Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Sunday, March 24, 2013

    ராஜபக்சேவை போர் குற்றவாளியாக அறிவிக்க வலியுறுத்தி ஆசிரியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

    ராஜபக்சேவை போர் குற்றவாளியாக அறிவிக்க வலியுறுத்தி ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் சிவகங்கை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழக தமிழாசிரியர் கழக மாநில துணைச் செயலாளர் இளங்கோ வரவேற்றார்.
    உயர்நிலை மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்டத் தலைவர் சேதுச்செல்வம் தலைமை வகித்தார். ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டத் தலைவர் முத்துப்பாண்டி, மேல்நிலைப் பள்ளி முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்டத் தலைவர் உதயசங்கர், உடற்கல்வி இயக்குநர் ஆசிரியர் சங்க மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர் சின்னையா அம்பலம், ஆங்கில மொழியாசிரியர் கழக மாநில பொதுச் செயலாளர் சேவியர், தமிழாசிரியர் கழக மாவட்ட பொறுப்பாளர் நாகேந்திரன், இடைநிலை ஆசிரியர் சங்க மாநிலத் துணைத் தலைவர் சங்கர், வரலாற்று ஆசிரியர் கழக மாநில பொதுச் செயலாளர் பழனியப்பன், பகுதிநேர ஆசிரியர் கழக மாவட்டத் தலைவர் குமரேசன் கண்டன உரையாற்றினர். உயர்நிலை மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்டச் செயலாளர் முத்துச்சாமி நன்றி கூறினார். இலங்கைக்கு எதிராக பன்னாட்டு விசாரணை மேற்கொள்ள வேண்டும். இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும். இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவதை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. தேவகோட்டையில் கல்லூரி மாணவர்கள் ஊர்வலம்: இலங்கை மீது உலக நாடுகள் பொருளாதார தடை விதிக்கவேண்டும், ராஜபக்சேயை இனப்படுகொலை குற்றவாளியாக அறிவிக்க வேண்டும், தமிமீழம் அமைய பொதுவாக்கெடுப்பு நடத்தவேண்டும். தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் தடுக்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேவகோட்டையில் தனியார் கல்லூரியை சேர்ந்த முன்னாள் மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களோடு முன்னதாக தேவகோட்டை ராம்நகரில் இருந்து ஊர்வலமாக சென்றனர். ஊர்வலத்திற்கு காரல்மார்க்ஸ் தலைமை வகித்தார். பின்னர் தலைமைத்தபால் அலுவலகம் முன்பு இலங்கை அரசிற்கு எதிராக கோஷமிட்டனர். ஐநா சபை தீர்மான நகலை எரிக்க முயன்றனர். இந்த ஊர்வலத்தில் மாணவ, மாணவிகள் உள்பட பல்வேறு அமைப்புகளும் பங்கேற்றன. இலங்கை அரசை எதிர்க்கும் இளம்பெண் இளையான்குடி ஜாகிர்உசேன் கலைக்கல்லூரியில் கணிதப்பிரிவில் படிக்கும் முதலாம் ஆண்டு மாணவி சித்ராதேவி. இவர் இலங்கை அரசை கண்டித்தும், தமிழீழம் அமைக்க பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலைக்கிராமம் பஸ் ஸ்டாண்ட் அருகே உண்ணாவிரத போராட்டத்தில் இறங்கினார். இவருக்கு ஆதரவாக பொதுமக்களும் களமிறங்கினர். மேலும், திராவிட கழக நகர செயலாளர் சேது ஜெகதீசன், தமிழர் களம் ஒன்றிய நிர்வாகி ராமு, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் ஆல்பர்ட் மற்றும் பொதுமக்கள், வியாபார சங்க நிர்வாகிகளும் இந்த மாணவிக்கு ஆதரவாக உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்றனர்.

    No comments: