Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Thursday, January 28, 2016

    புதிய அரசாணை அரசு வெளியிட வேண்டுகோள்!!! அரசின் திட்டத்தின் அடிப்படையிலான வேலையில் சிக்கித்தவிக்கும் 15000க்கும் மேற்பட்ட பகுதிநேர ஆசிரியர்களின் வாழ்வாதாராம் கேள்விக்குறி?

    மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்களால் ஆணையிடப்பட்டு நூறாண்டு பேசும் ஓராண்டுச் சாதனைகளில் ஒன்றாக 16549 பகுதிநேர ஆசிரியர்கள் பணியிடங்கள் உருவாக்கப்பட்டு நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டன. பள்ளிக்கல்வித்துறை அனைவருக்கும் கல்வி இயக்க அரசாணைப்படி அரசுப்பள்ளிகளில் இடைநிலை வகுப்புகளான 6 முதல் 8 வரையிலான வகுப்புமாணவர்களுக்கு 100 எண்ணிக்கைக்கு மேல் உள்ள பள்ளிகளுக்கு வாரம் 3அரைநாட்கள் என்று மாதத்தில் 12 அரைநாட்கள் பணிபுரிய ஓவியம், உடற்கல்விமற்றும் தொழிற்கல்வி பாடப்பிரிவுகளான கணினி, இசை, தையல், தோட்டக்கலை,கட்டிடக்கலை, வாழ்வியல் திறன் போன்ற பாடப்பிரிவுகளுக்கு பாடங்களை நடத்திட2012ம் ஆண்டு மார்ச் மாதத்தில் ரூ.5000 தொகுப்பூதியத்தில் நியமித்தது.


    (School Education - Sarva Shiksha Abhiyan - Filling up of 16549
    Part-time instructors to Government schools for Standard VI to VIII-
    Procedure of selection – Orders issued. School Education(C2)
    Department G.O.(MS) No.177 Dated:11.11.2011 ORDER:- The Principal
    Secretary/ State Project Director, Sarva Shiksha Abhiyan has stated
    that in the Project Approval Board held for approving the
    supplementary Annual Work Plan & Budget 2010-11 in the context of
    Right of Children to Free and Compulsory Education (RTE) provisions,
    16549 Part-time instructors have been sanctioned for Tamil Nadu. Of
    these posts,5253 Part-time instructor posts for Art Education, 5392
    posts for Health and Physical Education and 5904 posts for Work
    Education have been sanctioned for Standard VI to VIII in Government
    schools where admission of children is more than one hundred.) தொடர்
    கோரிக்கைகளை தொடர்ந்து பணி நிமித்தம் சார்பாக அவ்வப்போது அறிவுரைகளை
    வழங்கி புதிய அரசாணை 186ன்படி பணிபுரியும் 15169 பகுதிநேர
    ஆசிரியர்களுக்கு தொகுப்பூதியமும் ரூ.2000 உயர்த்தப்பட்டு ஏப்ரல் 2014
    முதல் ரூ.7000ஆக வழங்கப்படுகிறது. (School Education(SSA) Department
    G.O.(MS) No.186 Dated:18.11.2014 Amendment (2) The Salary of Part Time
    Instructors is increased from Rs. 5000/- to Rs. 7000/- from April 2014
    onwards) அரசாணையில் ஆணையிடப்பட்டுள்ளபடி ஒரு ஆசிரியர் ஒன்றிற்கு
    மேற்பட்ட பள்ளிகளில் பணியாற்றும் வாய்ப்பு, ECS முறையில் மாதத்தின் முதல்
    தேதியில் ஊதியம் போன்றவற்றையே இதுவரை கேட்டும் கிடைக்காததால் எங்களின்
    வாழ்வாதாராம்-எதிர்காலம் எல்லாமே அரசின் திட்டத்தின் அடிப்படையிலான
    வேலையால் கேள்விக்குறியாகிவருகிறது!!!!!. (The services of the selected
    Part-Time Instructors may be utilized for maximum 4 schools (nearby)
    where there is short of selected candidates available. In this case,
    the Part-time Instructors may be paid for all the 4 schools and in all
    the 4 schools they should be asked to serve for 3 half days.), (Head
    Masters of the Schools concerned are to draw the Salary and to pay the
    salary on the first working days of every month)
    15000க்கும் மேற்பட்ட பகுதிநேர ஆசிரியர்களின் தொடர் கோரிக்கைகள்
    1) நான்கு ஆண்டுகளாக பணிபுரிந்துவரும் 15000க்கும் மேற்பட்ட பகுதிநேர
    ஆசிரியர்களை புதிய அரசாணை வெளியிட்டு பணிநிரந்தர உத்தரவு வழங்கிட
    வேண்டும்.
    2) தமிழகம் முழுவதும் பணியில் இருக்கும்போது மரணமடைந்த பகுதிநேர
    ஆசிரியர்களின் குடும்பங்களை அரசு தத்து எடுக்க வேண்டும்.
    3) பணிநிரவலில் இப்போதும் 100க்கும் குறைவாக மாணவர்கள் எண்ணிக்கை உள்ள
    பள்ளிகளில் பணிமாறுதல் செய்யப்பட்டுள்ளது. அதன்படி பணிநிரவல்படி
    தொலைதூரம் சென்று பணி செய்பவர்களுக்கு அருகிலுள்ள பள்ளிகளில் வாய்ப்புகள்
    வழங்க வேண்டும்.
    வேலை வாய்ப்பு திண்டாத்தில் நாடு தத்தளிப்பதால் கிடைத்த வேலையை உறுதி
    செய்து கொள்ள மன்றாடும் எங்களுக்கு ஆதரவாக அனைவரும் மாண்புமிகு தமிழக
    முதல்வர் அம்மா அவர்களுக்கு பரிந்துரைத்திட, உரிமையுடனும் வேண்டுகிறேன்.
    அனைவருக்காகவும் கடலூர் செந்தில் (எ) சி.செந்தில்குமார், (9487257203),
    கடலூர் மாவட்டம்.

    No comments: