Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Saturday, March 16, 2013

    கூட்டுறவு சங்கத் தேர்தலுக்கு பார்வையாளர்கள் நியமனம்

    தமிழகம் முழுவதும் நடக்க உள்ள கூட்டுறவு சங்கத் தேர்தலுக்கு பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக கூட்டுறவு சங்கத் தேர்தலுக்கான தேர்தல் ஆணையர் ரா.மோகன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
    தமிழ்நாட்டில் கூட்டுறவுச் சங்கங்களுக்கான தேர்தல் ஐந்து நிலைகளில் நடைபெறும் என்றும் முதல்நிலையில் தேர்தல் நடைபெறும் 22,192 கூட்டுறவுச் சங்களுக்கான தேர்தல் ஏப்ரல் 5-ம் தேதி தொடங்கி நான்கு கட்டங்களாக நடைபெறும் என்றும், கூட்டுறவுச் சங்கங்களுக்கான தேர்தல் ஆணையம் கடந்த 4.3.13 அன்று அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து கூட்டுறவுச் சங்களுக்கான தேர்தல் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.

    மாநில தேர்தல் அலுவலர்கள்:-

    கூட்டுறவுச் சங்கங்களுக்கான தேர்தலை நடத்த மாநிலத் தேர்தல் அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

    பெ.சீத்தாராமன், உ.சகாயம், மகேசன் காசிராஜன், டாக்டர் முத்துவீரன், எம்.ராஜேந்திரன், டாக்டர்.டி.கே.ராமச்சந்திரன், மீனாட்சி ராஜகோபால், சி.முனியநாதன், அரமந்தர்சிங் ஆகிய ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், மாநில தேர்தல் அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

    கூட்டுறவுச் சங்கங்களுக்கான தேர்தல்கள் நியாயமாகவும், அமைதியாகவும், விதிமீறல்கள் இன்றியும் நடைபெறுவதை கண்காணிக்க மாவட்டத்திற்கு ஒரு அலுவலர் வீதம் 32 அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். சென்னை மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் கூடுதல் பதிவாளர் சென்னை மாவட்ட தேர்தல் பார்வையாளராகவும், கூட்டுறவுச் சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர்கள் நிலையில் இதர மாவட்டங்களுக்கு தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்தத் தேர்தல் பார்வையாளர்கள் மாவட்ட முழுவதிலும் உள்ள பதிவாளர் மற்றும் செயல்பதிவாளர்களின் கட்டுப்பாட்டிலுள்ள அனைத்துவகை கூட்டுறவுச் சங்களுக்கும் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

    பார்வையாளர்கள் விபரம்:-

    தமிழகத்தில் நடைபெறவுள்ள கூட்டுறவுச் சங்கத் தேர்தல்களை மேற்பார்வையிட நியமிக்கப்பட்டுள்ள மாவட்ட வாரியான பார்வையாளர்கள் விபரம் வருமாறு:

    கூடுதல் பதிவாளர் ஆர்.எம்.ஜெயம்பாண்டியன் சென்னை, இணைப்பதிவாளர்கள்: முருகன் அரியலூர், ஆர்.இராமமூர்த்தி கோயம்புத்தூர், பி.ரேணுகாம்பாள் கடலூர், எஸ்.இராமதாஸ் தர்மபுரி, டி.செல்வகுமார் திண்டுக்கல், டி.பிரபு ஈரோடு, எம்.உமாமகேஸ்வரி பெரம்பலூர், கே.வி.எஸ்.குமார் புதுக்கோட்டை, பி.ஆரோக்கியசுகுமார் இராமநாதபுரம், வி.லட்சுமி சேலம், ஜி.காந்தநாதன் சிவகங்கை, எம்.அந்தோணிசாமி ஜான்பீட்டர் தஞ்சாவூர், கே.எம்.வெள்ளியங்கிரி தேனி, ஆர்.தயாளன் திருநெல்வேலி, எஸ்.பாபு திருப்பூர், ஏ.ஜி.சந்திரசேகர் திருவள்ளூர், ஆர்.பிருந்தா திருவாரூர், ஜி.ராஜேந்திரபிரசாத் திருச்சி, கே.பாண்டியன் தூத்துக்குடி, திருகுண ஐயப்பத்துறை திருவண்ணாமலை, எஸ்.ஆர்.வெங்கடேசன் வேலூர், ஏ.பாலகிருஷ்ணன் விழுப்புரம், எஸ்.குருமூர்த்தி விருதுநகர்.

    இவர்களுக்கு கூட்டுறவுத் தேர்தல்களை திறம்பட நடத்துவதற்கு அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கும் மார்ச் 2 மற்றும் 3-ம் தேதி சென்னையில் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டன, தேர்தல் பார்வையாளர்களுக்கான பயிற்சி வகுப்பு மார்ச் 10-ம் தேதி நடத்தப்பட்டது.

    முதல் நிலையில், நான்கு கட்டங்களாக நடைபெறும் தேர்தலின்போது, வாக்காளர் பட்டியல் வெளியிடுதல், வேட்புமனு தாக்கல் செய்தல், தேர்தல் நடத்துதல், பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு அறிவித்தல் ஆகிய முக்கியமான நிகழ்வுகளின்போது அசம்பாவிதம் ஏதும் நடக்காமல் தடுக்க போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ள காவல்துறையை ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது என்று தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளளார்.

    No comments: