பல்வேறு திட்டங்கள் மற்றும் நடவடிக்கைகளின் காரணமாக பள்ளிக்கல்வியிலும் உயர்கல்வியிலும் தமிழகம் முதலிடத்தை பெற்றிருப்பதாக தமிழக சட்டபேரவையில் முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். தமிழக சட்டபேரவையில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் முதல்வர் ஜெயலலிதா அளித்த பதிலுரை.
இந்த அரசு ஏழை, எளியவர்களுக்கான அரசு. இல்லாதோரை கை தூக்கிவிடும் அரசு. குறை உள்ளவர்களை நிறைவாக்கும் அரசு. ஒடுக்கப்பட்ட\மக்களின் நலன்களை காக்கும் அரசு. எனவே தான், வளர்ச்சி என்பதை வெறும்பொருளாதார வளர்ச்சியாக நான் பார்ப்பதில்லை. மாநிலத்தின் மொத்தஉற்பத்தியின் வளர்ச்சி, அதாவது மாத்திரம் ஆரோக்கியமான வளர்ச்சிஅல்ல. நாட்டு முன்னேற்றத்திற்கு மொத்த உற்பத்தி வளர்ச்சி, பயன்அளிக்கலாம். ஆனால், வளர்ச்சி என்பது ஒவ்வொருவரையும் சென்றடையவேண்டும். அடித்தட்டில்உள்ள மக்கள் பொருளாதார வளர்ச்சியின் பயனைப்பெற வேண்டுமென்றால் அவர்கள் கல்வியிலும், உடல் நலத்திலும் சிறந்துவிளங்க வேண்டுமென்பது இன்றியமையாததாகும்.
கல்வி மற்றும் மக்களின் உடல்நலம் ஆகியவற்றில் ஏற்படும் வளர்ச்சி சமுதாய வளர்ச்சிக் குறியீட்டைநிர்ணயிக்கும். எங்கு சமுதாய குறியீடுகள் விரைந்து வளர்ச்சி அடைகின்றனவோ அங்கு தான் ஏற்றத்தாழ்வற்ற நிலை ஏற்படும். அப்போதுதான் எல்லோரும் எல்லாமும் பெற முடியும். எல்லாரும் ஓர் நிறை எல்லாரும் ஒர் நிலை‛ என்ற குறிக்கோளை அப்போது தான் எய்த இயலும். எனவே தான் கல்விவளர்ச்சிக்கு எனது தலைமையிலான அரசு மிகுந்த முக்கியத்துவம் அளித்துவருகிறது.
அனைவருக்கும் தரமான கல்வி வழங்கிட வேண்டுமெனில் பள்ளிகளின்உட்கட்டமைப்பு மேம்படுத்தப்பட வேண்டும். போதிய ஆசிரியர்கள் நியமனம்செய்யப்பட வேண்டும். மாணவ மாணவியரின் இடைநிற்றலை குறைத்திடவேண்டும். மாணாக்கர்களின் கற்கும் திறன் உயர்த்தப்பட வேண்டும்.இவையெல்லாம் நிறைவேற்றிட வேண்டும் என்ற காரணத்தால் தான், கடந்த5 ஆண்டுகளில் பள்ளிக் கல்வித் துறைக்கென 84,568 கோடி ரூபாய் எனதுஅரசால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
முந்தைய மைனாரிட்டி திமுக ஆட்சியின் 5 ஆண்டு காலத்தில் பள்ளிக் கல்வித் துறைக்கு ஒதுக்கப்பட்ட தொகை39,058 கோடி ரூபாய் தான். அதாவது இந்த 5 ஆண்டுகளில் எனது ஆட்சியில்கடந்த மைனாரிட்டி திமுக ஆட்சியில் ஒதுக்கியதை விட 116 சதவீத உயர் அளவுஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எனவே தான் தொடக்க கல்வி, நடுநிலைக் கல்வி,இடைநிலைக் கல்வி மற்றும் மேல்நிலைக் கல்வி என அனைத்து நிலைகளிலும்சேர்க்கை விகிதம் கணிசமாக உயர்ந்துள்ளது; இடைநிற்றல் விகிதம் கணிசமாககுறைந்துள்ளது.
இவற்றிற்குக் காரணம் இந்த அரசு மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகள் தான். கடந்த 56 மாதங்களில் 26.96 லட்சம் பள்ளி மாணவ மாணவியருக்கு 4,723 கோடி ரூபாய் செலவில், விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளன. உயர்நிலை மற்றும் மேல்நிலைக் கல்வியை இடைநிற்றல்இன்றித் தொடர சிறப்பு ஊக்கத் தொகை அளிக்கும் திட்டம் எனது அரசால்அறிமுகம் செய்யப்பட்டு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 10 முதல்12 ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியருக்கு மொத்தம்5,000 ரூபாய் கல்வி ஊக்கத் தொகையாக அவர்களின் பெயரில் முதலீடு செய்யப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ், ஐந்தாண்டுகளில் 1 கோடியே13 லட்சத்து 76 ஆயிரம் மாணவ, மாணவியர் 1,810 கோடி ரூபாய் ஊக்கத்தொகையாகப் பெற்று பயனடைந்துள்ளனர்.2010-2011-ஆம் ஆண்டு ஒரு இணைச் சீருடை வழங்கப்பட்டு வந்தநிலையில், தற்போது பள்ளி மாணவ மாணவியருக்கு 4 இணைச் சீருடைவழங்கப்பட்டு வருகின்றன. கடந்த 5 ஆண்டுகளில் இதற்கென 1,698 கோடிரூபாய் செலவிடப்பட்டுள்ளது. 1 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ,மாணவியருக்கு விலையில்லா பாட நூல்கள் வழங்கப்படுகின்றன.
2012-2013-ஆம் ஆண்டு முதல் விலையில்லா நோட்டுப் புத்தகங்கள் வழங்கும்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு அவை வழங்கப்பட்டு வருகின்றன. விலையில்லாபுத்தகப் பை, கணித உபகரணப் பெட்டிகள், கிரையான்ஸ், நில வரைபட புத்தகம்உள்ளிட்ட கல்வி உபகரணங்கள், வழங்கும் திட்டம் 2012-13-ஆம் ஆண்டில்அறிமுகப்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. அது போலவே ஓர் இணைக் காலணிகள் வழங்கும் திட்டம் 2012-2013-ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இவையன்றி, விலையில்லா மிதிவண்டிகள்,கட்டணமில்லாப் பேருந்து பயணச் சலுகை, சத்தான மதிய உணவு ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன.
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் கல்விக்கு அதிக செலவிலானதனியார் பள்ளிகளை நாடுவதற்கான முக்கிய காரணம் ஆங்கில வழி போதனைஎன்பதால், அரசுப் பள்ளிகளிலேயே ஆங்கில வழிக் கல்வி வழங்கும் பொருட்டுதேவைக்கேற்ப 12,092 ஆங்கில வழிப் பிரிவுகள், ஏற்படுத்தப்பட்டுள்ளன. 2.64 லட்சம் மாணாக்கர்கள் இதில் பயின்று வருகின்றனர். கடந்த 5 ஆண்டுகளில் 221 தொடக்கப் பள்ளிகள் புதிதாகதொடங்கப்பட்டுள்ளன; 112 தொடக்கப் பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாகவும், 810 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும், 402 உயர்நிலைப்பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்பட்டுள்ளன.
தேவைக்கேற்ப பள்ளிகளை அமைப்பதோடு, பள்ளிகளுக்கு தேவையான உள்கட்டமைப்புகளை வழங்கிடவும் எனது அரசு முன்னுரிமை அளிக்கிறது. கூடுதல் வகுப்பறைகள், அறிவியல் ஆய்வகங்கள், குடிநீர் வசதிகள், சுற்றுச் சுவர்,மாற்றுத் திறனாளிகளுக்கென சாய்வு தளங்கள் ஆண்/ பெண் குழந்தைகளுக்கென தனித்தனியே கழிவறைகள் போன்ற உட்கட்டமைப்புவசதிகள் 4,166 கோடி ரூபாய் செலவில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. சிறந்த கல்வி வழங்கப்பட ஆசிரியர்கள் காலத்தே நியமிக்கப்பட வேண்டும். கடந்த 5 ஆண்டுகளில் 72,843 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 14,711 ஆசிரியர் அல்லா பணியிடங்களும் நிரப்பப்பட்டுள்ளன. பள்ளிக் கல்வியில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு முன்னோடிதிட்டங்களின், காரணமாகத் தான் தமிழ்நாடு பள்ளிக் கல்வியில் ஒரு சிறந்தமாநிலமாக திகழ்கிறது.
உயர்கல்வியைப் பொறுத்தவரை, தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது என்பதை நான் முதலில் பெருமையுடன் பதிவு செய்ய விரும்புகிறேன். 2011-ஆம் ஆண்டு உயர்கல்வியில் மொத்த மாணவர் சேர்க்கை விகிதம், தமிழ்நாட்டில் 18 சதவீதம் என்ற அளவில் இருந்தது. அப்போது இந்திய அளவில் இந்த சதவீதம் 15 என இருந்தது.தற்போது இந்திய அளவில் மொத்த மாணவர் சேர்க்கை 23.6 சதவீதம் என்றுஉள்ளது.
