மத்திய அரசு தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளில் ஆங்கிலத்துக்கு முக்கியத்துவம் தரும் வகையில் செய்யப்பட்ட மாற்றங்கள் ரத்து செய்யப்படுவதாக மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.
இன்று மக்களவையில் பேசிய மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி, இந்தியாவில் முக்கிய அரசுப் பணிகளை நிரப்புவதற்காக யுபிஎஸ்சி நடத்தும் தேர்வுகளில், ஆங்கிலத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன.
இந்த மாற்றத்துக்கு இந்திய அளவில் பெரும் எதிர்ப்பு எழுந்ததை அடுத்து, இந்த மாற்றங்கள் ரத்து செய்யப்படுவதாகவும், மொழித் தாள்களின் மதிப்பெண்களை கணக்கிடுவதில் இதுவரை இருந்த முறையே பின்பற்றப்படும் என்றும் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
யுபிஎஸ்சி தேர்வில் ஆங்கிலம் மற்றும் இந்திய மொழிகளுக்கான தேர்வில் எடுக்கும் மதிப்பெண்கள், ரேங்க்கை மதிப்பிட பயன்படுத்தப்பட மாட்டாது. அவ்விரு மொழிகளிலும் ஒருவர் பெற்றுள்ள திறனை அறிந்து கொள்ள மட்டுமே அத்தேர்வுகள் நடத்தப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment