பிளஸ் 2 மாணவர்களுக்கு, நேற்று நடந்த கணிதப் பாட தேர்வு, கடினமாகவும், எதிர்பார்க்காத கேள்விகள் சில கேட்கப்பட்டுள்ளதாகவும், மாணவர்கள், ஆசிரியர்கள், கருத்து தெரிவித்தனர்.
கணக்கு வினாத்தாள் கடினமாக இருப்பதாக கூறி, பல தேர்வு மையங்களில், ஆங்கில வழி மாணவியர் கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.
திருச்சி சத்திரம் பஸ் ஸ்டாண்ட் அருகேயுள்ள, செயின்ட் ஜோசப் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தில், கணக்கு வினாத்தாளை பார்த்து, ஒரு மாணவன் தேர்வு எழுதவே மறுத்து, தேர்வு அறையிலிருந்து வெளியேறினார். அவரை ஆசிரியர்களும், கல்வித் துறை அதிகாரிகளும் சமரசம் செய்து, தேர்வெழுத வைத்தனர்.
இதற்கு நேர்மாறாக தமிழ் வழியில் பயின்ற மாணவ, மாணவியர், கணக்கு வினாத்தாள் எளிமையாக இருந்ததாகவும், ஏற்கனவே முந்தைய தேர்வுகளில் கேட்கட்டப்படிருந்த கேள்விகள் பல, மீண்டும் கேட்கப்பட்டுள்ளதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
மதுரையில் பிளஸ் 2 தேர்வில், கணக்கு பாடத்தின் கேள்விகள் கடினமாக இருப்பதாக கருதிய, பிளஸ் 2 மாணவர், பள்ளி மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றார்.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டியை சேர்ந்த 17 வயது மாணவர், இங்குள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படிக்கிறார். நேற்று கணக்கு தேர்வு எழுதினார். கேள்விகள் கடினமாக இருப்பதாக கருதினார்.
தேர்வு எழுதிக் கொண்டிருந்தபோது, சிறுநீர் கழித்து விட்டு வருவதாக ஆசிரியரிடம் கூறிவிட்டு, வெளியில் சென்றார். பின், பள்ளி மாடிக்கு சென்று, கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றார். காயமடைந்தவரை வாடிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அவர் கூறுகையில், "கணக்கு கேள்விகள் மிகவும் கடினமாக இருந்தது. பத்து மார்க் கேள்விகளில், இரண்டு மட்டும் தான் எனக்கு தெரியும். மற்ற கேள்விகள் தெரியாது. தேர்வில் தோல்வியடைந்து விடுவேன் என முடிவு செய்தேன். இதனால், தற்கொலைக்கு முயன்றேன்" என்றார்.
கணித தேர்வு, கடினமாக இருந்தது என, மாணவர்கள் புலம்பியதற்கு ஏற்ப, 43 மாணவர்கள் பிட் அடித்து, பறக்கும் படை குழுவினரிடம் பிடிபட்டு, தேர்வு அறைகளில் இருந்து, வெளியேற்றப்பட்டனர்.
விடைத்தாளை மாற்றி தேர்வு எழுதிய மாணவர்கள் வெளியேற்றம்: திருச்செங்கோட்டில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில், ப்ளஸ் 2 கணித தேர்வில், விடைத்தாளை மாற்றி தேர்வு எழுதிய இரு மாணவர்களை, அறைக் கண்காணிப்பாளர் வெளியேற்றினார்.
நாமக்கல் மாவட்டம்திருச்செங்கோடு அருகே உள்ள தனியார் பள்ளி ஒன்றில், கணிததேர்வில் இரு மாணவர்கள், தங்கள் விடைத்தாளை மாற்றி எழுதினர். அதை கண்டறிந்த அறைக் கண்காணிப்பாளர், இரு மாணவர்களின் விடைத்தாளையும் பறிமுதல் செய்து, அவர்களை வெளியேறினார்.

No comments:
Post a Comment