பொது இடங்களில் காணப்படும் ஆதரவற்ற குழந்தைகளை குறித்து 1098 என்ற எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் கு.கோவிந்தராஜ் கூறியுள்ளார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: உச்ச நீதி மன்ற வழிகாட்டுதலின் படி அனைத்து மாநிலங்களிலும் காணாமல் போன மற்றும் ஆதரவின்றி சுற்றித்திரியும் குழந்தைகளை கண்டுபிடிக்க “புன்னகையை தேடி” என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டது.
01.01.2015 முதல் 31.01.2015 வரை தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் குழந்தைகள் நலனோடு தொடர்புடையதுறைகள் மற்றும் காவல்துறை அலுவலர்களை உள்ளடக்கிய ஐந்து குழுக்கள் தொடங்கப்பட்டு காணாமல் போன குழந்தைகள் தேடப்பட்டனர் அவ்வகையில் இந்தியா முழுவதும் சுமார் 3,000 குழந்தைகள் பேருந்து நிலையம், கோயில்கள், சுற்றுலா தலங்கள், சாலையோரங்கள் மற்றும் ஆதரவற்றோர் இல்லங்களில்; கண்டுபிடிக்கப்பட்டனர்.அதில் பெரும்பாலான குழந்தைகள் பெற்றோர் வசம் ஒப்படைக்கப்பட்டனர். மற்றவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டு;ள்ளது.இந்த “புன்னகையை தேடி” (Operation Smile)திட்டம் வெற்றிகரமாக செயல்பட்டதை தொடர்ந்து மத்திய அரசின் உள் துறை அமைச்சகம் 01.07.2015 முதல் 31.07.2015 வரை காணாமல் போன மற்றும் ஆதரவின்றி சுற்றித்திரியும் குழந்தைகளை தேடும் பணியாக “புன்னகையை தேடி” (Operation Muskkan) திட்டம் மீண்டும் செயல்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் போது சென்னையில் 122 குழந்தைகள் கண்டறியப்பட்டு அவர்களின் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர்.அதனைத் தொடர்ந்து, “புன்னகையை தேடி” (Oerations Smile II) திட்டமானது 01.01.2016 அன்று முதல் மீண்டும் செயல்படுத்தப்பட்டுள்ளது.
இத்திட்டத்திற்காக தமிழகத்தில் காவல் துறை மற்றும் அரசு சாரா அலுவலர்களை கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டு, கோயில்கள், பேருந்து நிலையங்கள், சுற்றுலா தலங்கள், இரயில் நிலையங்கள் மற்றும் மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் ஆதரவின்றி திரியும் குழந்தைகள் இருப்பின் அவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.ஆதரவற்ற மற்றும் காணாமல் போன குழந்தைகளின் வாழ்வு ஒளிமயமானதாக அமைய பொதுமக்கள் தங்கள் பகுதியிலோ அல்லது பொது இடங்களிலோ ஆதரவற்ற குழந்தைகளை கண்டால் உடனடியாக 1098 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை அழைத்து தகவல் கொடுக்கலாம் அல்லது அருகே உள்ள காவல் நிலையத்தில் தகவல்தெரிவிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் கு.கோவிந்தராஜ் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment