ஆசிரியர் சங்கங்களின் கூட்டியக்கக் கூழு (ஜாக்டோ) சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட ஆசிரியர்கள் 1,154 பேரை போலீஸார் கைது செய்தனர். ஜாக்டோ அமைப்பு சார்பில் கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டு வருகின்றன. ஆறாவது ஊதியக் குழு பரிந்துரையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும், தன் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை நீக்கிவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், ஆசிரியர் தகுதித் தேர்வை நீக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோ அமைப்பினர் திருவள்ளூர் -திருத்தணி தேசிய நெடுஞ்சாலையில் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஜாக்டோ அமைப்பின் உயர்மட்டக் குழு உறுப்பினர்கள் இரா.தாஸ், எத்திராஜுலு, ஜவகர், தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்க மாவட்டத் தலைவர் ஆர்.கே.சாமி, தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி நிர்வாகிகள் மு.ஐயப்பன், சு.கதிரவன், க.உதயகுமார் உள்ளிட்ட பல்வேறு சங்கங்களைச் சேர்ந்த 1,154 ஆசிரியர்களை போலீஸார் கைது செய்தனர்.
தொடர்ந்து 3 தினங்கள் மறியல் போராட்டம் நடைபெறும் என ஜாக்டோ அமைப்பினர் கூறினர்.
தொடர்ந்து 3 தினங்கள் மறியல் போராட்டம் நடைபெறும் என ஜாக்டோ அமைப்பினர் கூறினர்.
No comments:
Post a Comment