"பத்தாம் வகுப்பு தமிழ் முதல்தாள் வினாக்கள் மிகவும் எளிமையாக இருந்தன" என, மாணவர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
மாணவர் நிஜந்தன், எம்.ஏ.வி.எம்.எம்., மெட்ரிக் பள்ளி, மதுரை: தமிழ் முதல்தாள் வினாக்கள் எளிமையாக இருந்தன. ஒரு மதிப்பெண் வினாக்களில் பூர்த்தி செய்தல், தேர்ந்தெடுத்து எழுதுதல் என, 2 வினாக்கள் மிக கடினமாக இருந்தன. செய்யுள் பகுதி எதிர்பாராத வகையில் இருந்தன. வழக்கமாக மனப்பாட பகுதியில் 1 செய்யுளே கேட்பர். இப்போது 2 செய்யுள்கள் கேட்டிருந்தனர். உரைநடை பகுதி வினாக்கள் எளிமையாக இருந்தன. குறிப்பிட்ட நேரத்திற்குள் எழுத முடிந்தது.
மாணவி சுஷ்மிதா தேவி, அரசு உயர்நிலைப்பள்ளி, வண்டியூர்: செய்யுள், உரைநடை என இரண்டிலும் எளிதாக விடையளிக்க முடிந்தது. ஒரு மதிப்பெண் வினாக்களில் 7வது வினாவான, "உலகம், உயிர், கடவுள் மூன்றையும் ஒருங்கே கூறும் காவியம்" என்ற வினா மிக கடினமாக இருந்தது. அரையாண்டு, திருப்புதல் தேர்வுகளில் கேட்கப்பட்டு இருந்த வினாக்களில் பல வந்திருந்தன. 100க்கு 95 மதிப்பெண்களுக்கு மேல் கிடைக்கும்.
எம்.சக்திகுமார், அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர், அலங்காநல்லூர்: ஒரு மதிப்பெண் வினாக்களில் 2, புத்தகத்தின் உள்பகுதியில் இருந்து நுணுக்கமாக கேட்டிருந்தனர். இதனால் மாணவர்கள் திணறி இருப்பர்.
குறு, சிறுவினாக்கள் புளூபிரின்ட்படி கேட்கப்பட்டு இருந்தன. நெடுவினா, செய்யுள் வினாக்களில் பல எதிர்பார்க்காதது மட்டுமின்றி இதுவரை கேட்காத வினாக்கள் வந்திருந்தன. மனப்பாடச் செய்யுள் கம்பராமாயணம், சீறாப்புராணத்தில் கேட்கப்பட்டு இருந்தாலும், மாணவர்கள் நன்கு எழுதியுள்ளனர். சாதாரண மாணவர்களும் எளிதாக 50 மதிப்பெண்கள் பெறலாம். தமிழ் மொழியில் அறிவியல் சிந்தனைகள் பாடத்தில் வினாக்கள் நுணுக்கமாக கேட்கப்பட்டு இருந்தன. இவ்வாறு கூறினர்.

No comments:
Post a Comment