மாவட்ட கலெக்டர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகளுக்கான, தேர்தல் ஆலோசனை மற்றும் பயிற்சி வகுப்பு, சென்னையில் இன்று நடைபெறுகிறது.
தமிழக சட்டசபைக்கு விரைவில் தேர்தல் வர உள்ளதால், தேர்தலுக்கான ஆயத்த பணிகளை, தேர்தல் கமிஷன் செய்து வருகிறது. மாவட்ட கலெக்டர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகள், மாவட்ட வருவாய் அலுவலர்களுடனான ஆலோசனை மற்றும் பயிற்சி வகுப்பு, தலா, எட்டு மாவட்டங்கள் வீதம், நான்கு கட்டமாக நடத்தப்படுகிறது.
சென்னை, அண்ணா மேலாண்மை கூட்டுறவு பயிற்சி நிலையத்தில், இன்று நடைபெற உள்ள பயிற்சி வகுப்பில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலுார், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலுார், கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் எஸ்.பி.,க்கள், மாவட்ட வருவாய் அலுவலர்கள், சென்னை மாநகராட்சி கமிஷனர் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர்.
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி, இணை தேர்தல் அதிகாரி சிவஞானம் ஆகியோர், தேர்தல் பணி குறித்து பயிற்சி அளிக்க உள்ளனர்.
No comments:
Post a Comment