ஆனால், தமிழ்நாட்டில் இது 44.8 என்ற சதவீதத்தை அடைந்து,இந்தியாவிலேயே தமிழகம் முதன்மை மாநிலமாக விளங்குகிறது. அதாவது,இந்திய அளவில் கடந்த 5 ஆண்டுகளில் 8.6 சதவீத அளவிற்கே உயர் கல்விமாணவர் சேர்க்கை உயர்ந்துள்ள நிலையில், தமிழ்நாட்டில் இது26.8 சதவீதம் உயர்ந்துள்ளது. இத்தகைய மகத்தான வளர்ச்சிக்கு காரணம்எனது தலைமையிலான அரசு நிறைவேற்றிய பல்வேறு திட்டங்கள் தான்என்பதை, நான் இங்கே உறுதியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
கடந்த மைனாரிட்டி திமுக ஆட்சியிலும், தற்போதும் உயர்கல்வி தொடர்பான சில புள்ளி விவரங்களை தெரிந்து கொண்டால் தற்போது நான்தெரிவித்த வியத்தகு சாதனை எப்படி சாத்தியமாயிற்று என்று புலப்படும். கடந்த 2006 முதல் 2011 வரையிலான ஆண்டுகளில், கடந்தமைனாரிட்டி திமுக ஆட்சியின் போது, உயர் கல்விக்கு செலவிடப்பட்ட தொகை6,142 கோடி ரூபாய். கடந்த 5 ஆண்டுகளில்அதிமுக ஆட்சியில், செலவிடப்பட்ட தொகை 14,609 கோடி ரூபாய். இதை கவனத்தில் கொள்ளவேண்டும். குறித்துக் கொள்ள வேண்டும்.
ஐந்து ஆண்டுகால மைனாரிட்டி திமுக ஆட்சியில் ஒட்டுமொத்தமாக கல்விக்காக செலவிடப்பட்டத் தொகை 6142 கோடிரூபாய். ஆனால் கடந்த 5 ஆண்டுகளில் அஇஅதிமுக ஆட்சியில் செலவிடப்பட்டதொகை 14,609 கோடி ரூபாய். முந்தைய திமுக ஆட்சியில் துவங்கப்பட்ட புதியகலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் 10. தற்போது எனது ஆட்சியில் புதியதாக துவங்கப்பட்டுள்ள கல்லூரிகள் 39. முந்தைய திமுக ஆட்சியில் புதியதாக துவங்கப்பட்ட பாடப் பிரிவுகள் 26. தற்போது அதிமுக ஆட்சியில், புதியதாக துவங்கப்பட்டுள்ள பாடப் பிரிவுகள் 959. கடந்த திமுக ஆட்சியில்கட்டடங்களுக்காக ஒதுக்கப்பட்ட தொகை வெறும் 7 கோடி ரூபாய்.
தற்போதுஅதிமுக ஆட்சியில் ஒதுக்கப்பட்டுள்ள தொகை 220 கோடி ரூபாய்; கடந்த 5ஆண்டுகளில் கணக்கிட்டுப் பார்த்தீர்களானால் திமுக ஆட்சியின் போதுசெலவிடப்பட்டது 7 கோடி ரூபாய். ஆனால் அதிமுகஆட்சியில் செலவிடப்பட்டத் தொகை 220 கோடி ரூபாய். அன்றைய திமுகஆட்சியில் 20,626 பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, ஆதிதிராவிடமற்றும் பழங்குடியின மாணாக்கர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டது. தற்போதுஅதிமுக ஆட்சியில் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டமாணாக்கர்களின் எண்ணிக்கை 43,586. அன்றைய திமுக ஆட்சியில் எந்த ஒருபுதிய அரசு பொறியியல் கல்லூரியும் நிறுவப்படவில்லை.
ஆனால் தற்போது, அதிமுக ஆட்சியில் 4 புதிய அரசுபொறியியல் கல்லூரிகள், துவங்கப்பட்டுள்ளன. முந்தைய திமுக ஆட்சியில்78,045 பொறியியல் பயிலும் முதல் தலைமுறை மாணாக்கர்களுக்கு மட்டுமேபயிற்சிக் கட்டண விலக்கு வழங்கப்பட்டது. தற்போது எனது அரசால்பயனடைந்த மாணாக்கர்களின் எண்ணிக்கை 2,84,609. அப்போது திமுகஆட்சியில் இத்திட்டத்திற்காக செலவிடப்பட்ட தொகை 149 கோடி ரூபாய். தற்போதுஅதிமுக ஆட்சியில் செலவிடப்பட்ட தொகை 2,268 கோடி ரூபாய்.முந்தைய திமுக ஆட்சியில் நிறுவப்பட்ட அரசு பலவகை தொழில் நுட்பக்கல்லூரிகள் 8. தற்போது அஇஅதிமுக ஆட்சியில் நிறுவப்பட்டுள்ளவை 11.அன்றைய திமுக அரசால், புதிய பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளுக்குஒப்பளிக்கப்பட்ட பணியிடங்கள் 568. தற்போது எனது அரசால் ஒப்பளிக்கப்பட்டபணியிடங்கள் 1,153. இவ்வாறு அவர் பேசினார்.
No comments:
Post a Comment