பிளஸ் 2 விடைத்தாள் திருத்தம் செய்யும் பணியில், இந்தாண்டு "திருத்தம் இல்லாத திருத்தம் ஆண்டு" பிழை இல்லாமல் திருத்தம் செய்யப்படவுள்ளது என கல்வித்துறை அமைச்சர் வைகைச்செல்வன் தெரிவித்தார்.
பிளஸ் 2 விடைத்தாள் திருத்தம் செய்யும் பணிகள், தமிழகம் முழுவதும், 55 மையங்களில் துவங்கியுள்ளது. இந்தாண்டு தேர்வு மார்ச் 27ல் முடிகிறது. அதற்கு முன்பாகவே விடைத்தாள் திருத்தும் பணி துவங்கியுள்ளது. இப்பணியை விரைந்து முடித்து, தேர்வு முடிவுகளை முன் கூட்டியே வழங்க, பள்ளிக்கல்வித்துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
விருதுநகர் சத்திரிய பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், விடைத்தாள் திருத்தம் செய்யும் பணியை, கல்வித்துறை அமைச்சர் வைகைச்செல்வன் ஆய்வு செய்தார். அங்கு ஆசிரியர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தரும்படியும், இடையூறு இன்றி ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணிகள் நடக்கவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
அவர் கூறுகையில், "தேர்வு முறையில் புதிய திட்டத்தை கொண்டு வந்துள்ளோம். பள்ளி கல்வித்துறை செயலர் மற்றும் இயக்குனர்களுடன் ஒரு ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்டபோது, பொதுத்தேர்வு விடை தாள்களை ஆசிரியர்கள், பிழையில்லாமல் திருத்த வேண்டும், என முடிவு செய்தோம். அதற்கு "திருத்தம் இல்லா திருத்தம் ஆண்டு&' என இருக்க வேண்டும் என்று, நான் குறிப்பிட்டேன்.
ஆசிரியர்கள் விடை தாள்களை திருத்துவதற்கு முன், ஒரு உறுதிமொழி எடுத்து கொள்ள வேண்டும். அதன்படி, திருத்தும் பணியை சுமையாக கருதாமல், சுகமாக எண்ண வேண்டும். மகிழ்ச்சியுடன் இப்பணியில், ஆசிரியர்கள் ஈடுபட்டால் தான், பிழைகள் இல்லாமல் திருத்த முடியும்" என்றார்.

No comments:
Post a Comment