Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Monday, March 18, 2013

    கூட்டுறவு சங்க தேர்தல் பணிக்காக செல்லும் ஆசிரியர்கள் முன்னதாக வாக்களிக்க அனுமதிக்க வேண்டும்

    கூட்டுறவு சங்க தேர்தல் பணிக்காக செல்லும் ஆசிரியர்களுக்கு முன்னதாக வாக்களிக்கும் வாய்ப்பை அளிக்க வேண்டும் என்று தமிழக ஆசிரியர் கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது.
    தமிழக ஆசிரியர் கூட்டணியின் திருப்பூர் மாவட்ட தலைவர் கனகராஜ் விடுத்துள்ள அறிகையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு முழுவதும் 4 கட்டங்களாக கூட்டுறவு சங்க தேர்தல்கள் நடைபறும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் வரும் ஏப்ரல் மாதம் 5ம் தேதி நடைபெறும் தேர்தலில் ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் உறுப்பினர்களாக உள்ள கூட்டுறவு சங்க தேர்தலும் நடைபெற உள்ளது.
    இந்ததேர்தல் நடக்கவுள்ள தேதி குறித்து ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்கள் இடையே மிகுந்த அதிருப்தி காணப்படுகிறது. வரும் ஏப்ரல் மாதம் 5ம் தேதி நடைபெற இருக்கும் கூட்டுறவு சங்க தேர்தலில் பிற கூட்டுறவு சங்க தேர்தல்களை நடத்து ம் அலுவலர்களாக வெளியூர்களுக்கு பெரும்பாலான ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
    இவர்கள் வெளியூர்களுக்கு தேர்தலை நடத்தி வைக்க சென்றுவிட்டால் தாங்கள் உறுப்பினர்களாக உள்ள கூட்டுறவு சங்க தேர்தலில் வாக்களிக்கும் உரிமையையும், வேட்பாளராக போட்டியிடும் வாய்ப்பையும் இழந்து விடுகிறார்கள். மேலும் கிறிஸ்துவர்களின் முக்கிய வழிபாட்டு நாளான புனித வெள்ளியன்று (வருகிற 23ம் தேதி) வேட்புமனு தாக்கல் செய்யும் நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறிப்பிட்ட ஒரு மதத்தை சார்ந்த ஆசிரியர்களும் செல்ல முடியாத சூழ்நிலையை உண்டாக்குகிறது. முந்தய தேர்தல்களில் ஆசிரியர்களுக்கும், அரசு ஊழியர்களுக்கும் அனைத்து துறையிலும் துறை வாரியாக பிரதிநிதித்துவம் வழங்கும் நிலை இருந்தது.
    தற்போது அனைத்து தொகுதிகளுக்கும் பொதுவான தொகுதிகளாக மாற்றப்பட்டுள்ளதால் அதிக எண்ணிக்கையில் உறுப்பினர்களை கொண்ட துறை மட்டுமே ஆதிக்கம் செலுத்தும் நிலையும், பிற துறைகளுக்கு பிரதிநிதித்துவம் கிடைக்காமல் போகும் வாய்ப்பும் உள்ளது.
    மேற்கண்ட நிலை வாக்களிக்கும் உரிமையையும், பிரதிநிதித்துவத்தையும் மறுப்பதாகவே கருதவேண்டி உள்ளது. எனவே இதனை மறுபரிசீலனை செய்து துறை வாரியாக தொகுதிகளை பிரித்து அறிவிக்கப்பட வேண்டும் .
    எனவே தேர்தல் பணிக்காக வெளியூர் செல்லும் ஆசிரியர்களுக்கும், அரசு ஊழியர்களுக்கும் முன்னதாகவே வாக்களிக்கும் வாய்ப்பயோ அல்லது அவர்கள் உறுப்பினர்களாக உள்ள கூட்டுறவு சங்க தேர்தல் தேதியையோ மாற்றி அறிவிக்க வேண்டும். தேர்தல் பணியாற்ற இயலாத நிலையில் உள்ளவர்களுக்கும், பெண்களுக்கும் அவர்கள் விருப்பத்தின் பேரில் தேவப்பட்டால் பணி நியமன ஆணையை ரத்து செய்து வழங்க வேண்டும். புனித வெள்ளியன்று நடைபெறுவதாக உள்ள மனுதாக்கல் தேதியை மற்றொரு நாளுக்கு மாற்றி அறிவிக்க வேண்டும். இதுபற்றி சம்பந்தப்பட்ட தேர்தல் அலுவலர்கள் உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

    No comments: