பிளஸ் 2 தேர்வு எழுதியுள்ள மாணவர்கள் அதன் பின்னர் என்ன மேற்படிப்பு படிக்கலாம் என்பதற்கான இலவச கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி மற்றும் இவர்களின் பெற்றோருக்கான ஆலோசனை வழங்கும் நிகழ்ச்சி கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் மார்ச் 31ம் தேதி நடைபெறுகிறது.
இது குறித்து பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் கூறியதாவது:
பிளஸ் 2 தேர்வு எழுதி முடித்துள்ள மாணவர்கள், தங்கள் தகுதிக்கேற்ற தொழில்கல்வியை எவ்வாறு தேர்ந்தெடுப்பது? தேர்ந்தெடுக்கும் படிப்பிற்கு வேலைவாய்ப்புகள் எப்படி? என்பது குறித்து வழிகாட்டுவதற்கான சிறப்பு நிகழ்ச்சியை கலசலிங்கம் பல்கலைக்கழகம் இலவசமாக ஏற்பாடு செய்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் பிரபல கல்வியாளர் எம்.ரமேஷ்பிரபா கலந்து கொண்டு மாணவர்களுக்கும் அவர்களின் பெற்றோருக்கும் சிறந்த ஆலோசனைகளை வழங்குகிறார்.
இந்த கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களுக்காக அருப்புக்கோட்டை, விருதுநகர், சிவகாசி, ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், கிருஷ்ணன்கோவில், வத்திராயிருப்பு உள்ளிட்ட ஊர்களில் இருந்து பல்கலைக்கழக பேருந்து இலவசமாக இயக்கப்படுகிறது.
இதில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கும் அவர்களின் பெற்றோருக்கும் மதியம் இலவசமாக உணவு வழங்கப்படும். இந்த வழிகாட்டும் நிகழ்ச்சி பல்கலைக்கழகத்தில் உள்ள டாக்டர் கே.எஸ்.கிருஷ்ணன் கலையரங்கில் காலை 9.30 மணி முதல் பகல் 1 மணி வரை நடைபெறும். நிகழ்ச்சிக்கு வேந்தர் க.ஸ்ரீதரன் தலைமை தாங்குகிறார்.
இது குறித்து மேலும் விவரங்களுக்கு 94875-51111 மற்றும் 94424-40249 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றார்.

No comments:
Post a Comment