கவுரவ பேராசிரியர்கள் பணி நிரந்தரமில்லை' காலியாக உள்ள கல்லுாரி ஆசிரியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்,'' என, உயர்கல்வித் துறை அமைச்சர் பழனியப்பன் கூறினார். சட்டசபையில் நேற்று, கேள்வி நேரத்தின் போது நடந்த விவாதம்:
மார்க்சிஸ்ட் - பாலபாரதி: அரசு கல்லுாரிகளில், புதிதாக துவங்கப்பட்ட கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களுக்கு போதிய ஆசிரியர் இல்லை. கவுரவ ஆசிரியர்கள், பல ஆண்டுகளாக பணியில் உள்ளனர். அவர்களின் சம்பளத்தை உயர்த்துவதோடு, பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
அமைச்சர் பழனியப்பன்: காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது; பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்.
கவுரவ பேராசிரியர்களுக்கு, 6,000 ரூபாயிலிருந்து, 10 ஆயிரம் ரூபாயாக ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது. இவர்களை நேரடியாக பணி நிரந்தரம் செய்ய முடியாது; ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமே நிரந்தர பணியில் சேர்க்க முடியும்.
No comments:
Post a Comment