முன்னணி தனியார் வங்கியான பெடரல் வங்கி மி்ஸ்டு கால் மூலம் பணத்தை பரிமாற்றம் செய்யும் புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது.மிஸ்டு கால் டிரான்ஸ்பர் வசதியை பெற முதலில் பெடரல் வங்கியின் வாடிக்கையாளர் அவர் கணக்கு வைத்திருக்கும் கிளையில் பதிவு செய்ய வேண்டும். பிறகு, கொடுக்கப்படும் மொபைல் எண்ணிற்கு வாடிக்கையாளரின் மொபைல் எண் பற்றியவிபரங்கள், வங்கி அக்கவுண்ட் நம்பரின் கடைசி 3 எண்கள் ஆகியவற்றை எஸ்.எம்.எஸ்.-ஆக அனுப்ப வேண்டும்.
இதன் பிறகு, வாடிக்கையாளரின் கணக்கு இந்த புதிய வசதிக்கு பதிவு செய்யப்பட்டுவிடும். பிறகு, பணத்தை பரிமாற்றம் செய்ய விரும்பும் போது மிஸ்டு கால் கொடுத்து டிரான்ஸ்பர் செய்து கொள்ளலாம். இந்த புதிய வசதிக்கு எவ்வித கட்டணமும் கிடையாது. 24 மணிநேரமும் இந்த வசதியை பெறலாம். எனினும்,இதற்கு தினமும் ரூ.5 ஆயிரம் அல்லது மாதத்திற்கு ரூ.25 ஆயிரம் அளவுக்குபணப்பரிமாற்றம் செய்ய வேண்டியது கட்டாயம் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment