10ம் வகுப்பு தேறாத மாணவர்களை "ஆப்சென்ட்" ஆக்கும் திட்டத்திற்கு தலைமை ஆசிரியர்களுக்கு கிடுக்கிபிடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி தேர்ச்சி விகிதத்தை அதிகரித்து காட்டுவதற்காக வகுப்பில் பின் தங்கிய, தேறாத மாணவர்களை இடைநிறுத்தம் செய்யும் முயற்சியில் பல தலைமை ஆசிரியர்கள் இறங்கியுள்ளனர். இதனால் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது, தேர்ச்சி சதவீதம் காட்டுவதற்காக மாணவர்களின் வாழ்க்கையில் விளையாடும் போக்கு ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருவதுடன், இச்செயல்களால் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுகிறது. இதுதொடர்பாக "தினமலரில்" கடந்த சில நாட்களுக்கு விரிவான முறையில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
இதனையடுத்து பள்ளிக் கல்வி இயக்குனர் (பொறுப்பு) வசுந்தரா தேவி இதுதொடர்பான உத்தரவில் தெரிவித்துள்ளதாவது:
தமிழகத்தில் 2012-13ம் கல்வி ஆண்டில் 10ம் வகுப்பு பொது தேர்வு எழுத உள்ள மாணவர்களை பொது தேர்வு எழுத விடாமல், தேர்ச்சி விகிதத்திற்காக மாணவர்களை இடைநிறுத்தம் (ஆப்சென்ட்) செய்யும் பள்ளி தலைமை ஆசிரியர்கள், செயல்முறை பயிற்சிக்கு வந்தவர்கள் சதவீதம் குறித்த விபரத்தை உடனடியாக அனுப்ப வேண்டும். இத்தகைய செயல்பாடுகள் ஏதும் நிகழாமல் செயல்பட ஒவ்வொரு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் தங்கள் ஆளுகையின் கீழ் செயல்படும் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு உரிய அறிவுரை வழங்கி அதற்கான நகலையும் உடனடியாக அனுப்ப வேண்டும். இவ்வாறு அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment