித்துள்ளதால், 10 ம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களின் படிப்பு கேள்விக்குறியாகி உள்ளது.
234 சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏக்கள் இ.மெயில் முகவரியுடன் நியமன எம்.எல்.ஏவின் முகவரியும் சேர்த்தும் மொத்தம் 235 எம் எல் ஏக்களின் இ. மெயில் முகவரி கீழே கொடுக்கபட்டுள்ளது:
1 Acharapakkam - mlaacharapakkam@tn.gov.in
2 Alandur - mlaalandur@tn.gov.in
3 Alangudi - mlaalangudi@tn.gov.in
4 Alangulam - mlaalangulam@tn.gov.in
5 Ambasamudram -- mlaambasamudram@tn.gov.in
2 Alandur - mlaalandur@tn.gov.in
3 Alangudi - mlaalangudi@tn.gov.in
4 Alangulam - mlaalangulam@tn.gov.in
5 Ambasamudram -- mlaambasamudram@tn.gov.in
தியாகம், சேவை செய்வதே ஆசிரியர் பணி - அமைச்சர் கே.சி.வீரமணி
தியாகம் மற்றும் சேவை செய்யும் பணி ஆசிரியர் பணி. ஆகவே, அந்தப் பணியை ஆசிரியர்கள் சிறப்புடன் செய்து சமுதாயத்துக்குத் தேவையான நல்ல மனிதர்களாக மாணவர்களை உருவாக்க வேண்டும் என சுகாதாரத் துறை அமைச்சர் கே.சி. வீரமணி கூறினார்.
சென்னை டி.பி.ஐ வளாகத்தில் உள்ள பள்ளிக் கல்வித் துறை சார்ந்த 7 அலுவலகங்கள் தற்காலிகமாக இடமாற்றம்.
கல்வித் துறை அலுவலகங்களை, ஒரே கட்டடத்தின் கீழ் கொண்டு வருவதற்காக சென்னை, டி.பி.ஐ., வளாகத்தில் உள்ள, பெரும்பாலான கட்டடங்களை மிக விரைவில் இடித்து, தரைமட்டமாக்க, தமிழக அரசு முடிவெடுத்து உள்ளது. இதனால், தற்காலிகமாக, வேறு இடங்களை பார்க்கும் பணியில், அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
10ம் வகுப்பு பொதுத்தேர்வு: 10.68 லட்சம் பேர் எழுதுகின்றனர்
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நாளை துவங்குகிறது. 10.68 லட்சம் பேர், தேர்வை எழுதுகின்றனர். கடந்த, 1ம் தேதியில் இருந்து, நடந்து வரும் பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் நாளையுடன் முடிகின்றன.
யு.ஜி.சி. - நெட் தேர்வு முடிவுகள் அறிவிப்பு
டிசம்பர் மாதம் 8 இலட்சம் பேர் எழுதிய யூ.ஜி.சி - நெட் தேர்வின் முடிவுகள் திங்கட்கிழமை இரவு வெளியானது.
பள்ளிகளில் பொதுத்தேர்வு எதிரொலி: பேரணி, கருத்தரங்குக்கு தடை வருமா?
"பொதுத்தேர்வுகள் நடந்து வரும் நிலையில், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர் பங்குபெறும், பல்வேறு விழிப்புணர்வு பேரணிகள் மற்றும் கருத்தரங்குகளுக்கு தடை விதிக்க வேண்டும்" என, பெற்றோர்கள் எதிர்பார்க்கின்றனர்.
அண்ணாமலை பல்கலை., ஏப்ரல் 1ம் தேதி திறப்பு
அண்ணாமலை பல்கலைக்கழகம் ஏப்ரல் ஒன்றாம் தேதி துவக்கப்படுகிறது. இலங்கைத் தமிழர் படுகொலையை கண்டித்து மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்தது. இதனையடுத்து கடந்த 13ம் தேதி முதல் அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு காலவரையற்ற விடுமுறை வழங்கப்பட்டது.
கல்லூரி, பாடப்பிரிவு மட்டுமல்ல, திறனும் மிக முக்கியம்!
ஒவ்வோர் ஆண்டும் பள்ளிப் படிப்பை முடித்து, பொறியியல் படிப்பில் சேர விரும்பும் மாணவர்களை சிலவிதமான சந்தேகங்கள் அலைகழிக்கின்றன.
Monday, March 25, 2013
கூகுள் மீது நடவடிக்கை எடுக்க பாஜக வலியுறுத்தல்
இந்தியப் பகுதிகள் குறித்த வரைபட விவரங்களை சட்டவிரோதமாக சேகரித்து வைத்துள்ள கூகுள் நிறுவனம் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக வலியுறுத்தியுள்ளது.இது குறித்து பாஜக எம்.பி. தருண் விஜய் கூறியதாவது:
மார்ச் 31ல் பிளஸ் 2க்கு பிறகு என்ன படிக்கலாம்? கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி
பிளஸ் 2 தேர்வு எழுதியுள்ள மாணவர்கள் அதன் பின்னர் என்ன மேற்படிப்பு படிக்கலாம் என்பதற்கான இலவச கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி மற்றும் இவர்களின் பெற்றோருக்கான ஆலோசனை வழங்கும் நிகழ்ச்சி கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் மார்ச் 31ம் தேதி நடைபெறுகிறது.
10ம் வகுப்பு கணிதத் தேர்வு கேள்வி முறையில் மாற்றம்
10-ம் வகுப்பு கணிதத் தேர்வுக்கு உரிய கேள்விகள் எளிதாக இருக்கும் வகையில் புதிய கேள்வி முறையை கல்வித்துறை வடிவமைத்து அனைத்துப் பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
தரம் உயர்த்தி ஓராண்டாகியும் பயன் அடையாத பள்ளி - நாளிதழ் செய்தி
நெடுமானூரில் இடம் வழங்க மறுப்பதால் உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தி, நிதி ஒதுக்கியும் இடம் இல்லாததால், புதிய கட்டடம் கட்ட முடியாமல் இருக்கிறது, இதனால் மாணவர்களின் கல்வி கேள்விக்குறியாகியுள்ளது.
தேர்வுப் பணி ஆசிரியர்கள் மாற்றுப் பணியில் கவனம் செலுத்தக்கூடாது
"தேர்வு பணியில், ஈடுபடும் ஆசிரியர்கள், மாற்றுப்பணியில் கவனம் செலுத்தக்கூடாது," என, அறை கண்காணிப்பாளர்களுக்கு, ஆலோசனை வழங்கப்பட்டது.
தமிழ்நாடு தொடக்கக் கல்வி சார்நிலைப் பணி - 10+2+3 என்ற முறையில் கல்வி பயிலாமல் தற்போது ஆசிரியர் களாக பணிபுரிபவர்களின் விவரம் சேகரிக்க உத்தரவு.
தொடக்கக் கல்வி துறையில் பணிபுரியும் ஆசிரியர்களில் 10+2+3 என்ற முறையில்
கல்வி பயிலாமல் தற்போது ஆசிரியர்களாக பணிபுரிபவர்களின் விவரங்களை உரிய
படிவத்தில் அளிக்க இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவில் கூறியிருப்பதாவது:
பள்ளிகளில் ஜெராக்ஸ் இயந்திரங்களுக்கு சீல்: பள்ளிக் கல்வித் துறை நடவடிக்கை
தமிழகம் முழுவதும், எஸ்.எஸ்.எல்.சி., பொதுத்தேர்வுகள், நாளை மறுநாள் துவக்க உள்ளன. அதில், அதிக கவனத்தை கையாளும் வகையில், தேர்வு மைய பள்ளிகளில் உள்ள, "ஜெராக்ஸ்" இயந்திரம் உள்ள அறைகளை பூட்டி, சீல் வைக்க வேண்டும், என்று உத்தரவிடப்பட்டு உள்ளது.
கலை, அறிவியல் கல்லூரிகள் திறப்பு எப்போது? மாணவர்கள் குழப்பம்
மாணவர்கள் போராட்டங்கள் குறைந்து வரும் நிலையில், இன்று கல்லூரி திறக்கப்படும் என, மாணவர்களிடம் பரவிய குறுஞ்செய்தியால், கல்லூரி திறப்பு குறித்த விவரம் தெரியாமல், மாணவர்கள் குழப்பத்தில் உள்ளனர்.
விடைத்தாள் நகல் பெறும் வசதி: 10ம் வகுப்பு மாணவர்கள் எதிர்பார்ப்பு
"பிளஸ் 2 பொதுத் தேர்வை போல், பத்தாம் வகுப்பு பொது தேர்விற்கான விடைத்தாள் நகல்களும் வழங்க தேர்வு துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று, மாணவர்கள், பெற்றோர் எதிர்பார்க்கின்றனர்.
திருத்தம் இல்லாத திருத்தம் ஆண்டு: அமைச்சர் வைகைச் செல்வன்
பிளஸ் 2 விடைத்தாள் திருத்தம் செய்யும் பணியில், இந்தாண்டு "திருத்தம் இல்லாத திருத்தம் ஆண்டு" பிழை இல்லாமல் திருத்தம் செய்யப்படவுள்ளது என கல்வித்துறை அமைச்சர் வைகைச்செல்வன் தெரிவித்தார்.
அமலுக்கு வராத அரசாணை: பழங்குடியின மாணவர்கள் துயரம்
கடந்த ஆண்டு, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களின் நலனுக்காக, அரசாணை வெளியிடப்பட்டது.
Sunday, March 24, 2013
தமிழ்நாடு தொடக்கக் கல்வி சார்நிலைப் பணி - 10+2+3 என்ற முறையில் கல்வி பயிலாமல் தற்போது ஆசிரியர் களாக பணிபுரிபவர்களின் விவரம் சேகரிக்க உத்தரவு.
தொடக்கக் கல்வி துறையில் பணிபுரியும் ஆசிரியர்களில் 10+2+3 என்ற முறையில்
கல்வி பயிலாமல் தற்போது ஆசிரியர்களாக பணிபுரிபவர்களின் விவரங்களை உரிய
படிவத்தில் அளிக்க இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவில் கூறியிருப்பதாவது:
பிளஸ்2 விடைத்தாள் திருத்தும் மையத்தில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ஆய்வு

விருதுநகரில் பிளஸ்2 விடைத்தாள் திருத்தும் மையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பள்ளிக் கல்வி, இளைஞர் நலன், விளையாட்டு மற்றும் தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் வைகைச்செல்வன் ஆய்வு செய்தார்.
பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி நாளை துவக்கம்
பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி நாளை அனைத்து மாவட்டங்களிலும் தொடங்குகிறது. தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழித்தாள்கள் முதலில் திருத்தப்பட உள்ளது.
ராஜபக்சேவை போர் குற்றவாளியாக அறிவிக்க வலியுறுத்தி ஆசிரியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
ராஜபக்சேவை போர் குற்றவாளியாக அறிவிக்க வலியுறுத்தி ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் சிவகங்கை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழக தமிழாசிரியர் கழக மாநில துணைச் செயலாளர் இளங்கோ வரவேற்றார்.
சம்பளமின்றி தவிக்கும் ஆசிரியர்கள்
ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம், தகுதித்தேர்வு அடிப்படையில் தேர்ச்சி பெற்று, பணி நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்கள், சம்பளமின்றி தவிக்கின்றனர். 2012 நவம்பரில் தேர்வான இவர்கள், காலிப்பணியிடங்களில் நியமனம் செய்யப்பட்டனர்.
பள்ளி கல்வி துறையில் 100 பேருக்கு பதவி உயர்வு
பள்ளி கல்வித் துறையில், இருக்கை கண்காணிப்பாளர்கள், 100 பேர், கண்காணிப்பாளர்களாக, நேற்று பதவி உயர்வு செய்யப்பட்டனர்.
தேர்வுத்துறை நடவடிக்கையால் முதுகலை ஆசிரியர்கள் குழப்பம் - நாளிதழ் செய்தி
தேர்வுத் துறையின் குளறுபடியான உத்தரவால், தேர்வுப் பணிகளுக்குச் செல்வதா, விடைத்தாள் திருத்தும் பணிகளுக்குச் செல்வதா என, தெரியாமல், முதுகலை ஆசிரியர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு: கல்வித்துறையினர் ஆலோசனை
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஏற்பாடு குறித்து கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம், திருப்பூர் நஞ்சப்பா மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது.
பிளஸ் 2 விடைத்தாள் மையங்களில் போராட முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் முடிவு
பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் மையங்களில் போராட்டம் நடத்த தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் முடிவு செய்துள்ளனர்.
கல்லூரிகள் 25ம் தேதி திறப்பு: உயர் கல்வித்துறை அறிவிப்பு
இலங்கையில், தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டிக்காத மத்திய அரசு மற்றும் அரசியல் கட்சிகளை எதிர்த்து, தமிழகத்தில்,கல்லூரி மாணவர்கள், தொடர் போராட்டத்தில், ஈடுபட்டுள்ளனர்.
தேர்வு முறைகேடுகள் வட மாவட்டங்களில் அதிகம்: கல்வி தரத்தில் பின்தங்கிய நிலை காரணமா?
பிளஸ் 2 தேர்வில், பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக, 18 மாவட்டங்களில் இருந்து, 289 மாணவர்கள், பறக்கும் படை குழுவினரிடம் பிடிபட்டுள்ளனர்.
தொடக்க கல்வி துறையில் அலகு விட்டு அலகு மாறுதல் இந்த வருடம் நடக்குமா? ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு
இரண்டு வருடங்களுக்கு முன் நடத்தப்பட்ட அலகு விட்டு அலகு மாறுதல் இந்த வருடம் நடக்குமா? என்ற எதிர்பார்ப்பு தொடக்கக்கல்வித்துறை ஆசிரியர்கள் பரவலாக எழுந்துள்ளது. குறிப்பாக பட்டதாரி ஆசிரியர்களை பொருத்தவரை அவர்கள் பள்ளிக்கல்விதுறைக்கு ஈர்க்கப்பட்ட நாள் முதலே முன்னுரிமை
தரம் உயராத நடுநிலைப் பள்ளி கல்வியை கைவிடும் மாணவர்கள்!
திருக்கோவிலூர் அருகே முருக்கம்பாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியை, உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்படாததால், இப்பகுதி மாணவர்கள் சிலர் 9ம் வகுப்பை தொடர முடியாமல் படிப்பை கைவிடும் அவலம் தொடர்கிறது.
பகுதி நேர பொறியியல் படிப்பு: ஏப்ரல் 1 முதல் விண்ணப்பங்கள் விநியோகம்
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகளில் பகுதி நேர பி.இ., பி.டெக்., படிப்பு சேர்க்கைக்கான விண்ணப்பப் படிவங்கள் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் விநியோகிக்கப்பட உள்ளன.
Saturday, March 23, 2013
ஜூனியர் ஆசிரியர்களுக்கு சொந்த மாவட்டம், சீனியர்களுக்கு வெளியூரா? இடைநிலை ஆசிரியர்கள் கொதிப்பு - நாளிதழ் செய்தி
தமிழகத்தில் ஜூனியர் இடைநிலை ஆசிரியர்களுக்கு சொந்த மாவட்டத்தில் பணியாற்ற வாய்ப்பும், சீனியர் ஆசிரியர்கள் தொலைதூர மாவட்டங்களிலும் நியமிக்கப்பட்டதால் ஆசிரியர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர்.
Mobile phone தொலைந்துவிட்டதா கவலை வேண்டாம்! ! ! !
உங்களுடைய Mobile Phone தொலைந்துவிட்டதா ? அல்லது திருடிவிட்டார்களா? கவலையே வேண்டாம். மீண்டும் உங்கள் மொபைல் போன் உங்களுக்கே திரும்ப வரும்! ! ! ! இதற்கு உங்கள் மொபைல்போனின் தனி அடையாள எண்ணை (IMEI-International Mobile Equipment Identity) நீங்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
ஜூன் மாதத்துக்குள் சுய விவரங்களை ஓய்வூதியர்கள் சமர்ப்பிக்க அறிவிப்பு
ஓய்வூதியர்கள் தங்களது முழு விவரங்களை வரும் ஜூன் மாதத்துக்குள் கருவூலத்தில் சமர்ப்பிக்காவிட்டால், ஆகஸ்ட் மாதத்திலிருந்து ஓய்வூதியம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகளில் 2வது ‘ஷிப்ட்’ அரசு பரிசீலனை
பள்ளிகளில் 2வது ஷிப்ட் நடத்த அனுமதிப்பதி பற்றி மாநில அரசு பரிசீலித்து வருகிறது. இந்த தகவலை மாநில கல்வி அமைச்சர் கிரன் வாலியா கூறினார்.இதுபற்றி நிருபர்களிடம் கிரன் வாலியா கூறியதாவது:
கல்வி கற்கும் உரிமை சட்டத்தை நிறைவேற்ற குழு: மத்திய மந்திரி தகவல்
இந்திய நாடாளுமன்றம் கடந்த 2009-ம் ஆண்டு கல்வி கற்கும் உரிமைச் சட்டத்தை நிறைவேற்றியது. இந்தச் சட்டம் 2010-ம் ஆண்டு நடைமுறைக்கு வந்தது. இந்த சட்டத்தின் கூறியுள்ளபடி பள்ளிகளில் மாற்றங்களை செய்ய வேண்டும்.
ஆசிரியர் தகுதித் தேர்வை ரத்து: செய்யக் கோரி நெல்லையில் உண்ணாவிரதம்!
ஆசிரியர் தகுதித் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நெல்லையில் இன்று தமிழ்நாடு அங்கீகாரம் பெற்ற நிதி உதவி பெறும் தனியார் பள்ளி நிர்வாகிகள் உண்ணாவிரதம் இருந்தனர்.
Friday, March 22, 2013
மூலத்துறை நடுநிலைப் பள்ளியில் உலக சிட்டுக்குருவிகள் மற்றும் வன நாள் விழா
கோவை மாவட்டம் காரமடை ஒன்றியத்திலுள்ள மூலத்துறை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் சுற்றுச்சூழல் மன்றம் சார்பாக மார்ச் 21ஆம் தேதி “உலக சிட்டுக்குருவிகள் தினம்” மற்றும் “உலக வனநாள் தினம்” கொண்டாடப்பட்டது.
மாணவர்களின் விருப்பங்களும், பொருத்தமான கல்லூரிகளும்...
தாங்கள் படிக்கவிருக்கும் கல்லூரி அல்லது பல்கலைக்கழகம் இவ்வாறுதான் இருக்க வேண்டுமென, மாணவர்கள், தங்களுக்குள் பல்வேறான எதிர்பார்ப்புகளைக் கொண்டுள்ளார்கள்.
தொடக்கக்கல்வி துறையின் கீழ் உள்ள தொடக்க / நடுநிலைப் பள்ளிகளில் 20.03.2013 அன்றைய நிலவரப்படி காலிப்பணியிட விவரம் கோரி உத்தரவு.
தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் உத்தரவில் கூறியிருப்பதாவது : 20.03.2013 அன்றுள்ளபடி ஊராட்சி ஒன்றிய / நகராட்சி / மாநகராட்சி / அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிட விவரங்களை உரிய படிவத்தில் 26.03.2013 அன்று தொடக்கக் கல்வி
முதன்மை தேர்வில் பிராந்திய மொழிகளுக்கு அனுமதி : யூ.பி.எஸ்.சி., அறிவிப்பு
யூ.பி.எஸ்.சி., சிவில் சர்வீஸ் தேர்வுகளில் முதன்மை தேர்வை தங்களின் பிராந்திய மொழிலேயே தேர்வாளர்கள் எழுத அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. முதன்மை தேர்வுகளை ஆங்கிலம் மற்றும் இந்தியிலேயே எழுத வேண்டும்
அரசு துறை தேர்வுகளில் இனி தேர்ச்சி சதவீதம் அதிகரிக்கும்
அரசுத் துறைகளில், தற்போது செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து, புதிய பாடத்திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. எனவே இனி தேர்ச்சி சதவீதம் அதிகரிக்கும்" என, டி.என்.பி.எஸ்.சி., முன்னாள் தலைவர் நடராஜ் கூறினார்.
உயிரியல், வரலாறு தேர்வு: 36 மாணவர்கள் சிக்கினர்
பிளஸ் 2 உயிரியல், வரலாறு தேர்வுகளில், 36 மாணவர்கள், "பிட்" அடித்து பிடிபட்டனர். பிளஸ் 2 மாணவர்களுக்கு, நேற்று உயிரியல், வரலாறு, தாவரவியல், வணிகக் கணிதம் ஆகிய தேர்வுகள் நடந்தன.
பட்ஜெட்: ஆதரவும், எதிர்ப்பும்.
புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்தல், அகவிலைப்படியை அடிப்படை ஊதியத்துடன் இணைத்தல் உள்ளிட்ட அறிவிப்புகள் பட்ஜெட்டில் இல்லாதது ஏமாற்றம் அளிப்பதாக அரசுப் பணியாளர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் தெரிவித்துள்ளன.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஊதியமாக மொத்த பட்ஜெட்டில் 42 சதவீதம் ஒதுக்கீடு - நாளிதழ் செய்தி
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் மாதச் சம்பளத்துக்காக மட்டும் தமிழக அரசின் மொத்த பட்ஜெட்டில் இருந்து 42 சதவீதம் செலவிடப்படுவதாக நிதித் துறை முதன்மைச் செயலாளர் க.சண்முகம் தெரிவித்துள்ளார்.
Thursday, March 21, 2013
தமிழக பட்ஜெட் - கல்வித்துறைக்கான ஒதுக்கீடுகள் என்னென்ன?
2013-14 நிதியாண்டிற்கான தமிழக பட்ஜெட்டில், பள்ளிக் கல்வித்துறைக்கென 16,965 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த 2013-14ம் நிதியாண்டிற்கான, தமிழக பட்ஜெட், மார்ச் 21ம் தேதி, தமிழக சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. தமிழக நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பட்ஜெட் தாக்கல் செய்தார். அதில், பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வி உள்ளிட்ட பல்வேறு கல்வித் துறைகளுக்கான நிதி ஒதுக்கீட்டு விபரங்கள்...
சத்துணவில் விதவிதமான உணவு விநியோகம்: மாணவர்கள் உற்சாகம்
சத்துணவில், விதவிதமான உணவு வகைகள் வழங்கும் திட்டம், மாவட்டத்திற்கு ஒரு இடம் என, தமிழகம் முழுவதும், 32 இடங்களில் முன்னோடித் திட்டமாக தொடங்கப்பட்டுள்ளது.
பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.16965.30 கோடி ஒதுக்கீடு
பட்ஜெட் பற்றிய முழு விவரம் பதிவிறக்கம் செய்ய...
BUDGET OF THE YEAR 2013-14 DETAILS CLICK HERE...
பள்ளி கல்வித்துறை வளர்ச்சிக்காக ரூ.16,965.30 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 97.7 லட்சம் மாணவர்களுக்கு இலவச புத்தகங்கள் வழங்க ரூ.217.22 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 86.71 மாணவர்களுக்கு இலவச நோட்டுகள் வழங்க ரூ.110.96 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 24.76 லட்சம் மாணவர்களுக்கு கல்வி ஊக்கத் தொகையாக ரூ.381 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.தமிழ் மொழித்தாள் தேர்வு: 10 ஆயிரம் பேர் பங்கேற்பு
சிறுபான்மை மொழிகளை, தாய்மொழியாகக் கொண்ட பட்டதாரிகளுக்கான, தமிழ் மொழித்தாள் தேர்வு, மாநிலம் முழுவதும், நேற்று துவங்கியது.
குரூப்-1 தேர்வு வயது வரம்பை 45 ஆக உயர்த்த கோரிக்கை
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும், குரூப் -1 தேர்வுக்கான வயது வரம்பை, 45 ஆக உயர்த்த வேண்டும்" என, மார்க்., கம்யூ., கட்சி கூறியுள்ளது.
கோடை விடுமுறைக்குப் பின் மீண்டும் 03.06.2013 அன்று பள்ளிகள் திறக்க உத்தரவு
இது குறித்து பள்ளிக்கல்வி இயக்குனர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது : தமிழ்நாட்டிலுள்ள அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளிலும் கோடை விடுமுறை முடிந்து 2013-14ஆம் கல்வியாண்டில் 03.06.2013 திங்கட்கிழமையன்று பள்ளிகள் திறக்கப்பட
ஆங்கிலத்தில் பேசி அசத்தும் கிராமத்து பள்ளி மாணவர்கள்
சிவகங்கை அருகே மரக்காத்தூர் அரசு நடுநிலைப்பள்ளி மாணவர்கள் ஆங்கிலத்தில் சரளமாக பேசி அசத்துவது, அப்பகுதியினரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
Wednesday, March 20, 2013
அரசு பள்ளிகளில் CCE செயல்திறன் பகுப்பு மென்பொருள் தமிழக அரசால் அறிமுகம்
அரசு / ஊராட்சி ஒன்றியப் பள்ளிகளில் CCE சார்பான பதிவேடுகள் மற்றும் மதிப்பெண் அட்டைகள் ஆகியவற்றில் ஆசிரியர்களின் சுமையை குறைப்பது மற்றும் CCE செயல்திறன் பற்றி அறிய "BEE EDUSYS" என்ற நிறுவனம் மூலம் முதற்கட்டமாக சோதனை அடிப்படையில் ஒரு மாவட்டத்திற்கு 2 அரசு பள்ளிகள் வீதம் தேர்ந்தெடுத்து தமிழக முழுவதும் 64 பள்ளிகளுக்கு, இச்செயல்திறன் மென்பொருள் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
மார்ச் 21ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்வதை அடுத்து பள்ளிக் கல்வித் துறை சார்ந்த அனைத்து அலுவலர்கள் அலுவலக தலைமையகத்தில் இருக்க உத்தரவு.
மார்ச் 21ஆம் தேதி தமிழக அரசு சட்டமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளதை அடுத்த துறை சார்ந்த அனைத்து விவரங்களும் தாயாற்படுத்தி வைத்து கொள்ளவும், பட்ஜெட் நடக்கும் நாளன்று அனைத்து இயக்குநர்கள், இணை இயக்குநர்கள் மற்றும் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள்,
சில பள்ளிகளால் பெற்றோர் குழப்பம் முப்பருவ பாடத்திட்டத்தில் ஆண்டு இறுதித்தேர்வு எப்படி?
தமிழகத்தில் சமச்சீர் கல்வித் திட்டம் அமலில் உள்ள நிலையில் மாணவர்களின் கல்விச் சுமை மற்றும் நோட்டுப் புத்தக சுமைகளை குறைக்க முப்பருவ பாடத்திட்டம் நடப்பு கல்வி ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பகுதி நேர கணினி ஆசிரியர்களுக்கு முன்னுரிமை அளிக்க கோரிக்கை
தமிழக அரசின் ஆணைப்படி 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை பகுதிநேர கணினி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப முன்னுரிமை அளிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கற்பதை உங்கள் குழந்தை அனுபவிக்க வேண்டும்!...
நாம் ஒவ்வொரு நாளும் புதிய விஷயங்களை கற்கிறோம். கற்றல் செயல்பாடானது 24x7 என்ற தொடர்ந்த செயல்பாடாக நம் வாழ்வில் இடம்பெற்ற ஒன்று என்பதை புரிந்துகொள்பவரே புத்திசாலி.
பள்ளி திறக்கும் நாளில் மாணவர்களுக்கு விலையில்லா பொருட்கள்
பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் விலையில்லா பொருட்களை, பள்ளி திறக்கும் நாளில் வழங்க, பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.
போட்டி தேர்வுகளில் தமிழ் மொழியை புறக்கணிக்கவில்லை
டி.என்.பி.எஸ்.சி. போட்டித் தேர்வுகளில், தமிழ் மொழியின் முக்கியத்துவத்தை குறைத்துவிட்டது போல் பேசுவது தவறு. தமிழ் மொழியை புறக்கணித்து, தமிழக அரசுப் பணிகளுக்கு, பணியாளர்களை தேர்வு செய்ய முடியாது" என, புதிய பாடத்திட்டங்களை உருவாக்கிய முன்னாள் தலைவர் நட்ராஜ் கூறினார்.
ஒரே நாளில் 2 அரசுத் தேர்வு: மையங்கள் ஒதுக்குவதில் சிக்கல்?
தமிழகத்தில் மார்ச் 27ம் தேதி, பிளஸ் 2 மாணவர்களுக்கான கடைசி தேர்வும், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு முதல் தேர்வும் ஒரே நாளில் நடக்கவுள்ளதால், பல பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, தேர்வு மையங்கள் ஒதுக்குவதில், சிக்கல் ஏற்பட்டுள்ளதாக, தலைமை ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.
பள்ளிக்கல்வித்துறையில் விரைவில் 500 இளநிலை உதவியாளர் நியமனம்
பள்ளி கல்வித்துறையில், விரைவில், 500 இளநிலை உதவியாளர்கள், பணி நியமனம் செய்யப்படுவர் என, கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
10ம் வகுப்பு கணித பாட வினாத்தாள் மாற்றம்: பள்ளிகளுக்கு சுற்றறிக்கை
பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான, கணித வினாத்தாளில் ஏற்பட்டிருக்கும் மாற்றம் குறித்த சுற்றறிக்கை, அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
பிட் அடித்த மாணவர்களின் பெற்றோர் அதிரடி கைது
10ம் வகுப்பு தேர்வில், "பிட்" அடித்த, 1,600 மாணவர்கள், கையும், களவுமாக பிடிபட்டனர். இவர்கள், தேர்வெழுத தடை விதிக்கப்பட்டதோடு, "பிட்" அடிப்பதற்கு உதவியதாக, மாணவர்களின் பெற்றோர், 100 பேர் கைது செய்யப்பட்டனர்.
Tuesday, March 19, 2013
புதுவை, காரைக்கால் பள்ளி, கல்லூரிகளுக்கு 3 நாள் விடுமுறை
புதுச்சேரி மற்றும் காரைக்கால் பிராந்தியங்களில் உள்ள அனைத்து பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு, புதுச்சேரி அரசு 3 நாள்கள் விடுமுறை அறிவித்துள்ளது.
அரசு பள்ளிக்கு ஆசிரியர்கள் நியமிக்க வலியுறுத்தல்
மண்ணாடிப்பட்டு அரசு நடுநிலைப் பள்ளிக்கு ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என, புதுச்சேரி அறிவியல் இயக்கம் வலியுறுத்தியுள்ளது.
துறைத் தேர்வுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
துறைத் தேர்வுக்கு ஏப்ரல் 15ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்சி.,) அறிவித்துள்ளது.
அரசாங்கம் விளையாட்டுக்கு ஊக்கம் அளிக்கவேண்டும்
சிவகங்கையில் விளையாட்டு வீரர்களுக்கான தங்கும் விடுதி கட்டும் திட்டம் பல ஆண்டுகளாக கிடப்பில் உள்ளது. சிவகங்கையில் கால்பந்து, ஹாக்கி, கூடைப்பந்து, தடகள விளையாட்டுகளில் பங்கேற்க, ஏராளமான வீரர்கள் ஆர்வமாக உள்ளனர்.
தரம் உயர்ந்த கல்வியை அளிக்க வேண்டும்: ஆளுநர்
உலகளாவிய போட்டிக்கு ஏற்ப தரம் உயர்ந்த கல்வியை கல்வி நிறுவனங்கள் அளிக்க வேண்டும் என்று சாயர்புரம் போப் கல்லூரியில் நடந்த விழாவில் தமிழக கவர்னர் ரோசையா தெரிவித்தார்.
இனி ஆங்கிலம் எளிது: தயாராகிறது இலவச புத்தகம்
மதுரை மாவட்டத்தில் 6, 7, 8ம் வகுப்புகளில் ஆங்கில பாடத்தில் பின்தங்கிய மாணவர்கள் நலன் கருதி, அவர்கள் குறைந்தபட்சம் தேர்ச்சி பெறுவதற்கான எளிய முறையில் ஆங்கிலம்" புத்தகங்கள் இலவசமாக வழங்கப்படவுள்ளன.
சிறந்த அரசு பள்ளிகளுக்கு பாராட்டு சான்று வழங்கல்
கிருஷ்ணகிரியில், 143 அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் சிறந்த பள்ளிகளாக தேர்வு செய்யப்பட்டு, பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயம் பரிசாக வழங்கப்பட்டுள்ளது.
ஆசிரியர்கள் உடைக்கு கட்டுப்பாடு: ஆசிரியர்கள் எதிர்ப்பு
ஆசிரியைகள் வாரத்திற்கு 3 நாட்கள் சீருடைஅணிந்து, கொண்டையிட்டு, குறைந்த "மேக்கப்" மற்றும் நகைகள் அணிந்து வரவேண்டும். ஆசிரியர்கள் முழு நீள சட்டை அணிந்து, "ஷூ" அணிந்து வரவேண்டும் என்று, கட்டுப்பாடு விதிக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
வேதியியல் வினாத்தாள் எளிது: சென்டம் அதிகரிக்கும்
பிளஸ் 2 வேதியியல் வினாக்கள் மிகவும் எளிமையாக இருந்தது என்பதால், பிற பாடங்களை காட்டிலும் வேதியியல் பாடத்தில், "சென்டம்" எடுக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
மத்தியஅரசு ஊழியர்களுக்கு 7வது ஊதிய குழு அமைக்க வேண்டும் - மத்திய அமைச்சர் அஜய் மகேன்
ஏழாவது ஊதிய குழு அமைக்கவேண்டும் என டாக்டர் மன்மோகன்சிங் அமைச்சரவையில் முதல் குரலாக அஜய் மகேன் குரல் ஒலித்துள்ளது.
30ம் தேதிக்குள் பள்ளிகளுக்கு சிறப்பு கட்டணம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் சங்கம் கோரிக்கை
தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் சங்க மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சி இ.ஆர். மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. இக்கூட்டதில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங்கள் :
தனியார் பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள பிளஸ் 2 தேர்வு மையங்களில் முறைகேடுகள் நடக்காமல் கண்காணிக்க மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் தனிப்படைகளை தேர்வு துறை நியமித்துள்ளது
இயற்பியல், கணக்கு தேர்வுகளின்போது சில தேர்வு மையங்களில் முறைகேடுகள் நடந்ததாக தேர்வு துறைக்கு புகார்கள் வந்துள்ளன. இதில் பெரும்பாலானவை தனியார் பள்ளிதேர்வு மையங்கள்.
ஏழாவது ஊதிய குழுவை உடனே அமைக்க வேண்டும் என NMC (National Mazdoor Conference) பாரத பிரதமரை இன்று கேட்டுக்கொண்டுள்ளது
ஏழாவது ஊதிய குழுவை உடனே அமைக்க வேண்டும் என NMC (National Mazdoor Conference) பாரத பிரதமரை இன்று கேட்டுக்கொண்டுள்ளது.
ஸ்ரீரங்கத்தில் 128 கோடியில் ஐ.ஐ.ஐ.டி. : முதல்வர் அறிவிப்பு
திருச்சி, ஸ்ரீரங்கத்தில், 128 கோடி ரூபாய் செலவில், புதிதாக இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனம் அமைக்கப்படும் என, முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
வேதியியல், கணக்கு பதிவியலில் 122 மாணவர் சிக்கினர்
இதுவரை நடந்த பிளஸ் 2 தேர்வுகளில், அதிகபட்சமாக, நேற்று நடந்த வேதியியல், கணக்குப் பதிவியல் தேர்வுகளில், மாநிலம் முழுவதும், 122 மாணவர்கள், தேர்வு முறைகேடுகளில் ஈடுபட்டு, பறக்கும் படை குழுக்களிடம் பிடிபட்டனர்.
Monday, March 18, 2013
அரசு ஊழியர்களுக்கான துறைத் தேர்வு பாடத் திட்டங்கள், 22 ஆண்டுகளுக்குப் பின் மாற்றப்பட்டு, புதிய பாடத் திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.
அரசு ஊழியர்களுக்கான துறைத் தேர்வு பாடத் திட்டங்கள், 22 ஆண்டுகளுக்குப் பின் மாற்றப்பட்டு, புதிய பாடத் திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. போட்டித் தேர்வுகளுக்கான பாடத் திட்டங்களைப் போலவே, உயர் தரத்தில், துறைத்
தண்ணீரைக் கொண்டு பல வியாதிகளைக் குணப்படுத்த முடியும்!
தினமும் அதிகாலையில் தூக்கத்தில் இருந்து எழுந்ததும் வெறும் வயிற்றில் தண்ணீர் அருந்துவது ஜப்பானில் இப்போது பிரபலமாகி வருகிறது. இங்கு தரப்பட்டிருக்கும் கீழ்வரும் விபரங்கள் ஜப்பானிய மருத்துவர்களால் தண்ணீரைக் கொண்டு பல வியாதிகளைக் குணப்படுத்த முடியும் என்ற விஞ்ஞான முறைப்படி நிரூபிக்கப்பட்ட தகவல்கள் ஆகும்.
அரசுப் பள்ளியின் அறிவியல் கண்காட்சி படைப்புகளில் சமூக நோக்கம்
படிக்கும் பள்ளியைப் பொறுத்தே மாணவர்களின் ஆக்கத் திறன் அமையும் என்ற பொதுவான நம்பிக்கையைப் பொய்யாக்கி இருக்கிறது. ஈரோட்டில் உள்ள அரசுப் பள்ளியில் நடைபெற்ற ஒரு அறிவியல் கண்காட்சி. 500-க்கும்
கூட்டுறவு சங்க தேர்தல் பணிக்காக செல்லும் ஆசிரியர்கள் முன்னதாக வாக்களிக்க அனுமதிக்க வேண்டும்
கூட்டுறவு சங்க தேர்தல் பணிக்காக செல்லும் ஆசிரியர்களுக்கு முன்னதாக வாக்களிக்கும் வாய்ப்பை அளிக்க வேண்டும் என்று தமிழக ஆசிரியர் கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது.
மத்திய அரசின் வேலைவாய்ப்பு மற்றும் கல்வி நிறுவனங்களில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு (OBC) வழங்கப்பட்டுள்ள 27 சதவீத இடஒதுக்கீட்டை பெறுவதற்கான வருமான வரம்பு ரூ.4.5 லட்சத்திலிருந்து ரூ.6 லட்சமாக உயர்வு
அரசின் வேலைவாய்ப்பு மற்றும் கல்வி நிறுவனங்களில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது. இது செல்லாது என அறிவிக்கக்கோரி இடஒதுக்கீடு எதிர்ப்பாளர்கள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
600க்கு மேற்பட்ட மாணவர்கள் தேர்வு எழுதும் மையங்களை உடனடியாக இரண்டாக பிரிக்க அரசு தேர்வுகள் துறை அவசர உத்தரவு
பிளஸ் 2 தேர்வு மார்ச் 1ம் தேதி தொடங்கியது. மார்ச் 27ம் தேதியுடன் முடிகிறது. இந்த தேர்வில் தமிழகம், புதுச்சேரியை சேர்ந்த 5769 பள்ளிகளில் இருந்து 8 லட்சத்து 4 ஆயிரத்து 534 மாணவ மாண வியரும், தனித் தேர்வர்களாக 48 ஆயிரத்து 788 மாணவ மாணவியரும் எழுதுகின்றனர்.
குழந்தைகள் பிறப்பு வீதம் குறைந்ததால் கேரளாவில் பள்ளிகள் மூடப்படும் அபாயம்
கடந்த சில ஆண்டுகளாக, கேரளாவில், குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைந்து வருவதால், போதுமான குழந்தைகள் இல்லாமல், பல பள்ளிகள் மூடப்படும் நிலைமை உருவாகி உள்ளது.கேரள மாநில திட்ட வாரியம் சார்பில், ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது.
பொறியியல் கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை
இலங்கைத் தமிழர் விவகாரத்தில், ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலில் அமெரிக்க கொண்டு வரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும்
ஐ.ஏ.எஸ். தேர்வில் புதிய முறை: ஆங்கிலத் திறனுக்கு அவசியம் இருக்காது
அரசியல் கட்சிகளின் எதிர்ப்பை அடுத்து, ஐ.ஏ.எஸ்., தேர்வில் புதிய முறையை பின்பற்ற, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, முதன்மை தேர்வில் ஆங்கிலத் திறன் அவசியம் இல்லை; அந்த மதிப்பெண், இறுதித் தேர்வில் சேர்க்கப்பட மாட்டாது என, எதிர்பார்க்கப்படுகிறது.
22ம் தேதி முதல் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தம் -தினமலர் செய்தி
தமிழகம் முழுவதும், பிளஸ் 2 தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி வரும், 22ம் தேதி துவங்குகிறது. ஆறாயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரிய, ஆசிரியைகள், விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட உள்ளனர்.
ஹைடெக் மாடல் பள்ளி திட்டம் முடக்கம்: மாணவர்கள் கல்வி பாதிப்பு
அரசு அறிவித்த ஹைடெக் மாடல் பள்ளி திட்டம், எவ்வித முன்னேற்றமும் இன்றி, கிடப்பில் போடபட்டுள்ளதால், கிராமப்புற மாணவர்களுக்கு கிடைக்க வேண்டிய கல்வி முடக்கப்பட்டுள்ளது.
பள்ளிக்கல்வித்துறையின் கீழ் உள்ள உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் 790 ஆசிரியர் களுக்கு பிப்ரவரி 2013 மாதம் ஊதியம் கிடைக்கப் பெறாததால் ஆசிரிய குடும்பங்கள் தவிப்பு.
இதுகுறித்து ஆசிரியர் ஒருவர் கூறுகையில்: பள்ளிக்கல்வித்துறையின் கீழ் உள்ள அரசு / நகராட்சி / மாநகராட்சி உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் பணியிடங்கள் தற்காலிகம் (பணியிடம் மட்டும் தான் தற்காலிகம், நியமனம் - முறையான நியமனம்) அல்லது நிரந்திர பணியிடங்கள் என்று அரசால் நிர்ணயம் செய்யப்பட்டு தோற்றுவிக்கப்பட்டு ஆணை வெளியிடப்படும்.
மாநகராட்சி மாணவர்களுக்கு நற்பண்பு வகுப்புகள் - மோகனன்
சென்னை, எம்.எம்.டி.ஏ. காலனியில் உள்ள மாநகராட்சிப் பள்ளியில் இனிய மாலை நேரம். எட்டாம் வகுப்பு மாணவர்கள் அங்கே குழுமியிருந்தனர். நாம் சாப்பிடும் சாப்பாடு எப்படி நமக்கு கிடைக்கிறது என்பது ஆசிரியரின் கேள்வி. ‘அரிசியிலிருந்து’ என ஒரு மாணவன் சொல்ல, ‘மண்ணிலிருந்து’ என
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில கோரிக்கை விளக்க மாநாடு ஏப்ரல் 10ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு.
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் 5அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் ஏப்ரல் 7ந்தேதி நடைபெற இருந்த மாநில மாநாடு தவிர்க்க இயலாத காரணத்தால் வருகிற 10ந் தேதி சென்னையில் நடைபெறும் என பொதுச்செயலாளர் அறிவித்துள்ளார்கள். அனைவரும் பங்கேற்க வேண்டுகிறோம்.
பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி மார்ச் 28 முதல் துவக்கம் - தினமணி செய்தி
பிளஸ் 2 பொதுத்தேர்வுகளின் விடைத்தாள் திருத்தும் பணி மார்ச் 28 முதல் துவக்கலாம் என்று தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.
பொருளாதாரம் படித்தவர்கள் ஆசிரியர் தகுதித்தேர்வு எழுத முடியாது
பொருளாதார பட்டப்படிப்பு பெற்றவர்கள் ஆசிரியர் தகுதித்தேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
பள்ளி கேன்டீன்களில் "பாஸ்ட் புட்" விற்பனைக்கு தடை: மத்திய அரசு ஆலோசனை
பீட்சா, பர்கர் போன்ற, "பாஸ்ட் புட்" அயிட்டங்களை, பள்ளி கேன்டீன்களில், இனி விற்பனை செய்யாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு பதிலாக, உடல் ஆரோக்கியத்துக்கு உதவும், பழங்கள், பால் பொருட்களை விற்பனை செய்யலாம் என மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு ஆலோசனை வழங்கியுள்ளது.
Sunday, March 17, 2013
மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பாசிரியர் களுக்கு மூன்றாண்டுகளாக சம்பளமின்றி தவிப்பு, தீர்வு காண முதல்வருக்கு கோரிக்கை
தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநர் அவர்களின் உத்தரவின் பேரில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாற்றுத்திறன் மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிப்பதற்காக மாற்றுத்திறன் மாணவர்களுக்கான உள்ளடங்கிய கல்வித்திட்டம் 2010 – 2011 ஆம் கல்வி ஆண்டில் தொடங்கியது.
6 முதல் 9-ம் வகுப்பு வரை அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் ஒரே நேரத்தில் முழு ஆண்டு தேர்வு
அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஒரே நேரத்தில் தேர்வு தொடங்கி முடிக்க வேண்டும் என்ற புதிய நடைமுறை கடந்த ஆண்டு முதல் பின்பற்றப்படுகிறது. இது மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது.
உடல் எடையை குறைக்க கரும்பு சாப்பிடுங்கள் . . .

குண்டான உடலை குறைக்க ஆண்களும், பெண்களும் பல்வேறு வழிமுறைகளை கடைப்பிடிக்கின்றனர். நடை பயிற்சி, கடுமையான உடற்பயிற்சியை மேற்கொள்கின்றனர். விளம்பரங்களை நம்பி மாத்திரை, லேகியம் போன்றவற்றையும் வாங்கிச் சாப்பிட்டு, எப்படியாவது உடல் எடையை குறைக்க முயற்சிக்கின்றனர்.
ரூ.12 கோடி செலவில் 99,329 சத்துணவு மையங்களுக்கு மிக்சி வழங்கப்படும் என முதல்வர் அறிவிப்பு
ரூ.12 கோடி செலவில் 99,329 சத்துணவு மையங்களுக்கு மிக்சி வழங்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இது குறித்து தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:
இன்னும் எத்தனை வழிகளில் தான் ஏமாற போகிறார்கள் CPS திட்டத்தில் உள்ள ஆசிரியர்கள்
01.04.2003 க்குப் பிறகு CPS திட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டு வருகிறது.பல்வேறு குறைபாடுகள் பல்வேறு விதமாக தெரிய வருகிறது. அதில் ஒன்றாக 01.04.2003-க்குப் பிறகு நியமனம் செய்யபட்ட ஆசிரியர்கள் கல்வித்துறையில் கல்வியாண்டின் இடையில் பணி ஓய்வு பெறுபவர்கள் பணிநீட்டிப்பு வழங்கப்பட்டு வருகிறது.
நாகர்கோவில் ரயில்வே பிளாட்பாரத்தில் சிதறிய விடைத்தாள்கள் - நாளிதழ் செய்தி
நாகர்கோவில் ரயில்வே ஸ்டேஷன் பிளாட்பாரத்தில் பிளஸ் 2 விடைத்தாள் சிதறிய சம்பவம் தொடர்பாக மாணவர்கள் பாதிக்காத வகையில் வீடியோ காட்சிகள் மூலம் துல்லியமாக ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
காலவரையற்ற விடுமுறை : பட்டமளிப்பு விழா ரத்து
இலங்கை தமிழர்களுக்காக மாணவர்கள் நடத்தும் போராட்டம் எதிரொலியாக, கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால், மதுரை அரசு மீனாட்சி மகளிர் கல்லூரி பட்டமளிப்பு விழா ரத்து செய்யப்பட்டது.
முதுகலை வகுப்புகள் துவக்கப்படுமா
காமராஜர் பல்கலை.,ஆண்டிபட்டி கல்லூரியில், இந்த ஆண்டிலாவது முதுகலை வகுப்புகள் துவக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராணுவ பணி கிடைப்பதோடு, நாட்டுக்கு சேவை செய்யவும் முடியும்: மதுரை ஆட்சியர்
ராணுவத்தில் பணி கிடைக்கிறது என்று சொல்வதை விட, நாட்டுக்கு சேவை செய்ய நல்ல வாய்ப்பு கிடைக்கிறது என்று சொல்லலாம் என, கலெக்டர் அன்சுல் மிஸ்ரா தெரிவித்தார்.
மூன்றாண்டுகளுக்கு மேல் ஒரே ஒன்றியத்தில் பணிபுரியும் உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களின் விவரம் சேகரிக்க உத்தரவு.
தொடக்கக் கல்வி துறையின் கீழ் செயல்படும் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்கள் தத்தம் மாவட்டத்தில் 01.06.2013 அன்றைய நிலவரப்படி தொடர்ந்து மூன்றாண்டுகளுக்கு மேல் ஒரே ஒன்றியத்தில் பணிபுரியும் உதவி / கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள் சார்பான விவரங்களை 22.03.2013-க்குள் அனுப்ப தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.
நாமக்கல் தனியார் பள்ளியில் முறைகேடு: 1,300 அறை கண்காணிப்பாளர்கள் மாற்றம்
பிளஸ் 2 தேர்வில், நாமக்கல் தனியார் பள்ளியில் முறைகேடு நடந்ததை தொடர்ந்து, 1,300 அறை கண்காணிப்பாளர்கள், அதிரடியாக மாற்றப்பட்டனர்.
சிவில் சர்வீஸ் தேர்வுகளில் புதிய மாற்றங்களால் மாநில மொழிகளுக்கு பாதகம்
"மத்திய அரசு பணியாளர் தேர்வாணயத்தின் புதிய விதிமுறைகளால், மாநில மொழியில் ஐ.ஏ.எஸ்., தேர்வு எழுதுபவர்கள், மிகவும் பாதிக்கப்படுவர்" என, சிவில் சர்வீஸ் பயிற்சி மைய இயக்குனர் ரவீந்திரன் கூறியுள்ளார்.
தேர்வு மைய அங்கீகாரம் பெறுவதில் தில்லுமுல்லு: விசாரணையில் அம்பலம்
நாமக்கல்லில், பிளஸ் 2 இயற்பியல் தேர்வு முறைகேடு தொடர்பாக, பள்ளிக்கல்வித் துறையினர் விசாரணையில், அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி வருகின்றன.
வணிக மேலாண்மை படிப்புகளுக்கு சிறப்பான எதிர்காலம்
வணிக மேலாண்மை படிப்புகள் முடிந்து வெளியேறும் மாணவர்களுக்கு அதிக சம்பளத்துடன் சிறப்பான எதிர்காலம் உள்ளது" என, தினமலர் நாளிதழ் நடத்திய நிகழ்ச்சியில் பேசிய வல்லுனர்கள் தெரிவித்தனர்.
இயற்பியல் வினாத்தாள் அவுட்?: கல்வித்துறையினர் ரகசிய விசாரணை - நாளிதழ் செய்தி
துறையூர் பள்ளியில், தேர்வு நேரத்துக்கு முன், வினாத்தாளை திறந்து பார்த்து, அதற்கான விடைகளை மாணவியருக்கு வழங்கிய தேர்வு கண்காணிப்பாளரிடம், கல்வி அதிகாரிகள் விசாரணை நடத்தியதாக, தகவல் வெளியாகி உள்ளது.
பள்ளிகளில் வைப்பறையுடன் கூடிய சமையலறைகள் - 360 கோடி ஒதுக்கீடு
தமிழகத்தில், 14,130 பள்ளிகளில், வைப்பறையுடன் கூடிய சமையலறைகள் கட்டுவதற்கு, 360 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
Saturday, March 16, 2013
TNPSC - DEPARTMENTAL EXAMINATION MAY 2013 - NOTIFICATION RELEASED
List of Current Notifications | ||||||
S No. | Advt. No./ Date of Notification | Notification | Online Registration | Date of Examination | Activity | |
From | To | |||||
1 |
15.03.2013
|
Deptl.Exam May'2013
|
15.03.2013 | 15.04.2012 |
24.05.2013 to 31.05.2013 |
Apply Online |
மத்திய அரசு ஊதியம் வழங்க கோரி ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆர்ப்பாட்டம்
மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையாக இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் கரூர் கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
26 ஒன்றியங்களில் மாதிரிப் பள்ளிகள் அமைப்பு: முதல்வர் உத்தரவு
தமிழ்நாட்டில் 26 ஒன்றியங்களில் மாதிரி பள்ளிகள் அமைக்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பள்ளிகள் இல்லாத கிராமமே இருக்கக்கூடாது என்பதன் அடிப்படையில் கல்வியில் பின்தங்கியுள்ள ஒன்றியங்களில் வசிக்கும்
கலையாசிரியர்கள் தொகுப்பூதியம் உயர்வு
தமிழ்நாடு சவகர் சிறுவர் மன்றங்களின் கலையாசிரியர்கள் மற்றும் திட்ட அலுவலர்களுக்கான தொகுப்பூதியத்தினை உயர்த்திட தமிழக முதல்வர் ஆணையிட்டுள்ளார்.
162 புதிய பி.எட்., கல்லூரிகள் துவங்க விண்ணப்பங்கள்: துணைவேந்தர்
தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில், 162 பி.எட்., கல்லூரிகள் துவக்க, விண்ணப்பங்கள் வந்துள்ளன என, தமிழ்நாடு ஆசிரியர் கல்வி பல்கலை துணைவேந்தர் விஸ்வநாதன் தெரிவித்தார்.
திருந்தவே திருந்தாத ஜென்மங்கள்! - நாளிதழ் செய்தி
பள்ளி மாணவியரிடம், ஆசிரியர் ஆபாசமாக பேசி வருவதாக எழுந்த புகாரை தொடர்ந்து, முதன்மைக் கல்வி அலுவலர் விசாரணை நடத்தினார்.
குளறுபடிகள் நிறைந்த வணிகவியல் தேர்வு - நாளிதழ் செய்தி
தமிழகம் முழுவதும் நடந்த வணிகவியல் தேர்வு வினாத்தாளில், பல இடங்களில்
எழுத்து பிழைகள் இருந்தன.
பள்ளி துவங்குவதற்குள் ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு : பள்ளி கல்வி துறை திட்டம்
ஜூன் மாதம், பள்ளிகள் திறந்தபின், ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வை நடத்தினால், ஆசிரியர்கள், பாடம் நடத்துவதில் கவனம் செலுத்தாமல், விரும்பும் இடங்களுக்கு, மாறுதல் வாங்குவதிலேயே, கவனம் செலுத்துகின்றனர்.
ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆர்ப்பாட்டம்
6 ஆவது ஊதிய மாற்ற முரண்பாடுகளை களைந்திடும் வகையிலான 3 நபர் குழு அறிக்கையை பகிரங்கமாக வெளியிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூரில் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பிப்ரவரி மாத சம்பளத்தை வழங்காததால் உதவி தொடக்கக்கல்வி அதிகாரி கூட்டத்தை ஆசிரியர்கள் புறக்கணிப்பு
பிப்ரவரி மாத சம்பளத்தை இன்னும் வழங்காததால் கடலூரில் நேற்று உதவி தொடக்கக்கல்வி அதிகாரி கூட்டிய கூட்டத்தை தலைமை ஆசிரியர்கள் புறக்கணித்தனர்.
ஆசிரியர் தகுதித் தேர்வை கைவிட வேண்டும் - தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி
ஆசிரியர் தகுதித் தேர்வை முழுமையாகக் கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, திருநெல்வேலியில் ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கூட்டுறவு சங்கத் தேர்தலுக்கு பார்வையாளர்கள் நியமனம்
தமிழகம் முழுவதும் நடக்க உள்ள கூட்டுறவு சங்கத் தேர்தலுக்கு பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக கூட்டுறவு சங்கத் தேர்தலுக்கான தேர்தல் ஆணையர் ரா.மோகன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கூட்டுறவு சங்க தேர்தல் தொடர்பான சந்தேகங்களை அறிய, தொலைபேசி எண்கள் அறிவிப்பு
கூட்டுறவு சங்க தேர்தல் தொடர்பான சந்தேகங்களை அறிய, தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு கூட்டுறவு சங்க தேர்தலை நடத்த, கூட்டுறவு சங்க தேர்தல் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்தியப் பெண்கள் ஆரம்பக் கல்வி பெறுவது முதல் பல்வேறு சிக்கல்களை எதிர் நோக்கி வருகின்றனர்.
இந்தியா முழுவதும் பல அரசாங்கப் பள்ளிகள், தனியார் பள்ளிகள் முதலானவற்றில் பெண்கள் சுமூகமாகக் கல்வி கற்க வாய்ப்பே குறைவாக உள்ளது. உங்களுக்குத் தெரியுமா எத்தனை பள்ளிகளில் பெண்களுக்குக்
GATE தேர்விற்கான முடிவுகள் அறிவிக்கபட்டுள்ளன
கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற GATE எனப்படும் Graduate Aptitude Test in Engineering தேர்விற்கான முடிவுகள் அறிவிக்கபட்டுள்ளன.
Friday, March 15, 2013
தமிழகம் முழுவதும் கலை,அறிவியல் கல்லூரிகளுக்கு காலவரம்பற்ற விடுமுறை
இலங்கைக்கு எதிராக தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் மாணவர்கள் காலவரம்பற்ற உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு கால வரம்பற்ற விடுமுறை தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
குரூப் 1 தேர்வில் வென்ற ஆசிரியருக்கு பாராட்டு
குரூப் 1 தேர் வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. தோட்டக்குறிச்சி அரசு உயர்நிலைப்பள்ளியில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர் செல்வம் குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்று துணைஆட்சியர் பணிக்கு தேர்வு பெற்றுள்ளார்.
கோரிக்கைகளை வலியுறுத்தி பட்டதாரி ஆசிரியர்கள் கரூரில் ஆர்ப்பாட்டம்
பட்டதாரி ஆசிரியர் கழகத்தினர் கோரிக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். எம்ஜிஆர் அளித்த அரசாணை 720ல் எந்த மாற்றமும் செய்யக்கூடாது. புதிய தன்பங்கேற்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து மீண்டும் வரையறுக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், ஒருமாத ஊதியத்தை போனசாக வழங்க வேண்டும்.
மத்திய அரசு பணியாளர் தேர்வு முறை மாற்றங்கள் நிறுத்தம்
மத்திய அரசுப் பணியாளர் தேர்வு முறையில் கொண்டுவரப்பட்ட பல்வேறு மாற்றங்கள் உடனடியாக நிறுத்தப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
10 கோடி மக்கள் பேசப்படும் மொழிகள் எத்தனை தெரியுமா?
உலக அளவில் 6500க்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்படுகின்றன. இதில் சுமார் 2000 மொழிகள் 1000த்திற்கும் குறைவான மக்கள் தொகையினரால் மட்டுமே பேசப்படுகின்றன.
பிளஸ் 2 கணிதத் தேர்வு கடினம்; மாணவர்கள், ஆசிரியர்கள் கவலை
பிளஸ் 2 மாணவர்களுக்கு, நேற்று நடந்த கணிதப் பாட தேர்வு, கடினமாகவும், எதிர்பார்க்காத கேள்விகள் சில கேட்கப்பட்டுள்ளதாகவும், மாணவர்கள், ஆசிரியர்கள், கருத்து தெரிவித்தனர்.
பிளஸ் 2 கணிதம்: ஆசிரியர், மாணவர் சொல்வது என்ன
"பிளஸ் 2 கணித தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகள் கடினமாக இருந்தன. மாணவர்களுக்கு மகிழ்ச்சியான உணர்வை தரவில்லை" என ஆசிரியர்கள், மாணவர்கள் கூறினர்.
பிளஸ் 2 கணிதம்: ஆங்கில வழி தேர்வர்கள் அதிருப்தி
பிளஸ் 2 மாணவர்களுக்கு, நேற்று நடந்த கணிதப் பாட தேர்வு, கடினமாகவும், எதிர்பார்க்காத கேள்விகள் சில கேட்கப்பட்டுள்ளதாகவும், மாணவர்கள், ஆசிரியர்கள், கருத்து தெரிவித்தனர்.
டி.என்.பி.எஸ்.சி., புதிய பாடமுறை: தமிழ் ஆர்வலர்கள் அதிர்ச்சி
டி.என்.பி.எஸ்.சி., புதிய பாடமுறையில், பொதுத்தமிழ் நீக்கம் செய்யப்பட்டிருப்பது, போட்டி தேர்வு எழுதும் மாணவர்களுக்கும், தமிழ் ஆர்வலர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Thursday, March 14, 2013
தலைமை ஆசிரியர் நியமனம் பிரச்னை டி.இ.இ.ஓ அலுவலகத்தை முற்றுகை
தேனி மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகத்தை தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் நேற்று முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பள்ளி வயது குழந்தைகளை கட்டாயம் பள்ளியில் சேர்க்க வேண்டும் கலெக்டர் பேச்சு
பள்ளி வயது குழந்தைகளை கட் டாயம் பள்ளியில் சேர்க்க வேண்டும் என கலெக்டர் பாஸ்கரன் பேசினார். தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அடுத்த குளமங்கலம் ஊராட்சியில் குளமங்கலம், பொன்னாப்பூர் கிழக்கு, மேற்கு, சின்ன பொன்னாப்பூர், நெய் வாசல், அரசப்பட்டு ஆகிய ஊராட்சிகள் பயனடையும் வகையில் மக்கள் நேர் காணல் முகாம் கலெக்டர் பாஸ்கரன் தலைமையில் நேற்று நடைபெற்றது.
ஆசிரியர் தகுதித் தேர்வு: தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு இலவசப் பயிற்சி
ஆசிரியர் தகுதித் தேர்வுக்குத் தயாராகும் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு இலவச சிறப்புப் பயிற்சி வகுப்புகள் சனிக்கிழமை (மார்ச் 16) தொடங்குகின்றன.
தனியார் பள்ளி தேர்வு மைய அங்கீகாரம் ரத்து: தேர்வுத்துறை நடவடிக்கை
நாமக்கல் அருகே, ப்ளஸ் 2 இயற்பியல் தேர்வு வினாத்தாளுக்குரிய விடை எழுதிய அட்டை, பள்ளி வளாகத்தில் கிடந்த விவகாரம் தொடர்பாக, சம்மந்தப்பட்ட தனியார் பள்ளியின் தேர்வு மைய அங்கீகாரத்தை, அரசு தேர்வுத்துறை இயக்குனர் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.
103 மாணவர் விடுதிகளில் சூரிய சக்தி மின் நிலையம்: 2013-14ல் அமல்
மின் பற்றாக்குறையை சமாளிக்க, தமிழக அரசின், 103 மாணவர் விடுதிகளில், சூரிய சக்தி மின் உற்பத்தி மேற்கொள்ளப்படுகிறது. சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையத்தை அமைத்து, ஐந்தாண்டுகள் பராமரித்து, மின் உற்பத்தி செய்யும் வகையில், ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு உள்ளன.
டி.என்.பி.எஸ்.சி., தேர்வுகள் நேர்மையாக நடக்கும்: புதிய தலைவர்
"டி.என்.பி.எஸ்.சி., தேர்வுகள், நேர்மையாக நடக்கும்; இதுகுறித்து, யாரும் பயப்பட வேண்டாம்" என, தேர்வாணையத்தின் புதிய தலைவர் நவநீதகிருஷ்ணன் கூறினார்.
டி.என்.பி.எஸ்.சி., தேர்விலும் தமிழ் மொழிக்கு பின்னடைவு
சிவில் சர்வீஸ் தேர்வைத் தொடர்ந்து, டி.என்.பி.எஸ்.சி., தேர்விலும், தமிழ் மொழி பாடத்திற்கான முக்கியத்துவம் குறைக்கப்பட்டுள்ளது. இது, கிராமப்புற தேர்வர்களுக்கு, பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
பார்லி., முன் ஏப்., 4ல் ஆசிரியர் கூட்டணி மறியல்: பொது செயலர் தகவல்
தொடக்கப்பள்ளி ஆசிரியர்களின் ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஏப்., 4ல், பார்லிமென்ட் முன் மறியல் போராட்டம் நடத்த உள்ளோம் என அகில இந்திய ஆசிரியர் கூட்டணி பொது செயலர், ஈஸ்வரன் கூறினார்.
தலைமை ஆசிரியர் இடமாற்றத்துக்கு மாணவர்கள் எதிர்ப்பு; ஆட்சியரிடம் மனு
பரமத்திவேலூர் தாலுகா, கபிலர்மலை ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக கோபாலகிருஷ்ணன், உதவி ஆசிரியராக சுந்தர்ராஜன் ஆகியோர் பணியாற்றி வந்தனர்.
ஐ.ஏ.எஸ். தேர்வில் புதிய கட்டுப்பாடு: முதல்வர் எதிர்ப்பு
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வில் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) கொண்டு வந்துள்ள புதிய கட்டுப்பாடுகளுக்கு முதல்வர் ஜெயலலிதா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
பள்ளி, கல்லூரிகளில் என்.சி.சி., விருப்ப பாடமாக சேர்க்க முடிவு
பள்ளி, கல்லூரிகளில், என்.சி.சி., விருப்ப பாடமாக சேர்க்கப்படும். என்.சி.சி., மாணவர்களுக்கு, வேலைவாய்ப்பில் சலுகை மதிப்பெண் வழங்கப்படும் என, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர், பல்லம் ராஜு தெரிவித்தார்.
Wednesday, March 13, 2013
3 நபர் குழு அறிக்கையை வெளியிட வேண்டும் நெல்லையில் 15ம் தேதி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் நெல்லையில் வரும் 15ம் தேதி ஆர்ப்பாட்டம் நடக்கிறது.தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயற்குழு கூட்டம் பாளையில் நடந்தது.
மாநிலம் முழுவதும் 1000 தொடக்க பள்ளியில் ஆங்கில வழிக்கல்வி
தமிழகம் முழுவதும் 1000 தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில், ஆங்கில வழிக்கல்வி முறையை கொண்டுவருவதற்கு பள்ளி கல்வித்துறை தீவிரம் காட்டி வருகிறது.கடந்த 2010-11ம் கல்வி ஆண்டில் தமிழகத்தில் சமச்சீர் கல்வி முறை அமல்படுத்தப்பட்டது.
மேல்நிலை வரைவு பாடத்திட்டம்: ஏப்ரலில் இணையத்தில் வெளியீடு
பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான வரைவு பாடத்திட்டம், அடுத்த மாதம், இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.
ஆசிரியர்கள் இடையே பனிப்போர்: ஆய்வு மாணவி அலைக்கழிப்பு
காரைக்குடி அழகப்பா பல்கலை தமிழ்துறை தலைவருக்கும், ஆசிரியர்களுக்கும் இடையே உள்ள பனிப்போரால், பிஎச்.டி., ஆய்வுக்கு அனுமதி மறுப்பதாக, மதுரை மாணவி பத்ரகாளி, தர்ணாவில் ஈடுபட்டார்.
முன்னதாகவே வழங்கப்பட்ட பிளஸ் 1 வினாத்தாள்கள்: கல்வித் துறை அதிகாரிகள் திடீர் சுறுசுறுப்பு
நெல்லை மாவட்டத்தில் மொத்தமாக பிளஸ் 1 வினாத்தாள் சப்ளை செய்யப்பட்டதை தொடர்ந்து கல்வித் துறை அதிகாரிகள் "திடீர்" சுறுசுறுப்பு அடைந்தனர்.
பின் தங்கிய மாணவர்கள் இடைநிறுத்தம்: தலைமை ஆசிரியர்களுக்கு "கிடுக்கிபிடி"
10ம் வகுப்பு தேறாத மாணவர்களை "ஆப்சென்ட்" ஆக்கும் திட்டத்திற்கு தலைமை ஆசிரியர்களுக்கு கிடுக்கிபிடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பிளஸ் 2 தேர்வு: நாமக்கல், ஈரோட்டில் கூடுதல் கண்காணிப்பு
பிளஸ் 2 மாணவர்களுக்கு, முக்கிய பாடங்களுக்கான தேர்வு துவங்கியுள்ள நிலையில், தனியார் பள்ளிகள் அதிகம் நிறைந்துள்ள நாமக்கல், ஈரோடு மாவட்டங்களை கண்காணிக்க, கூடுதல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
UPSC, TNPSC மற்றும் TET உள்ளிட்ட தேர்வுகளில், திறந்தநிலை பல்கலையில் படித்தவர்கள் அதிகளவில் அரசு பணிகளுக்கு தேர்வு
யு.பி.எஸ்.சி., டி.என்.பி.எஸ்.சி., டி.இ.டி., உள்ளிட்ட தேர்வுகளில், திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் படித்தோர் அதிகளவில் தேர்வாகி உள்ளனர்" என, உயர்கல்வித் துறை அமைச்சர் பழனியப்பன் கூறினார்.
கற்றல் குறைபாடுள்ள மாணவர்களுக்கு பயிற்சியளிக்க உத்தரவு
"தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும், கற்றலில் குறைபாடுள்ள மாணவர்களை கண்டறிந்து, ஒளி-ஒலி காட்சி மூலம் கற்பிக்க வேண்டும்" என, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.
Subscribe to:
Posts (Atom)