பட்டதாரி ஆசிரியர் கழகத்தினர் கோரிக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். எம்ஜிஆர் அளித்த அரசாணை 720ல் எந்த மாற்றமும் செய்யக்கூடாது. புதிய தன்பங்கேற்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து மீண்டும் வரையறுக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், ஒருமாத ஊதியத்தை போனசாக வழங்க வேண்டும்.
தொகுப்பூதியத்தில் பணியாற்றியவர்களை பணிவரன் முறைப்படுத்த வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் மகேஷ்வரன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் செங்குட்டுவன், நவமணி, ஜெகதீசன், தட்சிணாமூர்த்தி, சரவணன் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் யோவேல் துவக்கி வைத்து பேசினார். முன்னாள் மாநில பொதுச்செயலாளர் ஆனந்தன் விளக்கவுரையாற்றினார். தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ரஞ்சித்குமார், ஜெயச்சந்திரன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். மாவட்ட பொருளாளர் கண்ணையன் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment