பகுதிநேர ஆசிரியர்கள் நியமன ஆணை உரிமை கோர முடியாத வகையில் உள்ளதை உணர்ந்து பணிபுரியுங்கள். அரசாணையில் உள்ளபடி அருகிலுள்ள பள்ளிகளில் பணி நியமனம், மாதத்தின் முதல் தேதியில் ECS முறையில் ஊதியம், ஒருவர் ஒன்றுக்கும் மேற்பட்ட பள்ளிகளில் கூடுதலாக பணிபுரியும் வாய்ப்பு போன்றவைகளே இந்த நான்காண்டுகளாக கோரிக்கை மனுக்கள் உள்ளிட்ட பல்வேறு வழிகளில் தொடர்ந்து கேட்டும் இதுவரை பெறமுடியாமல் உள்ளோம் என்பதை உணர்ந்து பணிபுரியுங்கள்.
திட்டத்தின் அடிப்படையிலான வேலையில் தொடர்கிறோம் என்பதை மீண்டும் ஒருமுறை நினைவில் வைத்து பணிபுரியுங்கள். முழுநேரப்பணி, காலமுறை ஊதியம், பணி வரன்முறை, பணி நிரந்தரம் என்பதெல்லாம் அரசின் கொள்கை முடிவுக்குட்பட்டது. ஆதலால் அரசுப்பள்ளிகளில் பணிபுரியும் அரியதொரு வாய்ப்பினை வழங்கிய மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்களுக்கு நன்றி சொல்லி பணியினை தொடருங்கள். வேலை ஒன்று தான் நம் அனைவருக்கும் முக்கியம். எனவே தேவையில்லாமல் அரசை எதிர்க்கும் எந்தவொரு தர்மசங்கடமான சூழலையும் ஒருபோதும் யாரும் ஆதரிக்காதீர்கள். நாம் ஒவ்வொருவரும் நமக்கான வேலையின் எதிர்காலம் சிறக்க மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்களுக்கு கோரிக்கைகளை மனுவாக வேண்டுவதே நமக்கு பிரச்சனை இல்லாத தீர்வு. அம்மாவை வணங்குவோம்!! - அரசை ஆதரிப்போம்!!!!!அனைவரின் சார்பாகவும் -
கடலூர் செந்தில் (எ) செந்தில்குமார் (9487257203 & senthil11455@gmail.com).
No comments:
Post a Comment