பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் மையங்களில் போராட்டம் நடத்த தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் முடிவு செய்துள்ளனர்.
தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட செயற்குழு கூட்டம் பாளை ஜான்ஸ் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. மாவட்ட தலைவர் அய்யாதுரை தலைமை வகித்தார்.
மொழிப் பாடங்களுக்கான விடைத்தாள் திருத்தும் பணி வரும் 26ம் தேதி ஆரம்பமாவதால் தேர்வு பணியில் ஈடுபடும் மொழி பாட ஆசிரியர்களை உடனடியா தேர்வு பணியில் இருந்து வடுவித்து விடைத்தாள் திருத்தும் பணிக்கான நியமன ஆணை வழங்க வேண்டும். விடைத்தாள் திருத்தும் மையங்களில் குடிநீர், கழிப்பறை வசதிகளை செய்ய வேண்டும்.
மருதகுளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட கண் பார்வையற்ற ஆசிரியைக்கு உரிய நீதி கிடைக்க வழி வகை செய்ய வேண்டும். இது சம்பந்தமான நடுநிலையான விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். ஆலங்குளத்தில் ஆசிரியர் மாணவர் விரோத போக்கை கடைபிடிப்பவர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாணவர்களிடம் விதிமுறைகளுக்கு மீறாக அதிகப்படியாக வசூலிக்கப்பட்ட கட்டணத்தை திரும்ப அளிக்க வேண்டும். மாணவர்கள், ஆசிரியர்களை தொடர்ந்து மிரட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து மாணவர்கள் மன நிம்மதியுடன் தேர்வு எழுத வழி வகை செய்ய வேண்டும்.
தேர்வு பணி நியமனத்தில் நடந்த குளறுபடிகள் விடைத்தாள் திருத்தும் பணி நியமனத்திலும் நடக்காத வகையில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். சீனியாரிட்டி முறை கடைபிடிக்க வேண்டும். தன் பங்கேற்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டமே தொடர வேண்டும்.
கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் மையங்களில் போராட்டம் நடத்தப்படும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

No comments:
Post a Comment