இன்று பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு ஒரு கேள்வியைப் படித்ததும் கடும் அதிர்ச்சி. தமிழ் 2வது தாளில் 38வது கேள்வியாக,"வங்கிக் கணக்கில் பணம் செலுத்தும் படிவத்தில் நிரப்புக என்று கூறப்பட்டிருந்தது. இதற்கு 5 மதிப்பெண்கள். ஆனால், இதனுடனான படிவம்
அச்சிடப்படவில்லை அல்லது இணைத்துக் கொடுக்கப்படவில்லை. இதனால், கிராமப்புற மாணவர்கள் பெரிதும் குழப்பமடைந்தனர். அந்த இடத்தில் உமது பதிவு எண்ணை மட்டும் நிரப்புக என்று வேறு குறிப்பிடப்பட்டிருந்ததாம். இதனால் குழப்பம் அடைந்த மாணவர்கள் இது குறித்து தேர்வு கண்காணிப்பாளரிடம் முறையிட்டனர். இதனால் இத்தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களுக்கும் கேள்வி எண்ணை பதிவு செய்யாவிட்டாலும் முழு மதிப்பெண்களை வழங்கும் என்று எதிர்ப்பார்க்கின்றனர்.
No comments:
Post a Comment