ஜனவரி 30,31 பள்ளி விடுமுறை நாட்களாகும். அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறையே. இந்த சூழ்நிலையில் ஜாக்டோ மாநில அமைப்பு எடுத்துள்ள முடிவினை செயல்படுத்தும் வகையில் சடங்கு போன்று இந்த மறியல் போராட்டத்தை நடத்துகின்றோம். கலந்துகொள்பவர்கள் மீது சட்ட ரீதியாகவும் விதிகளின்படியும் ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதற்கு வாய்ப்பே இல்லை.
விடுமுறை நாட்களில் நடைபெறும் போராட்டங்களுக்கு ஊதியப் பிடித்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை.கல்வித் துறையின் மிரட்டலுக்கு அச்சப்பட தேவையில்லை.
31.01.2016 ஞாயிற்றுக் கிழமை மறியல் போராட்டத்தில் தனியார் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் கலந்து கொள்ள இது ஒரு வாய்ப்பாக கருதி அன்புடன் அழைக்கின்றோம்.
01.02.2016 திங்கள் கிழமை ஊராட்சி ஒன்றிய பள்ளி ஆசிரியர்கள்,அனைத்து வகை அரசு பள்ளி ஆசிரியர்கள் அனைவருமே மறியல் போராட்டத்தில் கலந்து கொண்டு ஒட்டுமொத்த ஆசிரியர் சமுதாயத்தின் சக்தியினையும் அரசுக்கு வெளிக்காட்டுகின்ற வகையில் மறியல் போராட்டத்தில் பங்கேற்போம்.ஊதிய பிடித்தம் என்னும் மிரட்டலுக்கு அஞ்ச தேவையில்லை. கோரிக்கைகள் ஒன்றே நம் கண் முன்னால் நிற்கட்டும்.
சிறையில் இருந்த 40 நாட்களுக்குக்கூட ஊதிய இழப்பு எதுவும் இல்லாமல் பாதுகாத்த அமைப்புதான் ஜாக்டோ,ஜாக்டீ அமைப்புகளாகும்.1 3/4 லட்சம் பேரை நிரந்தர பணி நீக்கம் செய்த போதும் மீண்டும் பணி அமர்த்திய அமைப்புதான் இந்த ஜாக்டோ அமைப்பாகும். 7 1/2 மாதங்கள் நிரந்தர பணி நீக்கத்தில் இருந்தவர்களையும் மீண்டும் பணியில் அமர்த்தி பாதுகாத்த அமைப்புதான் இந்த ஜாக்டோ அமைப்பாகும். சக்திமிக்க ஜாக்டோஅமைப்பு. கோரிக்கை மறியல் போரில் பங்கேற்போம் வாரீர் வாரீர். ஒன்றியப் பள்ளிகளின் சாவிகளை உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களிடம் ஒப்படைத்துவிடுங்கள்.
No comments:
Post a Comment