பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையினர் வகுப்பைச் சேர்ந்த, கல்லூரி மாணவர்களுக்கு, ஆங்கில பேச்சுப் பயிற்சி அளிப்பதற்காக, பயிற்சி நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளன.
தமிழகம் முழுவதும், 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள், 160 விடுதிகளில் தங்கி படித்து வருகின்றனர். இவர்களில், முதலாண்டு மற்றும் இரண்டாமாண்டு பயிலும் மாணவர்களின், ஆங்கில பேச்சுப் பயிற்சியை வளர்ப்பதற்கு, "ஆங்கில பேச்சு பயிற்சி சிறப்பு வகுப்புகள்" நடத்த, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை முடிவு செய்தது.
இதன்படி, மாணவர்களின் பேச்சாற்றலை மேம்படுத்த, ஒரு மாணவருக்கு, 2,800 வீதம், 6,500 மாணவ, மாணவியருக்கு சிறப்பு பயிற்சி அளித்திட, 1.83 கோடி ரூபாய், நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆங்கில பயிற்சி அளிப்பதற்காக, ஏழு நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
இந்நிறுவனங்கள், அடுத்த மாதம், 27ம் தேதிக்குள், ஆரம்பகட்ட பணிகளை துவங்க அறிவுறுத்தப்பட்டு உள்ளன. அடுத்த கல்வியாண்டின் துவக்கத்தில் இருந்து, கல்லூரி மாணவர்களுக்கு, ஆங்கில பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும் என, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:
Post a Comment