தொடக்கக் கல்வி துறையில் பணிபுரியும் ஆசிரியர்களில் 10+2+3 என்ற முறையில்
கல்வி பயிலாமல் தற்போது ஆசிரியர்களாக பணிபுரிபவர்களின் விவரங்களை உரிய
படிவத்தில் அளிக்க இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவில் கூறியிருப்பதாவது:
ஊராட்சி ஒன்றிய / நாகராட்சி / மாநகராட்சி / அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்
பள்ளிகளில் 10+2+3 என்ற முறையில் கல்வி பயிலாமல் தற்போது பணிபுரியும்
ஆசிரியர்களின் ஒன்றிய வாரியான எண்ணிக்கை விவரங்களை உரிய படிவங்களில்
26.03.2013 தேதியன்று தொடக்கக் கல்வி இயக்ககத்தில் நடைபெறும் ஆய்வுக்
கூட்டத்தில் அளித்திட அனைத்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்கள் கேட்டு
கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் இது சார்ந்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தவர்களின் விவரங்களை அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. வழக்கு தொடுத்து தீர்ப்பாணை பெற்றவர்களில் தீர்ப்பாணையின் நகலினையும் கொண்டு வர அனைத்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களும் கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

1 comment:
I am Muralitharan from Coimbatore. My appointment date is 1-6-1988.Istudied 10+D.T.Ed+Degree+B Ed The court judgement said 10+D T Ed is equal to *2 They are also eligible for B,T promotion.But education dept did not give promotion. Why? Please pass this message to all fedaration and to education minister
Post a Comment