தமிழகத்தில் அதிமுக ஆட்சிக்கு வந்த பின்னர் சுமார் 2 லட்சம் அரசு காலிப் பணியிடங்கள் நிரப்பப் பட்டதாக உள்ளாட்சித் துறை அமைச்சர் கே.பி. முனுசாமி தெரிவித்தார்.
தமிழக சட்டப் பேரவையில் கேள்வி நேரம் முடிந்ததும், அவசர பொது முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகள் குறித்த கவன ஈர்ப்புத் தீர்மானத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கொண்டு வந்தன.
அதில் பேசிய, மார்க்சிஸ்ட் உறுப்பினர் சவுந்தரராஜன், தமிழக அரசின் பல்வேறு துறைகளின் காலிப்பணியிடங்களைப் பட்டியலிட்டார். ஆனால், உள்ளாட்சித் துறை அமைச்சர் கே.பி. முனுசாமி இதனை மறுத்தார்.
முன்னதாக தமிழகம் முழுவதும் அரசு பணியிடங்கள் லட்சக்கணக்கில் நிரப்பப்படாமல் இருப்பதாக சட்டப் பேரவையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது. பல்வேறு நலத் திட்டங்கள் மக்களை எளிதில் சென்றடைய இந்த காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டியது அவசியம் என்று அந்த கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன் வலியுறுத்தினார்.
No comments:
Post a Comment