Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Tuesday, March 19, 2013

    தரம் உயர்ந்த கல்வியை அளிக்க வேண்டும்: ஆளுநர்

    உலகளாவிய போட்டிக்கு ஏற்ப தரம் உயர்ந்த கல்வியை கல்வி நிறுவனங்கள் அளிக்க வேண்டும் என்று சாயர்புரம் போப் கல்லூரியில் நடந்த விழாவில் தமிழக கவர்னர் ரோசையா தெரிவித்தார்.
    தூத்துக்குடி அருகே உள்ள சாயர்புரம் போப் கல்லூரி துவக்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவு பொன்விழா கொண்டாடட்டங்கள் நடந்து வருகிறது. இதன் நிறைவு விழா நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் ஆஷீஷ்குமார் தலைமை வகித்தார். கல்லூரி செயலாளர் நட்டர்ஜி வரவேற்றார். தூத்துக்குடி, நாசரேத் திருமண்டல பேராயர் ஜெபச்சந்திரன் பேசினார்.

    விழாவில் ஒரு கோடி மதிப்பிலான உள் விளையாட்டு அரங்கு, 1.4 கோடி ரூபாய் செலவில் பொன்விழாவை ஒட்டி கட்டப்படும் கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டியும், பொன்விழா அலங்கார வளைவை திறந்து வைத்தும், பொன்விழா மலரை வெளியிட்டும் தமிழக கவர்னர் ரோசையா பேசியதாவது;

    ஒரு கல்வி நிறுவனம் 50 ஆண்டுகள் பணியாற்றி பொன்விழா கொண்டாடுவது என்பது சாதனையாகும். இந்த சாதனையை நிகழ்த்தியுள்ள சாயர்புரம் போப் கல்லூரி நிர்வாகத்தினர் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கு பாராட்டுகளை தெரிவிக்கிறேன். இந்த கல்லூரியை பொறுத்தமட்டில் கிராமப்புற மாணவர்களுக்கு உயர்கல்வியை அளித்து வருவது பாராட்டக்குறியது. கிராமங்கள் முன்னேற்றம் அடைந்தால் தான் இந்தியா தன்னிறைவு பெற்ற நாடாக வரும் என்று மகாத்தமா காந்தி தெரிவித்தார்.

    காந்தியின் கூற்றுப்படி கிராமங்கள் முன்னேற்றம் அடைந்து அதன் மூலம் கிராம மக்களும் நல்ல முறையில் வளர்ச்சி பெற வேண்டும். அதற்கு நாம் அனைவரும் பாடுபட வேண்டும். ஒரு நாட்டில் கிராமங்களும், குடிமக்களும் முன்னேறினால் தான் அந்த நாடு முன்னேறிய நாடாக கருதப்படும். இந்த முன்னேற்றத்திற்கு கல்வி வளர்ச்சி என்பது முக்கியமான கருவியாகும். போப் கல்லூரியின் நோக்கமாக முதன்மையாக இரு. முதன்மையானவர்களுடன் இரு என்று உள்ளது. இது பெருமையாக இருக்கிறது. கிராமப்புறங்களில் உள்ள மாணவர்கள், இளைஞர்களுக்கு தரமான கல்வியை அர்ப்பணிப்பு உணர்வோடு இந்த கல்லூரி அளிக்கிறது. குறிப்பாக பெண்களுக்கும் இதுபோன்ற கல்வியை அளிப்பது பெருமையாக உள்ளது.

    அறிவை கொடுப்பதுடன், நல்ல மதிப்பீடுகளை மாணவர்களிடம் உருவாக்கி சிறந்த ஒழுக்கத்தையும் கற்றுகொடுத்து முன் உதாரணமான கல்வி நிறுவனமாக இந்த கல்லூரி செயல்படுவது பாராட்டுக்குரியது.ஒருவருக்கு படிப்பறிவை மட்டும் கொடுப்பது போதாது. போட்டி மனப்பான்மையை இளைஞர்களிடம் உருவாக்கி புதுமைகைளை புகுத்தி இக் கால கல்வி முறைக்கு ஏற்ப மாணவர்களுக்கு திறமையை வளர்க்க கல்வி நிறுவனங்கள் பாடுபட வேண்டும். மாணவர்களுக்கு தரமான, பரந்து, விரிந்த கல்வியை கொடுக்க வேண்டும் என்பது தான் கல்வி நிறுவனங்களின் தலையாய கடமையாகும். அந்த கடமையை கல்வி நிறுவனங்கள் சிறப்பாக செயல்படுத்த வேண்டும்.

    மாணவர்கள் மத்தியில் சமூகத்திற்கும், தேசத்திற்கும் உழைக்க வேண்டும் என்கிற எண்ணம் வரவேண்டும். அந்த எண்ணத்தை கல்வி நிறுவனங்கள் அவர்களிடம் வளர்க்க உறுதி ஏற்க வேண்டும். மாணவர்கள், இளைஞர்கள் பெறும் கல்விமுறை சமூகத்திற்கும், சமூகம் சார்ந்த வளர்ச்சிக்கும் உதவுவதாக இருக்க வேண்டும். இதில் பேராசிரியர்கள் பங்கு முக்கியமானதாகும். உலகளாவிய போட்டிக்கு ஏற்ப தரம் உயர்ந்த கல்வியை அளிக்க வேண்டும். நீ எந்த நிலைக்கு உயர வேண்டும் என்று ஆசைப்படுகிறாயோ அந்த நிலையை அடைய தெரிந்து கொள்ள வேண்டும்.

    என்னால் முடியும் என்ற நினைப்பில் சிறிய அடி எடுத்து வைத்தாலும் அதன் முயற்சியை செய்ய வேண்டும். சின்சியராககவும், கடினமாகவும், அர்ப்பணிப்பு உணர்வோடு கடுமையாக இளைஞர்கள் உழைக்க வேண்டும். உயர்கல்வியை நல்ல முறையில் பெறுவதற்கு சிந்தித்து செயல்பட வேண்டும் என்கிற குறிக்கோளுடன் செயல்பட வேண்டும். எது அடைய ஆசையோ அதனை குறிக்கோளாக நிலைத்த பொறுமையான, தன்னம்பிக்கையோடு சரியான திட்டமிடலோடு செயல்பாடு அமைந்தால் வெற்றி பெற முடியும்.

    சுய நம்பிக்கை, தன்னம்பிக்கை, உறுதிப்பாடு இருந்தால் எதிலும் வெற்றி காண முடியும். மனதை ஒருநிலைப்படுத்தி அதில் அறிவை செலுத்தி நாட்டை தட்டி எழுப்ப வேண்டும். இதற்காக செயல்திறன் உள்ள, தகுதி உள்ள இளைஞர்களை தான் இந்த நாடு தேடிக் கொண்டிருக்கிறது. நாடு, மாநிலம், கல்லூரி, பெற்றோர், பேராசிரியர்கள் அனைவரும் மாணவர்களிடம் நிறைய எதிர்பார்க்கிறார்கள். அந்த எதிர்பார்ப்பை இளைஞர்கள் நிறைவேற்ற வேண்டும். அப்படிப்பட்ட செயல் திறன் உள்ள இளைஞர்கள் இருந்தால் போதும். உலகம் உங்கள் கையில் வரும்.

    முயற்சி என்பது ஒருவன் செய்ய வேண்டிய காரியத்தை சொல்லாமல் செய்வது தான். இந்தியாவை 21ம் நூற்றாண்டிற்கு அழைத்து செல்லும் மிக முக்கிய பொறுப்பு இளைஞர்கள் கையில் தான் உள்ளது. இவ்வாறு கவர்னர் பேசினார்.

    No comments: