சொத்து அமைந்துள்ள பகுதிக்கு செல்லாமல், எந்த சார்-பதிவாளர் அலுவலகத்தில் இருந்தும், பத்திரப்பதிவு செய்யும், புதிய வசதிக்கான சாத்தியக் கூறுகளை பதிவுத்துறை ஆராய்ந்து வருகிறது. தமிழகம் முழுவதும், சொத்து விற்பனை தொடர்பான பத்திரங்களை பதிவு செய்ய, 578 சார்-பதிவாளர் அலுவலகங்கள் உள்ளன. குறைந்துள்ளது.
இங்கு, சொத்து விற்பனை, குடும்பத்துக்குள் நடக்கும் பரிமாற்றம், திருமண பதிவு, நிறுவனங்கள் பதிவு என, ஆண்டுக்கு, 32 லட்சம் ஆவணங்கள் பதிவு செய்யப்படுகின்றன. சில ஆண்டுகளாக, இந்த எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது.
தற்போது, பொது அதிகார ஆவணங்களை மட்டுமே, பொதுமக்கள் அவரவர் இருப்பிடத்துக்கு அருகில் உள்ள சார்-பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யும் வசதி உள்ளது. விற்பனை ஆவணங்களை, சொத்து அமைந்துள்ள பகுதிக்கான, சார்-பதிவாளர் அலுவலகத்தில் மட்டுமே பதிவு செய்ய வேண்டும்.
சொத்து விற்பனை ஆவணங்களின் உண்மை தன்மையை சரி பார்ப்பதில் ஏற்படும் நடைமுறை சிக்கல் காரணமாகவே, இந்த முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
மாற்றம்:பதிவுத் துறையில், குறிப்பிட்ட சில பணிகளில், தற்போது தனியார் நிறுவனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
அதனால், சார்-பதிவாளர் அலுவலகத்தில் பதிவாகும் ஆவண விவரங்களை, மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் இருந்தும், தலைமையகத்தில் இருந்தும் கண்காணிக்கலாம். இதன் தொடர்ச்சியாக, எந்த அலுவலகத்தில் இருந்தும், சொத்து விற்பனையை பதிவு செய்து கொள்ளும் வசதியை ஏற்படுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
சாத்தியமாவது எப்போது?
பதிவுத்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:பதிவுத்துறையில், தகவல் தொகுப்புகள் கணினிமயமாக்கப்பட்டு உள்ளன. இதனால், எந்த ஊரில் உள்ள சொத்து தொடர்பான வில்லங்க விவரத்தையும், பொதுமக்கள் இருந்த இடத்தில் இருந்தே, இணையதளம் வாயிலாக அறிய முடியும். அத்துடன், 'ஸ்கேன்' செய்யப்பட்ட ஆவணங் களின் தொகுப்பை, எந்த சார்-பதிவாளர் அலுவலகத்தில் இருந்தும், பார்க்கும் வசதி விரைவில் வர உள்ளது.
இதனால், தமிழகத்தின் எந்த பகுதியில் இருக்கும் சொத்து விற்பனையையும், எந்த சார்-பதிவாளர் அலுவலகத்திலும், பதிவு செய்து கொள்ளும் வசதியையும் அளிக்க வாய்ப்பு உள்ளது.
இதற்கான, வழிமுறைகள், சட்ட பாதுகாப்பு குறித்து ஆலோசித்து வருகிறோம்; விரைவில், இது தொடர்பாக முடிவு எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
* தமிழகத்தில், 578 சார் - பதிவாளர் அலுவலகங்கள் உள்ளன
* ஆண்டுக்கு 32 லட்சம் ஆவணங்கள் பதிவாகின்றன
* சொத்து வில்லங்க விவரத்தை, இருந்த இடத்தில் இருந்தே பார்க்கலாம்.
No comments:
Post a Comment